நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

குழந்தைகள் தினம்



சின்னமலர்களே
செல்லமலர்களே
சிரித்து மகிழ்ந்திடும்
சிவந்தமலர்களே


அன்பும் பாசமும் நிறைந்து இருக்கனும்
ஆலைபோலவே தழைத்து வாழனும்
இரக்கம் ஈகையும் நிறைந்து இருக்கனும்
உழைப்பும் ஊக்கமும் தொடர்ந்து இருக்கனும்
எளிமை ஏற்றமும் சகித்து வாழனும்
ஐயமின்றியே துணிந்துவாழனும்
ஒழுக்கம் ஓர்மையும் சிறந்து இருக்கனும்



                                   உங்கள் எண்ணங்கள் உயர்ந்து இருக்கவே
                                   உயர உயரவே முயற்ச்சி செய்யனும்
                                    தாய் தந்தையை மதித்து வாழனும்
                                       தரணி போற்றவே தலை நிமிரனும்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

சிரித்துப்பார்


சிரிப்பு என்பதின் அர்த்தமே சிறப்பு
சிரித்துப்பார் உன் சிந்தனைகள் சிறகடித்துப்பறக்கும்
சிரிக்கும்போது சிந்தும் கண்ணீரில்
சிதைந்துபோன மனம்கூட சுகம்காணும்

புன்னகை சிந்தியபடி சிரித்த முகமாய் இரு
பொல்லாதவர்கூட உன்முகம்கண்டு புன்னகை பூத்திடுவர்
ஒரு பாலைவனமே பூத்து குலுங்கியபோதும்
அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா

சிரிக்கத்தவறியவரின் வீட்டில்சோகங்கள் குடிகொள்ளும்
சிரிப்பதால் சிந்தைகூட சில நேரம் சிலிர்த்துக்கொள்ளும்
நம்மை  மிருக்கத்திடமிருந்து  மாற்றிய மனித மிச்சம்

எதுவுமே அளவுக்கு மீறிவிட்டால் ஆபத்து
சிரித்து வாழ பழகு பிறர் உன்னை கண்டு
சிரித்து வாழ்வதிலிருந்து விலகு..............

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

புதுப்பித்தேன்




கதிரவனின் கதிர்வீச்சை கண்ணடித்தது சிரித்தது

காலைதென்றலுடன் கைகுழுக்கி நடந்தது





அன்னை ஊட்டிவிட அழகாய் உண்டது

அவள்மடியில் படுத்தமடி மயங்கிக்கிடந்தது



ரெட்டை பின்னல்போட்டு ரெக்கைகட்டிப்பறந்தது

மழையுடன் காதல் கொண்டு மறைந்து நின்றது



பட்டுபாவாடை கட்டி பட்டாம்பூச்சியானது

பல்லாங்குழியாடி பரவசம் அடைந்தது



பச்சைக்குதிரை தாண்டி பட்டென விழுந்தது

பாண்டியாடி கோட்டை தவறாய் மிதித்தது



பளிங்கி [கோலி]விளையாடி பத்து பத்தாய் சேர்த்தது

ஒளிந்து விழையாடி ஒப்பீ சொன்னது



கபடியாடி கொண்டு குதூகலம் அடைந்தது

கயிறு தாண்டித்தாண்டி களைத்துப்போனது



தட்டாம்பூச்சி பிடிச்சி மீண்டும் பறக்கவிட்டது

தட்டாமலைச் சுற்றி துள்ளிக்குதித்தது




உயரத்திலிருந்து  குளத்தில் குதித்தது

இக்கரையிலிருந்து அக்கரைக்கு சென்றது



முதுகில் ரெண்டடி வாங்கிக்கொண்டது

முனுமுனுத்துக்கொண்டே மீண்டும் ஓடியது


மனதிற்குள் புதைந்துள்ள மகிழ்ச்சிகளை
மீண்டும் புதுப்பித்து சிறுபிள்ளையாய்




தோன்றி சிறகடிக்கிறது மனம்
இப்படியே இருந்துவிடச்சொல்லி ஏங்குது தினம்...



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது