நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உயிரின் வேர்கள்.

பதுமையே பதுமையே-உன்

பட்டுமேனி தொட்டிடவா
பஞ்சுக் கன்னம் தொட்டிடவா
பிஞ்சு விரல் தொட்டுமீட்டி
பிள்ளையுன்னை கொஞ்சிடவா

பூப்போன்று முடிவைத்துக்கொண்டு
பொசுபொசுவென கிடக்கின்றாய்
காதுமடல் நான்தொட்டால்
கைகால்கள் ஆட்டுகின்றாய்

நெற்றிரோமம் நீக்கிவிட்டால்
நெளிந்து வளைந்து கூசுகின்றாய்
இறுக்கி இமைகள் மூடிக்கொண்டு-எனை
இமைக்கவிடாது செய்கின்றாய்

உச்சிமுகர்ந்து பார்க்கையிலே-என்
உச்சிகுளிர வைக்கின்றாய்-என்
உள்ளங்கையில் ஏந்துகையில்-இந்த
உலகே நீயென உணர்த்துகின்றாய்

கருவறையில் இருந்தவரை
காத்துவைத்தேன் ஈரைந்துமாதம்-இனி
கண்ணுக்குள் வைத்துகாத்திடுவேன்
கண்மணியே என் காலம்வரை.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

ஒளியற்ற விழி!

நன்றி கூகிள்
கலர்கனவுகளை சுமந்து
கானலைக்கூட
காணமுடியா காரிருள் சூழ்ந்த
கருவிழிகள்

வெளிச்சமென்றால் என்னவென்று
விபரமறியா கேள்விக்கேட்டு
வெளிறிக் கிடக்கும்
வெள்ளைவிழிகள்

வண்ணத்தை பார்க்கிறதா?
வடிவத்தை பார்க்கிறதா?
விளங்காமல்
விழிக்கும் இருவிழிகள்

வாழ்கையை பார்க்கமுடியா -தன்
வதனத்தை பார்க்கமுடியா
வேதனையில்
வேகிறது  மனச்செல்கள்

விதிபோட்ட முடிச்சில் -சில
விழிக்களுக்கு மட்டும்
விதிவிலக்கானதே விடியல்

காலங்கள் கடக்கிறது
கறுமையின் வெறுமையில்
காற்றோடு கேட்கிறது
கண்ணொளியின் உணர்தல்

கலிகால யுகத்தில்
கண்ணிருந்தும்
குணத்தளவில்
குருடனாயிப்பதைவிட

குருடனாயிருந்து
காலத்தை கழிப்பதே மேலென
கருதுக்கும் சொன்னாலும்
கலங்குகிறது நெஞ்சம்

மனம் கல்லானவருக்கெல்லாம்
மங்கள ஒளியிருக்கும்போது
மென்மையான மனகொண்டோருக்கு
மங்கிய ஒளிகூட முன்னுக்குவர
மறுக்கிறதே யென!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

தூதுபோ..




பாலைவனம் சென்றுவிட்ட
பாவையின் காதலனை

பால்நிலாவே பார்த்துவா
பைங்கிளியின் பாசத்தையும் கூறிவா

வானில் கரைபுரண்டு ஓடும் மேகமே
வஞ்சித்துவிடாமல் கறுத்துவிடு

வான்மழையின் தூறல்கண்டு-மண்
வாசம் வெளியேறி

காற்றோடு கலந்து -என்
காதல்கணவன் நாசியில் ஏறட்டும்.

நான் தூதுவிடும் சுவாசக்காற்று
பால்நிலாவின் ஒளியோடு இணைந்து

மண்வாசத்தோடு கலந்து அவன்
மனதுக்குள் கலக்கட்டும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது