வானத்திற்க்கு கீழ்
வீட்டைக்கட்டிவிட்டு
வான் மழைக்கும்
வீசும் புயலுக்கும்
வருத்தும் துன்பத்துக்கும்
வாட்டும் வேதனைக்கும்
வருந்துவதா? வாடுவதா?
விவாதிக்கிறது மனம்
வாழ்க்கை வலியுடையது
வளையும்போதும் நிமிரும்போதும்
வலிக்கிறது
வேதனை வருத்துகிறது
வாஞ்சையோடு வார்த்தைகள்
ஆறுதல் அளித்தபோதும்
அவஸ்த்தையோடு மனம்
அவதிப்படுகிறது
கருவறையில் இருந்தவரை
கவலைகளில்லை கனவுகளில்லை
கண்விழிக்க தொடங்கியதும்
கவலைகளும்
கனவுகளும் விடுவதாயில்லை
வலியுடைய வாழ்க்கையை
வலுவுடையதாக்குவது
மனவலிமையிலிருக்கிறதென
வரமறுக்கும் தைரியத்தை
வம்புசெய்து வரவழைத்துகொண்டேன்
வருவது வரட்டும்
வானத்தின்கீழ் வாழவந்துவிட்டேன்
வருவது வரட்டும்
தேற்றிக் கொள்கிறேன் என்னை...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் -இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
காதல் துதி..
கிளிக் கிளிக்
உன்னைப் புதைத்தேன் என்னுள்
மூச்சை சுவாசித்தேன் உன்னுள்
அதை அடைகாத்தேன் என்னுள்
நிறைவைக் கண்டேன் உன்னுள்
அதை நிரப்பிக்கொண்டேன் என்னுள்
உணர்வுகள் கண்டேன் உனக்குள்
அதை உடுத்திக்கொண்டேன் எனக்குள்
எனையே உருக வைத்தாய் எனக்குள்
நான் உருமாறி புகுந்தேன் உனக்குள்
என்ன செய்தாய் என்னை
ஏன் நித்தமும் நினைக்கிறேன் உன்னை
அன்பு கொண்டாயோ என்மேல்
அதை அருந்திவிட்டேனோ நீர்போல்
துடிக்கிறது உனக்காக நெஞ்சம்
துதிபாடி அழைகிறேன் புகுந்துவிடு
எனக்குள் தஞ்சம்..
இக்கவிதை தமிழ்குறிஞ்சியில் வெளியாகியுள்ளது
நன்றி தமிழ்குறிஞ்சி.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அத்தனைக்கும் ஆமெனில்...
மணந்துவந்தவளின் மனதையறிந்து
மாராப்புக்குள் ஒளிந்திருக்கும் மனத்திற்குள்
மறைவாக ஒளிந்திருக்கும்
மங்கையவளின்
மனயெண்ணங்களை உணர்ந்ததுண்டா!
உன்னோடு உண்டு, உன்னோடு உறங்கி
உன்னோடு அழுது, உன்னோடு சிரித்து
உனக்காகவே வாழவந்திருக்கும்
உள்ளத்தின்
உணர்வுகளை புரிந்ததுண்டா
மனைவியானவளின் மகிழ்ச்சியில்
மர்மத்திரை விழுந்து
மூடிக்கிடக்கையில்
மனதிற்கு இதம்கொடுத்து
மனசங்கடத்தை விலக்கியதுண்டா!
ஊடலும் கூடலும் வரவும் செலவும்
உண்பதும் உறங்குவதுமட்டுமே
வாழ்வன்று
உன்னோடு ஒட்டி உறவாடும்
உன் வம்சத்தை விருத்தி நிலையாக்கும்
உள்ரங்கத்தின்
ஓசைகளை கேட்டதுண்டா!
மறைக்கா ரகசியங்கள் ஏதுமின்றி
மனதுக்குள் ஒளிவுமறைவு ஒன்றுமின்றி
மணமுடித்த துணைவியோடு
மனமொத்த வாழ்க்கை
வாழ நினைத்ததுண்டா!
பெண்மனதையறிந்து
புன்னகையை சிந்தி
பொன்மானின் நெஞ்சம்
ஆனந்தமடைய
பூக்களின் மென்மையாய்
பூபளத்தின் தன்மையாய்
பாசங்களை பகிர்ந்ததுண்டா!
சுடுசொற்கள் அள்ளிவீசி
சுருட்டிப்போடும் பேச்சு
சுமைகளாக மாறி அவளைச்
சுற்றிக்கொள்ளும்போது
ஆறுதலான ஓரிரு வார்த்தை சொல்லி
அவளின் அகத்தை மகிழ்வித்ததுண்டா!
முகம்பார்த்தறிந்து
அவள் மெளனத்தின்
மொழிகள் புரிந்ததுண்டா!
கேட்டுக் கேட்டு கொடுத்ததைவிட
கேட்காமல்
அவளின் தேவைகளறிந்ததுண்டா!
என்ன வாழ்க்கையிது
என்றெண்ணிவிடாவாறு
எண்ணங்கள் விதைத்ததுண்டா!
என்றுமே இதுபோன்றொரு
வாழ்க்கைவேண்டுமென
எண்ண வைத்துண்டா!
இரு மனங்கள் இணைந்து
இளமனங்களுக்குள்
இன்பம் நிலைத்திருக்கா!
இதயங்கள் இணைந்தபின்னே
இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!
அத்தனைக்கும் ஆமெனில்,,,
இல்லத்தில் இனிமைக்கும்
இன்பதுக்கும் குறைவேது!
இல்லையெனில்
இல்லறத்தில் என்றுமே நிறைவேது!
டிஸ்கி// எனது இக்கவிதை முதுகுளத்தூர்.காம் மில் வெளியாகியுள்ளது
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


