நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உச்சதிலிருக்கும் ஒய்யாரி.


ஓடி ஓடி விளையாடி
ஒய்யாரத்திலேறும் விலைவாசி
உன்னால் பலருக்கு ஒப்பாரி
உனக்கோ  தினம் கச்சேரி
உன்னைச்சொல்லி குற்றமில்லை-ஆனாலும்
உன்னால்தானே பெரியத்தொல்லை!

உன்னாட்டத்தை தடுக்க யாருமில்லை
உன்முன்னேற்றத்தாலே பல
உயிர்கள் கொலை தற்கொலை
இதெல்லாம் எதனால் யாரால் வந்த பிழை
இப்படியேப் போனால் என்னாகும்
இம்மானிடரின்  நிலை

நாளுக்குநாள் அதிகரிப்பு
விலைவாசியின்  நச்சரிப்பு
ஏழையெளிய மக்களுக்கு
என்றுமே பஞ்சத்தின் கிலிபிடிப்பு
நடுத்தர வர்கத்திற்கு
ரெண்டு கெண்டான் பரிதவிப்பு

சுரண்டலுக்கு கட்டவிழ்த்து
சுருட்டலுக்கு சொகுசமைத்து
சுலபமாய் சொத்துசேத்து அனுபவிக்க
கட்டுகட்டாய் கிடப்பில் கிடக்கு
கள்ளநோட்டுக்கள் பதுக்கிவைத்து
சிலர்கள் வாழ பலர்கள் வதைத்து
சிம்மாசனத்திற்கலையும் கூட்டமைப்பு

பூனைக் கண்ணை மூடிக்கொண்டு
உலகமே இருட்டென்ற கதைகதைப்பு
கேப்பையில் நெய் வடித்து
கேட்பாருக் கூற்றும் வித்தைகற்று
விதவிதமாய் விளக்கஞ்சொல்லி
வாயடைக்கும் வசதிவாய்ப்பு

மலிவு விலையில் மயக்கம் கொண்டு
இலவசத்திற்கு இணக்கம் தந்து
மந்தையாட்டுக் கூட்டம்போல
மழுங்கிபோன மனிதரால
எகிறிபோகும் விலைவாசியேனென
எதிர்த்து பேசவும் வெடவெடப்பு

உயர்வாசி வலைவீசி
ஊடறுக்கும் விலைபேசி
குடிசைவாசி நடுவர்கவாசி
நட்டாத்தில் நிற்கும் நிலையோசி
தலைக்கேறிய விலைவாசி
தரிகெட்டு ஓட நீயோசி

உச்சதிலிருக்கும்  விலைவாசி
உருண்டுவிழ மாற்றியோசி
சுருண்டு கிடக்கும் நீ எழுந்து
சுறுசுறுப்போடு உழைப்பைநேசி......

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

மலையேறி போச்சிங்கண்ணே



                                              
மாசற்ற காதலெல்லாம்
மலையேறி போச்சிங்கண்ணே
காதலர்கள் மாசாகிப் போனதால
களிசடைக் காதலாசிங்கண்ணே

காசுள்ள காதல் மட்டும்
களிகண்டு நிற்குதண்ணே
கற்புள்ள காதலெல்லாம்
கசிங்கிதான் போசிங்கண்ணே

மனமொப்பி வாழும் வாழ்க்க
மண்ணுக்குள் புதையுதண்ணே
பணப்பையி நிரம்பக் கண்டா
பம்பரமா மனங்க சுத்துதண்ணே

மனம் ஊனம் ஆவதால
மனிதமெல்லாம் சிதையுதண்ணே
உடல் ஊனம் பெரிசுயில்ல-இத
உணரும் மனம் எவ்ளோ அண்ணே

மதிப்புள்ள காதல் கண்டால்
மனமகிழ்வு கொள்ளுமண்ணே
மாசில்லா காதல் வாழ்ந்தால்
மாசற்று பூமி சுத்துமண்ணே....


 ===================================
காதல் என்ற எழுத்துக்குதான்
கால் துணைக்கால் முக்கியம்
மாசில்லா காதலுக்கு தேவையில்லை
மனமிருந்தால் தோளே காலாகும்
இணையே பெருந்துணையாகும்.
 ==========================================



கவிதை வயல் 62க்காக எழுதியது..


 ”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

காரணம் அறிவீரோ?




உயிர்வதை கூடாதுன்னு
உயரிய சட்டமிருக்குங்க
அது எந்த உயிரென்பதிலே

தெரியாமத்தானிங்கே குழம்பிக் கெடங்குங்க

மனிதமிழந்து மானமிழந்து
மனிதர்கள் வாழும் உலகினில்
மனசாட்சி எதிர்பார்ப்பதெல்லாம்-நம்
மடமைதானுங்க

கேவலமா கூடிக் குலவி
குழந்த பெக்குறா
அப்பன் பேரூ தெரியாததால
அனாதையாக்குறா

ஆயி அப்பன் சேந்தும் பல
கூத்து நடத்துறார்
தன் கூத்து நடத்த தடையிதுன்னு
சிசுக்கள தொரத்தி வதைக்கிறார்

ஐந்தறிவும் ஆறறிவும்
ஒன்னாச்சேருது -அது
அவங்க பணபாசையில
ஜீவகாருன்யமாகுது

நாகரீக மெத்தயில
நாலுகாலு மிருங்கிடக்குது-கேட்டா
நன்றியுள்ள ஜீவனிதுதான்னு
நம்ம குத்திக் காட்டுது

ஐந்தறிவோ ஐயமின்றி
அறையில் தூங்குது
ஆறறிவோ
அடைக்காக்க யாருமின்றித் தவிக்குது

என்ன சொல்லி யார திட்ட
ஒன்னும் புரியல
காரணங்கள் என்னன்னு கண்டும்
காரி உமிழ முடியல

காரணங்கள் கொட்டிக் கெடக்கு
கேடு கெட்ட பூமியில்
பூமியென்ன செய்யுமிந்த
மனிதர் செய்யும் கேட்டினில்.....



 கவிதை வயல் - 60, திற்காக எழுதியது...


  ”கவியருவி”
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது