நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கற்றதென்ன? பெற்றதென்ன?



கடந்த வருட நாட்கள்
கண்மூடி திறப்பதற்குள்
உருண்டோடி விட்டது
அதில் நீ
கற்றதென்ன?
பெற்றதென்ன?

இவ் வருடமேனும்
இதைச் செய்யனும்
அதைச் செய்யனுமென்ற
சபதத்தில் ஏதேனும்
செய்ததுண்டா?

உனக்கு நீயே
கேட்டுக்கொள்
எடுத்த சபதம்
கிடப்பில் கிடந்தால்
அடுத்த சபதத்தை
ஆரம்பித்து விடாதே!

வருடங்களோ
நாட்களோ
நாளிகைகளோ
நம் எண்ணங்களையும்
நம் செயல்களையும்
சீர்திருத்துமென்றால்
அந்நாளிலோ
அந்நாளிகையிலோ
அதனை செயல்படுத்தலாம்

ஆனால்
இதெல்லாம் செய்வதற்கு
ஒன்றுமில்லை

உன்மனதில் இருக்கு
உனக்கான உளி
அதனைக்கொண்டு
உன்னை செதுக்கு
மனதளவில்
தடுக்கவேண்டியதை தடுத்து
செயலளவில்
விலகவேண்டியதிலிருந்து விலகு
செய்யவேண்டியவைகளை
சிறப்புடன் செய்வதற்கு

உறுதியும் முயற்சியும்
உன்னிடமே இருக்கு
கூடவே
இறை நம்பிக்கையையும் பொருத்து
அதைக் கொண்டு
உன்னை நீயே
உருவாக்கு
உலகம் உன்னைக்கண்டு
வியாப்பிக்கும்
உன்னிடமும்
உளிகேட்டு யாசிக்கும்...


 கவியருவி
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை
                                                                            இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

விசமிரண்டும் விற்பனைக்கு...



போதையும் புகையும்
புதைகுழியின் இருப்பிடம்
இதில்
புதைந்துகொள்ளவே  விரும்புதே
பேதைகொண்ட மனிதமனம்

அறிவிருந்தும் கெட்டவர்களை
அடிமையாக்க எண்ணிய
ஆங்கிலேயர்
விரித்த வலையிலும்
தானாய் விழுகிறது இவ்வினம்

ஓடாய் தேய்ந்து
உழைக்கும் பணத்தை
ஊதாரியாக்கும் உதவாக்கரைகளால்
அரசாங்கத்திற்கு
கோடி கோடியாய் வருமானம்

குடும்பம் குழந்தைகளை
இழந்தாலும்
குடித்து குடும்பழிப்பதிலும்
புகைத்து தன்னை புதைப்பதிலும்
இன்பம்காணும் தீவிரம்

தீவிரவாதிகளெல்லாம்
தீயவர்களென்று
தேடித்தேடி
ஒழித்தொழிக்கயெண்ணும்
அரசாங்கமுமே

தீயவைகளைளெனத் தெரிந்தும்
தீண்டித் தீண்டி தான் தன்குடும்பழிக்கும்
இத்தீவிரவாதிகளை
உருவாக்குவதும் ஊக்குவிப்பதும்
எவ்விதத்தில் நியாயம்?
இது மனுகுலத்தின் சோகம்…

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

எங்கே[ணி]நீ




உன்பின்னே ஒளிந்து
ஒப்பீ விளையாடிய
நாட்களும்

உன் குளிர்நீரருந்தி
குதூகளித்த
நாட்களும்

உன்னுள் குதித்து
குளித்தாடிய
நாட்களும்

நாட்குறிப்புகளில் மட்டும்
பத்திரமாய்
அசலைத்தொலைத்த
நகலாய்..
---------------------------

உனது பரிட்சத்தை
எட்டி நின்றும்
ஏக்கத்துடனும் 
பார்த்ததுண்டு

கயிறுதொட்டு
வாளியிறக்கி
தண்ணீர்மொண்டு
குடம் நிரப்பியத்தில்லை

ஆனால்
என் குழந்தைக்கு
அந்த
பரிட்சயம்கூடயில்லை.

---------------------------------------------

உன்
நீரெடுத்து  நீராடி
உணவு சமைத்து
உண்டோரெல்லாம்
உடலாரோக்கியத்தின்
மடியில்

மின்சார நீரருந்தி
மாசு நீரில் சமைத்து
உணவுண்போரெல்லாம்
மருந்து மாத்திரைகளின்
பிடியில்.
---------------------------------

இன்றும் சில
இடங்களில்
நீ”ர்”
ஊற்றெடுக்கிறாய்
தாய்பாலாகவல்ல
புட்டிப்பாலாக!
அதாவது
தன்னாலல்ல- மோட்டர்
தடியாலடித்து
----------------------


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது