துரோகங்களின் மூப்பு...
பசுமையாய் படர்ந்த மனக்கிளையை
துரோக நீரூற்றி பட்டுபோகவைத்து மர[ண]த்தடியில் கிடத்திவிட்டு
மார்தட்டி மற்ற கிளைபரப்பி
வான்நோக்கி பறக்கிறாய்.
மெளனங்களை
மொழிபெயர்க்கத் தெரியா என்மனக்கூடு திடமில்லாமல் திண்டாடி
நேசமில்லா உன்மனக்கிடங்கில்
பாசமெதிர்பார்த்து
துடித்தது கதறல்களாய்,
நேசத்தீ நெஞ்சேறியபோதும்
சுவாசிக்கத் தெரியாமல்
சுடும்தீயின் சுவாலையில்
சுருண்டுகிடந்தே சோர்ந்தது மெளனமாய்.
மலக்குழிக்குள் மாட்டிக்கொண்ட
தோரணையாய்
என்
மனம்துரோகங்களில் சாயல்
உன் முகத்தில் தெரியவில்லை
ஆனால் நீதான்
துரோங்களின் மூப்பு என்பதை
நானெப்படி அறியாது போனேன்
சில தாலி வேலியாக
சிலவேலி தாலிக்காக்க
தாலிதந்து வேலியமைத்து வெண்ணை திரண்டு வரும் சமயத்தில்
தாளி உடைவதுபோல்
விட்டுச் சென்றுவிட்டாய்
வீதியில் நிறுத்திவிட்டு
புயலடித்து உடையா கிளையை
மரமே உடைத்து
மண்ணில் வீழ்ந்தியபோது
வேண்டாத சருகுகளோடு ஒரு சருகாய்
விதியை நொந்து
வீசும் காற்றுகளோடு மல்லுக்கு நிற்கிறது
வஞ்சனை செய்யத்தெரியா என்மனது
சிறகு
தந்து பறக்கவைப்பாய் என்றிருந்தேன்
இப்படிஇதயமொடித்து இறக்கவைப்பாய் என்பதையறியாமலே….
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
இருளின் வெளிச்சத்தில்.
ஆழ்ந்த உறக்கத்தினூடே
இமைகள் இறுக்க
மூடியிருக்கும் வேளையில்
இரு இமைக்குமிடையே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
அர்த்த ஜாமத்தில்
அடர்ந்த காடுகளின் நடுவே
வான் நோக்கிய
கிளைகளை நீக்கிக்கொண்டு
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
இருள் சூழ்ந்த
பூட்டிய அறையினுள்
சாவித் துவாரத்தின் வழியே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
உள்ளக்கூட்டில் விஷமேற்றப்பட்டு
மனமுடைந்த நிலையில்
விம்மி விம்மி கரைந்து
இதயத்தில் இருள் கவ்விய வேளையில்
இருளைக்கிழித்து - எங்கிருந்தோ
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
இருளை இறுக்கியணைத்திருக்கும்
வெளிச்சம் இருளைவிட்டு அகழ்வதில்லை வெளிச்சத்தின் வாசத்தை நுகராது
இருளுக்கு இருக்கவும் விருப்பமில்லை!
இருளின் சாம்ராஜ்யதில்
வெளிச்சத்திற்கான அழைப்புகள்
எப்போதும் வரவேற்க்கும்
வெளிச்சத்தின் வெட்டவெளியில்
இருளுக்கான இருக்கைகள்
எப்போதும் போடப்பட்டிருக்கும்!
”ஆகமொத்ததில்”
வெளிச்சம் இருள்
இருள் வெளிச்சம்
வெளிச்சத்தை தொடரும் இருள்
இருளில் அடங்கும் வெளிச்சம் ..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

