நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கலங்காதே[இது விழி வலி]
கருவிழியே ஏன் கண்கலக்கிவிட்டாய்
வேண்டுமென்றா செய்தேன்
வெறுமையாக கிடந்த விழிகளுக்கு

விபரமறியாமல் விரல் நுனியில்
மையெடுத்திட்டுவிட்டேன் அது
விழியோரத்தில் உரசிவிட்டது

அதற்காகவா
விழிவலிக்க விம்மி விம்மி குமைகிறாய்
கண்மணிகள் கரைய கரைய அழுகிறாய்

கலங்காதே
கல்நெஞ்சமல்ல எனக்கு
நீ கலங்கும்போது கனக்கிறது நெஞ்சம்

அழாதே
உன்னை அமைத்திப்படுத்த அதேவிரல்களால்
விழிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறேன்...

[இது மனவலி]

மலரே மனதிற்குள் என்ன
மெளனபோராட்டம்

இரவு உறங்காமல் உன்தேகத்தில்
தெரியுது வாட்டம்

இதழ்களில் என்ன பனிதுளிபோல்
கண்ணீர்துளி

கலங்காதே காலையில்தெரியும்
கதிரவன் ஒளி....அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

11 கருத்துகள்:

 1. அழகுக் கவிதை. புகைப்படங்கள் இன்னும் அழகு சேர்த்திருக்கின்றன...

  பதிலளிநீக்கு
 2. என்னங்க தோழி..உங்கள் கவிதையில் ரொம்ப சோகம் தெரியுது.ஆனாலும் வழக்கம்போல் இதிலும் உங்கள் வார்த்தைகள் விளையாடி இருக்கிறது.அருமை.

  பதிலளிநீக்கு
 3. நல்லா இருக்குங்க ! உங்க கவிதை அது மன வேதனையாக இல்லாதவரை நல்லது !!

  பதிலளிநீக்கு
 4. இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு. படத்தைப் பார்த்தவுடன் கவிதை வ(லி)ரிகள் வந்துவிட்டதோ உங்களுக்கு

  பதிலளிநீக்கு
 5. இதழ்களில் என்ன பனிதுளிபோல்
  கண்ணீர்துளி

  கலங்காதே காலையில்தெரியும்
  கதிரவன் ஒளி....
  //
  ஆமாம் எதுவுமே சில காலம் இரவு மறைந்து ஒரு நாள் கதிரவன் வருவான்

  பதிலளிநீக்கு
 6. /S.A. நவாஸுதீன் கூறியது...
  இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு.
  படத்தைப் பார்த்தவுடன் கவிதை வ(லி)ரிகள் வந்துவிட்டதோ உங்களுக்கு/

  எப்படி நவாஸண்ணா.. பார்த்ததும் புரிஞ்சிகிட்டீங்க..ரொம்ப நன்றிண்ணா..

  பதிலளிநீக்கு
 7. எந்த நிலையும் சட்டென இல்லாவிடினும், கொஞ்சம் தாமதமாயேனும் மாறும்....

  கவிதையில் கண்ணீரைப்பிரித்தால் ஆனந்தம்...

  பதிலளிநீக்கு
 8. /புலவன் புலிகேசி கூறியது...
  அழகுக் கவிதை. புகைப்படங்கள் இன்னும் அழகு சேர்த்திருக்கின்றன/

  தொடர்ந்து வந்து கருத்துக்கள் தரும் தோழமைக்கு மிக்கநன்றி ..


  /வானம்பாடிகள் கூறியது...
  கவிதைகள் அழகு/

  தொடர்ந்து வந்து கருத்துக்கள் தரும்
  அய்யாவுக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 9. /பூங்குன்றன் வேதநாயகம் கூறியது...
  என்னங்க தோழி..உங்கள் கவிதையில் ரொம்ப சோகம் தெரியுது.ஆனாலும் வழக்கம்போல் இதிலும் உங்கள் வார்த்தைகள் விளையாடி இருக்கிறது.அருமை./

  சோகமெல்லாம் இல்லை தோழனே
  சோகங்கொண்டால் எப்படியிருக்குமுன்னு ஒரு முன்னோட்டம் அவ்வளவுதான்..

  வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 10. /கேசவன் .கு கூறியது...
  நல்லா இருக்குங்க ! உங்க கவிதை அது மன வேதனையாக இல்லாதவரை நல்லது !!/

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை கேசவன்,சும்மாதான் கவிதை சோகமா வருதான்னு பார்த்தேன்..

  மிகுந்த சந்தோஷம் கேசவன் தாங்களின் கருத்துக்களுக்கு...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது