நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அத்தனைக்கும் ஆமெனில்...


ணந்துவந்தவளின் மனதையறிந்து
மாராப்புக்குள் ஒளிந்திருக்கும் மனத்திற்குள்
மறைவாக ஒளிந்திருக்கும்
மங்கையவளின்
மனயெண்ணங்களை உணர்ந்ததுண்டா!

ன்னோடு உண்டு, உன்னோடு உறங்கி
உன்னோடு அழுது, உன்னோடு சிரித்து
உனக்காகவே வாழவந்திருக்கும்
உள்ளத்தின்
உணர்வுகளை புரிந்ததுண்டா

னைவியானவளின் மகிழ்ச்சியில்
மர்மத்திரை விழுந்து
மூடிக்கிடக்கையில்
மனதிற்கு இதம்கொடுத்து
மனசங்கடத்தை விலக்கியதுண்டா!

டலும் கூடலும் வரவும் செலவும்
உண்பதும் உறங்குவதுமட்டுமே
வாழ்வன்று
உன்னோடு ஒட்டி உறவாடும்
உன் வம்சத்தை விருத்தி நிலையாக்கும்
உள்ரங்கத்தின்
ஓசைகளை கேட்டதுண்டா!

றைக்கா ரகசியங்கள் ஏதுமின்றி
மனதுக்குள் ஒளிவுமறைவு ஒன்றுமின்றி
மணமுடித்த துணைவியோடு
மனமொத்த வாழ்க்கை
வாழ நினைத்ததுண்டா!

பெண்மனதையறிந்து
புன்னகையை சிந்தி
பொன்மானின் நெஞ்சம்
ஆனந்தமடைய
பூக்களின் மென்மையாய்
பூபளத்தின் தன்மையாய்
பாசங்களை பகிர்ந்ததுண்டா!

சுடுசொற்கள் அள்ளிவீசி
சுருட்டிப்போடும் பேச்சு
சுமைகளாக மாறி அவளைச்
சுற்றிக்கொள்ளும்போது
ஆறுதலான ஓரிரு வார்த்தை சொல்லி
அவளின் அகத்தை மகிழ்வித்ததுண்டா!

முகம்பார்த்தறிந்து
அவள் மெளனத்தின்
மொழிகள் புரிந்ததுண்டா!
கேட்டுக் கேட்டு கொடுத்ததைவிட
கேட்காமல்
அவளின் தேவைகளறிந்ததுண்டா!

ன்ன வாழ்க்கையிது
என்றெண்ணிவிடாவாறு
எண்ணங்கள் விதைத்ததுண்டா!
என்றுமே இதுபோன்றொரு
வாழ்க்கைவேண்டுமென
எண்ண வைத்துண்டா!

ரு மனங்கள் இணைந்து
இளமனங்களுக்குள்
இன்பம் நிலைத்திருக்கா!
இதயங்கள் இணைந்தபின்னே
இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!

அத்தனைக்கும் ஆமெனில்,,,

ல்லத்தில் இனிமைக்கும்
இன்பதுக்கும் குறைவேது!
ல்லையெனில்
இல்லறத்தில் என்றுமே நிறைவேது!

டிஸ்கி// எனது இக்கவிதை முதுகுளத்தூர்.காம் மில் வெளியாகியுள்ளது

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

40 கருத்துகள்:

 1. //அத்தனைக்கும் ஆமெனில்,,,

  இல்லத்தில் இனிமைக்கும்
  இன்பதுக்கும் குறைவேது!
  இல்லையெனில்
  இல்லறத்தில் என்றுமே நிறைவேது!//

  அக்கா உண்டா உண்டா என்று கேட்டு முடிவில் அருமையான வரிகளை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்...
  அருமையான கவிதை... அப்புறம் முதுகுளத்தூர்.காமில் உங்கள் கவிதை வந்தததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. முகம்பார்த்தறிந்து
  அவள் மெளனத்தின்
  மொழிகள் புரிந்ததுண்டா!
  கேட்டுக் கேட்டு கொடுத்ததைவிட
  கேட்காமல்
  அவளின் தேவைகளறிந்ததுண்டா!


  .......வாவ்! கவிதையில் இல்லறம் பற்றி கலக்கி இருக்கீங்க! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மனைவியானவளின் மகிழ்ச்சியில்
  மர்மத்திரை விழுந்து
  மூடிக்கிடக்கையில்
  மனதிற்கு இதம்கொடுத்து
  மனசங்கடத்தை விலக்கியதுண்டா!..//

  சே என்ன அறுமையா எழுதுறீங்க. எனக்கு உங்களைபார்தா பொறாமையா வருது..மல்லி..

  கடவுள் உங்களுக்கு எவ்வித குறையுமில்லாமல் வைக்கனும்..

  வாழ்த்துக்கள் மலிக்கா..

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையாய் இல்லரத்தை இணைத்த கவிதை.

  எல்லாவகையையும் கவிதைக்குள் புகுத்தும் திறன் உங்களுக்கு இருக்கு மலிக்கா. நிச்சசயம் உங்கள் புத்தகத்தை நான் சேமிக்கவேண்டும். சீக்கிரம் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்..

  பதிலளிநீக்கு
 5. கடைசியில நாலு வரியில கவுத்துட்டீங்களே ..!!அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகக்ள் மலிக்கா,
  அருமையான இல்லறக்க்கவிதை .

  பதிலளிநீக்கு
 7. அக்கா உண்டா உண்டா என்று கேட்டு முடிவில் அருமையான வரிகளை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்...
  அருமையான கவிதை... அப்புறம் முதுகுளத்தூர்.காமில் உங்கள் கவிதை வந்தததற்கு வாழ்த்துக்கள்/

  முதல் கருத்துக்கும் பாசமான வாழ்த்துக்களுக்கும் அன்பான கருதுக்கும் மிக்க நன்றி குமார்..

  பதிலளிநீக்கு
 8. .......வாவ்! கவிதையில் இல்லறம் பற்றி கலக்கி இருக்கீங்க! பாராட்டுக்கள்!

  //

  இல்லறம் நல்லறம் ஆகத்தான் சித்துமேடமக்கா..

  பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 9. காஞ்சி முரளி கூறியது...
  நல்லாத்தான் இருக்கு...

  ஆனா...?//

  அதென்ன ஆனா ஆவன்னா.. சகோ

  பதிலளிநீக்கு
 10. கேள்விமேல் கேள்விகேட்டு இப்படி எங்களையெல்லாம் பேந்த பேந்த முழிக்க வச்ச நீங்க நல்லா ரசனையாத்தான் கேட்கிறீங்க.

  ஆனா...(இது கா.மு.வின் ஆனாவல்ல)

  எங்களுக்காக மனைவிகளிடத்திலும் கொஞ்சமாவது கேள்விகள் கேட்டிருந்தால்... அது நியாயம்.

  இருந்தாலும் சகோதரி, இவ பக்கத்தில இல்லேன்ற பாதிகாப்பில் சொல்றதா நினைக்காதீங்க: "அத்தனைக்கும் ஆம்தான்" (ஏறத்தாழ)

  பதிலளிநீக்கு
 11. தாய்மார்கள மட்டும் போட்டா எப்பிடி...?
  தந்தைமார்களையும் போடுங்கோ...!

  "பெண்ணுக்கு நீதி...!
  ஆணுக்கு அநீதியா...?
  எல்லாத்திலேயும் "சமநீதி"ன்னு போராடிட்டிருக்காங்க...!

  அதனாலத்தான்.... இந்த "ஆனா..?"........!

  பதிலளிநீக்கு
 12. எனக்கு எல்லாம் தெரியாதுங்க.
  இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 13. இல்லறம் பற்றிய உணர்வும் உண்மையும் கலந்து புத்தி சொல்றமாதிரி இருக்கு மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 14. இன்டலி நிறையா நேரம் ஓட்டுப் பெட்டி வேலை செய்யுதுலை,இப்போ உலவு ஓட்டுத்தான் போடறேன்,அதுனாலே அதையும் கொஞ்சம் இணைச்சால் நல்லா இருக்கும்.
  இன்ட்லிக்கு புகார் கடிதம் எழுதணும்.
  நல்லா இருக்குங்க கவிதை.

  பதிலளிநீக்கு
 15. நீரோடை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
  ஏழைகளுக்கு மட்டும் இயங்கும் எனது தளம்,ஏழைகளின் வறுமையை வெளியேக் கொண்டு வரணும்னு எழுதி பழகிக் கொண்டு இருக்கேன் ஆகையால் நீங்களும் எனது தளத்திற்கு வந்து உங்களது போட்டோக்களை முகப்பில் ஒட்டி போகும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் கருத்தோ அல்லது ஓட்டோ போடவேணாம் ஏன் என்றால் உங்களுக்கு நேரம் இருக்காது.

  மங்கையரசிக்கு ஒ..சாரி ..கவியரசிக்கு ஒரு சின்ன வேண்டுகோள், எனது தளத்தின் கீழே ஒருவர் கண்ணீர் வடித்து அந்தக் கண்ணீர் நதியில் கலப்பது போன்று இருக்கு அதற்க்கு ஒரு கவிதை எழுதி பிரசுரியுங்கள் அது ஏழைகளின் ஆன்மாவை சந்தோசப் படுத்தட்டும்.
  சிரிச்சு..சிந்தித்து உங்கள் கவிதையை படித்த நீரோடை வாசகர்கள்,ஒருநாள் அழுது கவிதையை படிக்கிற மாதுரி எழுதுங்கள்.
  வாழ் நாளையே சிரிப்பாக கொண்ட நாம் ஒரு நாள் அந்த ஏழைகளுக்காக அழுவோம்.
  வாழ் நாளையே அழுகையைக் கொண்ட ஏழைகள் உங்கள் கவிதை மூலம் ஒருநாள் சிரிக்கட்டும்.
  நமக்கும் ஆறுதல் சொல்ல தளங்கள் உண்டு என்று.
  http://naattamain.blogspot.com/

  பதிலளிநீக்கு
 16. ஊடலும் கூடலும் வரவும் செலவும்
  உண்பதும் உறங்குவதுமட்டுமே
  வாழ்வன்று
  உன்னோடு ஒட்டி உறவாடும்
  உன் வம்சத்தை விருத்தி நிலையாக்கும்
  உள்ரங்கத்தின்
  ஓசைகளை கேட்டதுண்டா!//

  வரிகளுக்குள் உண்மை உண்மையாய் வெளிபடுகிறது.
  இல்லறத்தில்கூட ஓர் ஒழுங்குமுறையை கற்பிக்கும் வரிகள்.
  என்ன சொல்ல உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை..

  மென்மேலும் வளர்க நல்ல கருத்துக்களை விதைக்க..

  பாசத்தோடு
  மு. இராமநாதன்
  ஆசிரியர்

  பதிலளிநீக்கு
 17. வினோ கூறியது...
  எல்லாமே உண்டுங்க....//

  அப்ப எல்லாம் நன்றுங்க..

  //சுகந்தி கூறியது...
  மனைவியானவளின் மகிழ்ச்சியில்
  மர்மத்திரை விழுந்து
  மூடிக்கிடக்கையில்
  மனதிற்கு இதம்கொடுத்து
  மனசங்கடத்தை விலக்கியதுண்டா!..//

  சே என்ன அறுமையா எழுதுறீங்க. எனக்கு உங்களைபார்தா பொறாமையா வருது..மல்லி..

  கடவுள் உங்களுக்கு எவ்வித குறையுமில்லாமல் வைக்கனும்..

  வாழ்த்துக்கள் மலிக்கா..//

  வாழ்த்துக்களுக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி சுகந்திமா..

  பதிலளிநீக்கு
 18. நிஷா கூறியது...
  மிக அருமையாய் இல்லரத்தை இணைத்த கவிதை.

  எல்லாவகையையும் கவிதைக்குள் புகுத்தும் திறன் உங்களுக்கு இருக்கு மலிக்கா. நிச்சசயம் உங்கள் புத்தகத்தை நான் சேமிக்கவேண்டும். சீக்கிரம் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்
  //

  இன்ஷா அல்லாஹ் நிஷா துஆச்செய்யுங்கள்..
  அன்பான கருதுக்களுக்கு மனமார்ந்த நன்றி நிஷா..

  பதிலளிநீக்கு
 19. ஜெய்லானி கூறியது...
  கடைசியில நாலு வரியில கவுத்துட்டீங்களே ..!!அவ்வ்வ்வ்.//

  யாரு அண்ணதேவா கவுந்தது. மச்சீஈஈஈஈஈஈஈ என்னான்னு கொஞ்சம் கேளுங்கோ..

  பதிலளிநீக்கு
 20. Jaleela Kamal கூறியது...
  வாழ்த்துகக்ள் மலிக்கா,
  அருமையான இல்லறக்க்கவிதை .//

  ரொம்ப மகிழ்ச்சி ஜலீக்கா..


  //ஜெய்லானி கூறியது...
  சூப்பர் உணர்வு பூர்வமான கவிதை..!! :-))//

  அதை உணர்ந்ததால்தான் இவ்வெளிபாடுகள் அண்ணாத்தே..

  பதிலளிநீக்கு
 21. sabeer கூறியது...
  கேள்விமேல் கேள்விகேட்டு இப்படி எங்களையெல்லாம் பேந்த பேந்த முழிக்க வச்ச நீங்க நல்லா ரசனையாத்தான் கேட்கிறீங்க.//

  என்ன து பேந்த பேந்த முழிச்சீங்களா சகோ. அச்சொ அத மச்சி பார்த்தகளா..

  //ஆனா...(இது கா.மு.வின் ஆனாவல்ல)//

  மொத்தத்தில் ஆனா ஆவண்ணா ஓகே..

  //எங்களுக்காக மனைவிகளிடத்திலும் கொஞ்சமாவது கேள்விகள் கேட்டிருந்தால்... அது நியாயம்.//

  எப்பப்பாத்தாலும் அவாளையே குறைசொல்லுவது தப்பில்லையோன்னோ அதான் கொஞ்சம் டிரேக்மாற்றி இப்படி..

  //இருந்தாலும் சகோதரி, இவ பக்கத்தில இல்லேன்ற பாதிகாப்பில் சொல்றதா நினைக்காதீங்க: "அத்தனைக்கும் ஆம்தான்" (ஏறத்தாழ)//

  அல்ஹம்துலில்லாஹ் எல்லாரும் இப்படியே இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். இறைவன் அருளட்டும்.. மாசாஅல்லாஹ்

  பதிலளிநீக்கு
 22. மிக அருமையான கவிதை நடை...கேள்விகளின் மூலமாகவே இல்லறம் என்பது இப்படி இருந்தால் தான் இனிக்கும் என்பதை அழகாய் தெளிவு படுத்தி விட்டீர்கள்...

  வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 23. காஞ்சி முரளி கூறியது...
  தாய்மார்கள மட்டும் போட்டா எப்பிடி...?
  தந்தைமார்களையும் போடுங்கோ...!

  "பெண்ணுக்கு நீதி...!
  ஆணுக்கு அநீதியா...?
  எல்லாத்திலேயும் "சமநீதி"ன்னு போராடிட்டிருக்காங்க...!

  அதனாலத்தான்.... இந்த "ஆனா..?"........!//

  நல்லாசொல்லுவீங்களே. ஒரேபக்கமும் பேசக்கூடாது இருபக்கம் பேசனுமுன்னு நியாம் சொல்லுதுல்ல அப்பப்ப இப்படியும் பேசும் அதான் தாய்மார்களுக்கு வக்கலாத்து வாங்குகிறோம். அப்பல வருவோமுல்ல தந்தைமார்களை தாக்க. அச்சோ போற்ற..

  பதிலளிநீக்கு
 24. ஹேமா கூறியது...
  இல்லறம் பற்றிய உணர்வும் உண்மையும் கலந்து புத்தி சொல்றமாதிரி இருக்கு மல்லிக்கா !//

  மிகுந்த மகிழ்ச்சி தோழி..

  //

  //அன்பரசன் கூறியது...
  எனக்கு எல்லாம் தெரியாதுங்க.
  இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

  கவிதை அருமை.//

  அந்தகாலம் வரும்போது இதை கொஞ்சம் நினைச்சுக்கோங்க அப்படியே இல்லறமும் இல்லமும் இன்பம் பொங்கட்டும்.

  மிக்க நன்றி அன்பு..

  பதிலளிநீக்கு
 25. இல்லறம் பற்றிய உணர்வும் உண்மையும் கலந்து புத்தி சொல்றமாதிரி இருக்கு மல்லிக்கா !

  7 டிசம்பர், 2010 3:14 am

  அந்நியன் 2 கூறியது...
  இன்டலி நிறையா நேரம் ஓட்டுப் பெட்டி வேலை செய்யுதுலை,இப்போ உலவு ஓட்டுத்தான் போடறேன்,அதுனாலே அதையும் கொஞ்சம் இணைச்சால் நல்லா இருக்கும்.
  இன்ட்லிக்கு புகார் கடிதம் எழுதணும்.
  நல்லா இருக்குங்க கவிதை.//


  ஆமாம் இண்ட்லியில் ஓட்டுபோடயிலவில்லைன்னு எனக்கும் சில மெயில்கள் வந்திருக்கு.
  அது ஏன்ன்னு தெரியலை. அவங்க சரிசெய்துடுவாங்க. உலவில் நான் இணைந்துள்ளேன் பட். அதை இதில் இணைக்கவில்லை முயற்சிக்கிறேன்
  மிக்க நன்றி அய்யூப்..

  பதிலளிநீக்கு
 26. அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி,வழக்கம்போல் நல்ல கவிதை கூடவே வழக்காடி இருக்கீங்க! ஆம் என்று உன்மையை சொன்னா பொண்டாட்டி தாசன்னு கின்டல் செய்யக்கூடாது, நான் நேசன் அவ்வளவே.

  பதிலளிநீக்கு
 27. //இரு மனங்கள் இணைந்து
  இளமனங்களுக்குள்
  இன்பம் நிலைத்திருக்கா!
  இதயங்கள் இணைந்தபின்னே
  இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!//

  அருமை இல்லறத்தைப்பற்றி சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

  தொடருங்கள்...

  வாழ்க வளமுடன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 28. சூப்பர்..மலிக்கா...இது எல்லாத்துக்கும் “ஆம்” தான் கல்யாண முடிந்ததிருந்து...
  என்ன உம்மாதான்...பொண்டாட்டியே நல்லா தாங்குறான் பேர்வழி-ண்டு பட்ட பேர் வைத்து விட்டார்கள்...என்ன செய்ய.....கவிகாக்கா சகோ.சபீர் அவர்கள்..சொன்னதுபோல் ஆண்வர்க்கத்தின் ஏக்கங்களையும் கவிதையாய் வடித்து தாருங்கள்

  பதிலளிநீக்கு
 29. பெண்களின் உண்ர்வுப்பூர்வ பாடல்கள் தொடர் தங்கள் விருப்பபடி இதில்http://kjailani.blogspot.com/2010/12/blog-post.html

  தொடருக்கு அழைத்ததுக்கு நன்றிகள் பல :-)

  பதிலளிநீக்கு
 30. வரிகளுக்குள் உண்மை உண்மையாய் வெளிபடுகிறது.
  இல்லறத்தில்கூட ஓர் ஒழுங்குமுறையை கற்பிக்கும் வரிகள்.
  என்ன சொல்ல உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை..

  மென்மேலும் வளர்க நல்ல கருத்துக்களை விதைக்க..

  பாசத்தோடு
  மு. இராமநாதன்
  ஆசிரியர்//

  வாங்க வாங்க நலமா சார். தாங்களைப்போன்றவர்களின் வாழ்த்துக்களின் அகம் மகிழ்சிறேன்..

  மிக்க நன்றி சார் தொடர்ந்துவாருங்கள் ஊக்கங்களேன்னும் கருதுக்கள் தாருங்கள்..

  //வெறும்பய கூறியது...
  எல்லாமே உண்டு//


  எல்லாம் உண்டா அப்பசரி சகோ. இல்லறம் நல்லறம்தான்..

  பதிலளிநீக்கு
 31. Kousalya கூறியது...
  மிக அருமையான கவிதை நடை...கேள்விகளின் மூலமாகவே இல்லறம் என்பது இப்படி இருந்தால் தான் இனிக்கும் என்பதை அழகாய் தெளிவு படுத்தி விட்டீர்கள்...

  வாழ்த்துக்கள் தோழி.//

  வாங்க தோழி. தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

  siva கூறியது...
  inimai inimai aththanaiyum inimai

  superrrrrrrrrrrrrrrr malliiiiiiii

  //

  மிக்க நன்றி சிவா..

  பதிலளிநீக்கு
 32. crown கூறியது...
  அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரி,வழக்கம்போல் நல்ல கவிதை கூடவே வழக்காடி இருக்கீங்க! ஆம் என்று உன்மையை சொன்னா பொண்டாட்டி தாசன்னு கின்டல் செய்யக்கூடாது, நான் நேசன் அவ்வளவே
  //

  அலைகுமுஸ்ஸலாம். சகோ
  அதெல்லாம் சொல்லமாட்டோம் பயப்புடாதீங்க.

  உண்மையாவா அப்பசரி.இது கிண்டல் அல்ல..
  உண்மையான அன்பை வெளிப்படுத்த ஏந்தயக்கம்..

  பதிலளிநீக்கு
 33. Yasir கூறியது...
  சூப்பர்..மலிக்கா...இது எல்லாத்துக்கும் “ஆம்” தான் கல்யாண முடிந்ததிருந்து...
  என்ன உம்மாதான்...பொண்டாட்டியே நல்லா தாங்குறான் பேர்வழி-ண்டு பட்ட பேர் வைத்து விட்டார்கள்...என்ன செய்ய.....கவிகாக்கா சகோ.சபீர் அவர்கள்..சொன்னதுபோல் ஆண்வர்க்கத்தின் ஏக்கங்களையும் கவிதையாய் வடித்து தாருங்கள்.//

  எதைதான் சொல்லல இதை சொல்லாமலிருக்க சொல்லுறவங்க சொல்லட்டும் நாம் நம்முடைய அன்பில் சரியாக இருப்போம் என்பதை நினைதால் போதும்
  அப்படியேயிருங்கள் அதுதான் அழகு..

  நன்றி காக்கா.

  கவிதானே வடிச்சுடலாம்..

  பதிலளிநீக்கு
 34. மாணவன் கூறியது...
  //இரு மனங்கள் இணைந்து
  இளமனங்களுக்குள்
  இன்பம் நிலைத்திருக்கா!
  இதயங்கள் இணைந்தபின்னே
  இல்லத்தில் ஒளிமயம் கண்டிருக்கா!//

  அருமை இல்லறத்தைப்பற்றி சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்

  தொடருங்கள்...

  வாழ்க வளமுடன்
  நன்றி.//

  வாங்க மாணவன் அன்பான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 35. பெண்மனது புரியாத புதிர் ! என்று எண்ணாமல் விட்டுக் கொடுக்கும் மனம் இருப்பின் வாழ்வு ஒளி மயம் வாழ்க்கை வாழ்வதர்கே என்ற எண்ணம் இழை ஓடச் செய்கின்றது இக்கட்டுரை .

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது