நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எச்சில் பூக்கள்


நாகரீகம் என்ற பெயரில்
அநாகரீகங்கள் அத்துமீரும்போது-இந்த
அல்லிப்பூக்கள் அறுவடைக்கு வருகிறது

பெற்றோரின்
முகம்காணாயிந்த மொட்டுக்கள்
தவறே செய்யாமல்
தண்டனை அனுபவிக்கும்
சிறகொடித்த பறவைகள்

தன் சுகங்களை மட்டுமே
பெரிதென எண்ணிவாழும்-சில
மனித ஜென்மங்களால்
ஜனனத்தில்கூட ஜடமாகிபோகும்
இச்சின்னஞ்சிறிய சிசுக்கள்

தான் அனாதையாக்கப்பட்டோம்
என்பதையறியாமலே
ஆதரவற்ற நிலையில்
அனாதையில்லத்தில்
அல்லாடும் இத்தளிர்கள்
தான் யாரென அறிந்த பின்னே
துடியாய்த் துடிக்கும்
இந்த பிஞ்சு மனங்கள்

கலாச்சாரத்தின் குரல் வலையை
காலடியில்யிட்டு மிதித்து
நாகரீகத்தின் பிடியில்
சிக்கிச் சீரழியும்
நவநாகரீக கன்றுகளே!

தன்கற்பு எனும் மானத்தை
காத்துக் கொள்ளுங்களேன்
அனாதை என்ற ஒன்றை
இல்லாமல் ஆக்குங்களேன்!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்..

கிடைக்குமா ஓர்வரம்



நம் விழிகள் இரண்டும் விபத்துக்குள்ளானபோது
இடம் மாறிக்கொண்டன இதயங்கள்

எடுத்துசென்ற இதயத்தில் எவ்வித எண்ணங்களையும்
இணைத்துவிடாமல் திருப்பித்தந்துவிடு

தடுமாறி வந்த இதயத்தில் இருக்கிறதாம் ஒரு ஓட்டை
இனி கொஞ்சநாள்தான் நான் சுவாசிக்க முடியுமாம் காற்றை

"ஆதலால்"


தாழ்மையுடன் கேட்கிறேன் தயங்காமல் தந்துவிடு

என் இறப்புக்குப்பின் நீ இயந்திரமாக வாழ்வதை
நான் விரும்பவில்லை

விரும்பி வந்தவளே நான் வெறுத்துவிட்டேன் என்றெண்ணி
உன் வாழ்க்கையை வசந்தமாக்கிக்கொள்-என்று
உன்னிடம் சொல்லிவிட்டேனே தவிர

தவிக்கின்றேன் தினம் தினம் -உன்னோடு
இணைந்து வாழ கிடைக்குமா ஓர்வரம்
என நினைத்து ஏங்குது என்மனம்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

கனவே கலையாதே


விடிந்தும் விடியாத வானம்
கலைந்தும் கலையாத கார்மேகங்கள்
கம்பளிப்போர்வையை இழுத்துப்போர்த்தியபடி நடக்கின்றேன்


புகைப்புகையாய் வந்தகறுப்புக்காற்று என்கன்னங்களை உரச
உதட்டை குவித்து ஊதிப்ப்பார்த்தேன்
கன்னத்தின்வழியே சென்றகாற்று வாயின்வழியே
வெளியேவந்தது நடந்தபடியே கண்களை ஓடவிட்டேன்

பச்சையின்மேல் இச்சைகொண்ட பனித்துளி
புல்வெளியின்மேல் படுத்து உறங்கிக்கொண்டிருக்க
பலவண்ணப்பூக்களும் குளிரில் குளித்து நடுங்க
பூக்களுக்கும் போர்வை நெய்யவேண்டும் என்று
எண்ணியபடி எட்டுவைத்து நடந்தேன்

தூரத்தில் கைக்குள் கைகோர்த்துக்கொண்டு
நடையில்கூட பிரிவினையை விரும்பாத காதலர்கள்
காலோடு கால்கள் பின்னியபடி நடந்துசெல்ல

சூரியகாந்தி பூக்கள்மட்டும் சற்றுதலைதாழ்த்தியபடி
தன் சூரியகாதலனின் வருகையை எதிர்நோக்கி நின்றன
காற்றையும் மீறி கொலுசின் ஓசை காதுக்குள் வந்தது
சுற்றும் முற்றும் பார்த்தபடி வேகமாய் நடைநடந்தேன்



எதிரே மலையரசி தன்மானத்தை பச்சைப்பட்டால்
மறைத்து நிற்க அவளின் இடையோரம்
வழிந்தோடும் வெள்ளையருவி சலங்கை ஒலியோடு
தன் நீரையெல்லாம் பூமிக்குதானம் தந்துகொண்டிருந்தது

இதையெல்லாம் கண்டுரசித்தபடி
குயில்கள்களின் கானங்களைக் கேட்டபடி
மலையின் மகள்மடியில் சற்று அமர்ந்து
கண்களைமூடி கண்டுவந்ததையெல்லாம்
அசைபோட்டுக்கொண்டிருக்கையில்

இருகரங்கள் என் தோள்களை அசைத்தன
கண்விழித்து பார்த்தபோதுதான் தெரிந்தது
கண்டதெல்லாம் அதிகாலை கனவென்பது
கனவுகள் கலைந்தும்
கலையாமல் நான்,,

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது