நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு

  3. நாள் ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து இன்று சற்று தேர்ச்சிபெற்றதும் இதோ உங்கள் முன் வந்து மாநாட்டிற்க்கு அழைப்பு விடுக்கிறேன்..

முத்துப்பேட்டையில் [அட நம்ம ஊர்லதானுங்க] வரும் 12-5-2012 சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை முத்துப்பேட்டை ரஹ்மத் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள். சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . அதுசரி அதில் உனக்கென்ன வேலை என்கிறீகளா? அதுவா பெரிய பெரிய அறிவாளிங்க பேசப்போகிற மாநாட்டை இந்த பச்சப்புள்ளதானுங்க தொகுத்து வழங்கப்போகிறது. உள்ளுக்குள்  உதறல் இருந்தாலும் இறைவன்மேல் பாரத்தைபோட்டுவிட்டு துணிந்து சரியென்று சொல்லிட்டேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான் என்ற நம்பிக்கையோடு..

 உங்கள் அனைவரின் அன்போடு நீரோடையில் வலம் வருகின்ற நான். தற்போது இப்படியும் வலம் வரத்தொடங்கியிருக்கிறேன். இதற்க்கு தாங்கள் அனைவரின் பிராத்தனைகளும் வேண்டும்.  அதனோடு தாங்கள் அனைவரையும் மிக மிக அன்போடு இந்த மாநாட்டுக்கு அழைக்கிறேன்.

அன்று நடைபெறும் இம்மாநாட்டினை  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில்  இணையதளத்திலும் நேரடி ஒளிப்பரப்பை காணலாம்..

அனைவரின் வருகையையும்  எதிர்பார்த்திருக்கும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

அப்பாவைவிட ஒருபடி!

 
பிள்ளையை  
பள்ளிக்கு கிளப்பிக்கொண்டிருந்த
அவசர தருணங்களில்  
அம்மாவின் கேள்வி
வளர்ந்து ஆளானதும்
யாரைப்போல வர ஆசை!            

வேளைக்குப் போக 
வேகமாய் கிளம்பிய தந்தை
சிலநொடிகள் தாமதம்
பிள்ளையின் பதிலைக் கேட்க!

அழுத்தமாய் சொன்னது
அப்பாவைவிட ஒருபடி மேலாக!
ஆனந்தம் பொங்கிய நிலையில்
அடுத்தடி எடுத்தவைத்து

அப்படியா அன்புச்செல்லமேயென
ஆரத்தழுவி அன்பாய் முத்தமிட்டபோது
”ஆமாம்மா”
அப்பா அவங்கப்பாவை மட்டுந்தானே
முதியோர் இல்லத்துக்கு பார்க்கப்போறாங்க 
ஆனா நான் அப்படியல்ல
உன்னையும் சேர்த்து பார்க்கவருவேன் என்றதும்

முதுகெழும்பு முறிபட்டதுபோல்
உடல் தடதடக்க
மனதெழும்பு நசிந்து  குருதி கசிய
விழிகள் நான்கும்  
நிலைகுத்தி நின்றன...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

வாழ்க்கையென்னும் நூலில்


துரத்தி ஓடுகிறேன்
நிலாவோடு ”நிழலும்” ஒளிந்து கொள்கிறது

கண்கண்டு ஓடுகிறேன்
காணாமல் ”கானல்”  மறைகிறது

அன்பைத் தேடுகிறேன்
அதுவும் ”அழகிய” வேடமிடுகிறது

வலிதெரியாமல் நடிக்கிறேன்
வழியவந்து ”வருத்தி” வலிக்கவைக்கிறது

நீர்குமிழியாய்
உடைந்துகொண்டே இருக்கிறேன்
உமிழ்நீராய் சோகம்
சுரந்துகொண்டே இருக்கிறது

என் அறையெங்கும் ஆன்மா 
அலறும் சத்தம் கேட்கிறது-அதனை
அமைதிப்படுத்தத் தெரியாமல்
அதனோடு சேர்ந்து 
என் அணுக்களும் அலறுகிறது!


வாழ்க்கை நூலின் பக்கங்கள்
நூலில் இணைப்பட்டதுபோல 
ஆங்காங்கே அறுந்தும்
இணைந்துமே இருக்கின்றது

இணைந்திருக்கும் வழியே
இன்பமும்
அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
துன்பமும்
விட்டு விட்டு சிரித்தழுகிறது!

டிஸ்கி///
நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிலளிப்பதில்லை அனைவரும் என்னை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருத்துரைக்களுக்கும் பதிலளிப்பேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது