நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

விடை தேடும் வினாக்கள்


படைத்தவனின் பயம் விட்டுப்போனதாலா
பாவங்கள் பெருகிக்கொண்டே போகிறது

பொல்லாத காரியங்கள் பெருகப் பெருகவா
பொன்னான பூமியே பூகம்பத்திற்குள்ளாகிறது

நாகரீக மோகம் நீண்டுகொண்டே போவதாலா
அரைகுறை நிர்வாணங்கள் அரங்கேற்றப்படுகிறது


மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா
மனிதம் காக்கவேண்டிய மதங்களெல்லாம்
மனிதர்களைக்கொல்கிறது

சுயநலங்கள் பெருகிப்போனதாலா
சொந்த பந்தங்கள்கூட பாரமாகிப்போகிறது



வெக்கம் விட்டுபோனதாலா
வைரமாகக்கூடிய மங்கைகூட
விலைமகளாகிப்போகிறது

தன்னம்பிக்கை குறைந்துபோனதாலா
தற்கொலைகள் தலைதூக்கி நிற்கிறது

மனஇச்சைகளுக்கு மதிப்புகொடுப்பதாலா
குடிகெடுக்கும் மதுவுக்கும்
மனம் இடங்கொடுக்கிறது

வஞ்சனைகுணம் பெருகிப்போனதாலா
பிறரை வதைக்கும் வட்டிக்கு
வட்டிபோட்டு வாங்குகிறது

அறிவு அளவுக்குமேல் வளர்ந்தாலா
அழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டே போகிறது

இன்னும்

வினாக்கள் விளைந்துகொண்டேதான்
இருக்கிறது        இருந்தாலும்
இதற்காவது விடை கிடைக்குமா என்ற
ஆதங்கத்துடன் விடை பெறுகிறேன்..


அமீரகத்தில் வெளியாகும்  மாதஇதழான தமிழ்தேர் இதழில் வெளியாகியுள்ள
”வினாவும் விடையும்” என்ற இம்மாத தலைப்பிற்கான என்கவிதை. 


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

19 கருத்துகள்:

  1. சமூகத்தின் மீதான பார்வையின் பால் படைத்திருக்கும் மன்னிக்கணும் வெடித்திருக்கும் இந்த கவிதை பல மனங்களில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துமானால் அது ஒரு அழகிய தலைமுறைக்கான ஒரு திறவுகோல்.உங்கள் வினாக்கள் அனைத்துமே ஒரு நிஜ கலைஞனின் பரிமாணங்கள்.தொடரட்டும் உங்கள் கவிசேவை.

    பதிலளிநீக்கு
  2. சமுதாயக் கேடு அத்தனையும் வினாவில் கேட்டது அருமை.

    பதிலளிநீக்கு
  3. நல்ல சிந்தனைகளும் பொதுநோக்கும் பொதுநலமும் அழகான வரிகளில். அருமை மலிக்கா

    பதிலளிநீக்கு
  4. கவியில் எண்ணற்ற கேள்வி !
    நல்லா இருக்குங்க, தொடரட்டும் உங்கள் கேள்விக் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  5. தொடுத்த வினாக்கள் சிந்திக்க வேண்டியவை. அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  6. என்னங்க இப்பிடி புயலா அடிக்கிறிங்க
    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  7. //மனங்களுக்கெல்லாம் மதம் பிடித்ததாலா
    மனிதம் காக்கவேண்டிய மதங்களெல்லாம்
    மனிதர்களைக்கொல்கிறது
    //
    மிக அருமையான வரிகள்... நல்லாருக்கு சகோதரி...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப நன்றாக இருக்கு, இன்னும் தொடர்ந்து வளரவாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்கவய்த்துள்ளது

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் மலிக்கா! அற்புதமான கவிதை.

    பதிலளிநீக்கு
  11. அத்தனையும் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகள்.

    பதிலளிநீக்கு
  12. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
    சமூகத்தின் மீதான பார்வையின் பால் படைத்திருக்கும் மன்னிக்கணும் வெடித்திருக்கும் இந்த கவிதை பல மனங்களில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துமானால் அது ஒரு அழகிய தலைமுறைக்கான ஒரு திறவுகோல்.உங்கள் வினாக்கள் அனைத்துமே ஒரு நிஜ கலைஞனின் பரிமாணங்கள்.தொடரட்டும் உங்கள் கவிசேவை./

    வெடித்து சிதறியபோதும் யார்காதுக்கும் கேட்பதில்லை.

    தொடந்துவந்து
    தங்களின் அன்பான கருத்துக்களை தருவது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  13. /வானம்பாடிகள் கூறியது...
    சமுதாயக் கேடு அத்தனையும் வினாவில் கேட்டது அருமை.

    மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி வானம்பாடிகளே..

    /S.A. நவாஸுதீன் கூறியது...
    நல்ல சிந்தனைகளும் பொதுநோக்கும் பொதுநலமும் அழகான வரிகளில். அருமை மலிக்கா/

    மிக்க நன்றி மிகுந்த சந்தோஷம் நவாஸண்ணா..

    பதிலளிநீக்கு
  14. /மிக அருமையான வரிகள்... நல்லாருக்கு சகோதரி.../

    மிக்க நன்றி பிரபாகரண்ணா..

    /கேசவன் .கு கூறியது...
    கவியில் எண்ணற்ற கேள்வி !
    நல்லா இருக்குங்க, தொடரட்டும் உங்கள் கேள்விக் கவிதை/

    மிக்க நன்றி: கேசவன்...


    / ராஜவம்சம் கூறியது...
    ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்கவய்த்துள்ளது/

    மிக்க நன்றி: ராஜ வம்சம்...


    / இப்படிக்கு நிஜாம்.., கூறியது...
    வாழ்த்துக்கள் மலிக்கா! அற்புதமான கவிதை/

    மிக்க நன்றி: எதிரொலி. நிஜாம்..

    பதிலளிநீக்கு
  15. /தியாவின் பேனா கூறியது...
    என்னங்க இப்பிடி புயலா அடிக்கிறிங்க
    கவிதை அருமை/

    புயலடித்தென்னா பூகம்பமே வெடித்தாலும் பயப்படாத ப்லமனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

    மிக்க நன்றி: தியா


    /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
    தொடுத்த வினாக்கள் சிந்திக்க வேண்டியவை. அருமையான வரிகள்./

    மிக்க நன்றி: ஷஃபிக்...

    பதிலளிநீக்கு
  16. /பீர் | Peer கூறியது...
    அத்தனையும் நான் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்விகள்/

    ஆளாளுக்கு கேட்டுத்தான் பார்போமே யாருக்காவது விடை [கொடுத்தால்]தெரிந்தால் சரிதான்..

    மிக்க நன்றி: பீர் அண்ணா..

    பதிலளிநீக்கு
  17. அழகிய அர்த்தமுள்ள சிந்திக்கத் தூண்டும் கவிதை... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. //சுயநலங்கள் பெருகிப்போனதாலா
    சொந்த பந்தங்கள்கூட பாரமாகிப்போகிறது//
    மலிக்கா ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....
    ம்ம் அத்தனையும் நிஜமான கேள்விகள் ??? இத்தனிஅ கேள்விகளுக்கு விடையென்ன??? இதுதான் இப்போதைய நம் நிலைமை...யார் இதர்கெல்லாம் விடை தருவாரென வியந்து நிற்கிரோம்.

    பதிலளிநீக்கு
  19. இதற்கெல்லாம் விடை ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும் மலிக்கா. இன்ஷா அல்லாஹ் அது தீர்ப்பு நாளாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது