நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பொசு[ங்]க்காதே!


பெண்ணுக்கு பெண்ணே
பேரெதிரியாகுமோ!
பொல்லாத பொறாமையால்
பூமியே புதைந்து போகுமோ!

பொருமைக் கடலென்றும்!
பூமித் தாயென்றும்!
சாந்த சொரூபமென்றும்!
சர்வமே நீயென்றும்!

சொல்லிச் சொல்லியே
சாந்தமான நீ
சர்வதிகாரியாகிறாயோ!-பிறரை
சந்தியில் நிறுத்தப்போகிறாயோ!

வீசுதடி விசக்காற்று-உன்
வார்த்தைகளில் வீரியத்தில்
குத்திக்காட்டல் வழியாக!
குடும்பம் குலைக்கும் கருவியாக!
வழியசென்று வம்பிழுக்கும்
வரைமுறையற்ற பேச்சாக!

உள்ளம் கொல்லும் விசக்காற்று
வளைத்து வளைத்து வீசுதடி!
ஊதலில்லாமல் பரவிப் பரவி
உலகையே அழிக்க நினைக்குதடி!

உன்னிணத்தை எப்போதும்
எண்ணனுமோ எதிரியாக
எண்ணிவிட்டு இருந்திடுமோ
உன்னுள்ளம் அமைதியாக!
பொல்லாத பெண்மையாக
பூமியில் வாழனுமா?
பூவோடு நாரும் சேர்ந்து
பொழுதுக்கும் மணக்கனுமா?

பொசுங்காதே பொறாமையில்
பொசுக்காதே பிறைரை தீயில்...

டிஸ்கி// இதை அப்படியே ஆணினத்துக்கும்[அதாவது ஆண்பாலுக்கும்] மாற்றிக்கொள்ளலாம். 
நாங்களெல்லாம் நல்லபிள்ளைங்கப்பா அப்படியெல்லாம் சொன்னா யாரும் நம்பமாட்டாங்கப்பா ஹா ஹா]


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

கள்ள உள்ளம்.



குயிலின் கூட்டில்
கள்ளத்தனமாய்
கருநாகம் குடியேறி
குடிலை கலைக்க நினைக்கிறது

வீதியில் செல்வோரை 
வேசியென வாய்கூசாமல் ஏசி
வேடதாரிகளாய்
வெளிவேசம் போட்டுத் திரிகிறது

கழிசடையெல்லாம்
சாக்கடையில் ஓடாமல்
கள்ள உள்ளம் கொண்ட மனதுக்குள்
கரைபுரண்டு ஓடுகிறது

வாழை வீழ்ந்தாலும்
தன் வம்சம் தளைக்க 
தன் வாழையடியை
விட்டுச்செல்கிறது

”ஆனால்”

பச்சோந்திகளாகும் மனங்கள்
தன் வாழ்க்கையை நிறம் மாற்றி
தன் வம்சத்தின் வாழ்வுக்கும்
பழிச்சாயம் பூசுகிறது.


அற்பங்களுக்கு ஆசைப்பட்டு
அடுத்தவர் வாழ்வையும் கெடுத்து
தட்டுக் கெட்டு தடுமாறி
தன் வாழ்வை
தானே சூன்யமாக்கிக் கொள்கிறது

மாற்றாளின் கணவனை
மயக்கும் மனைவியாய்!
மாற்றானின் மனைவிக்கு
மயங்கும் கணவனாய்!..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஏங்கும் நெஞ்சம்




மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே!
மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே!
இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே!
இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே!

[மீண்டும் மீண்டும்]
ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும்
அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்!
ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன்
அணுவுமெங்கும்  அசையாது அவன் துணையு மின்றியும்!

[மீண்டும் மீண்டும்]
இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே
இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே!
இன்னல் இன்பம் இரண்டுங்கொண்டு  வாழ்ந்தபோதிலும்
இடைவிடாது இறையை என்றும் வணங்க வேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
ஈகையென்னும் கொடைகொடுத்து ஏற்றம் காணவே
இரக்கமென்னும் இனியகுணம் நமக்கு வேண்டுமே!
உதவும் மனம் உள்ளிருந்து ஊற்றெடுக்கவே
ஏழை எளியோரை அன்புகொண்டு அணைக்கவேண்டுமே!

[மீண்டும் மீண்டும்]
உயிரிருக்கும் வரைக்கும் எந்தன் உடலும் துடிக்குமே
அந்த ஒருவனையே நினைக்கச்சொல்லி உயிரும் உருகுமே!
உலகம் அழியும் நாள்வரைக்கும் உயிர்கள் தழைக்குமே
அந்த உயிர்களனைத்தும் அவனிடத்தில் திரும்பச் செல்லுமே!

[மீண்டும் மீண்டும்]
இம்மை வாழ்வில் நாமும் செய்த செயல்கள் யாவுமே
இறுதி நாளில் நேரெதிரில் நிறுத்தப் படுமே!
இனிய மார்க்கம் தந்த எங்கள் இறுதி நபியையும்-எங்கள்
இதயங்களும் கண்களும்தான் காணத் துடிக்குமே!

[மீண்டும் மீண்டும்]
அண்ணல்நபி தரிசனத்தை இம்மை மறுமையில்
அடைந்திடவே ஆவல் கொண்டு உள்ளம் ஏங்குதே!
அகிலம் படைத்து அனைத்தும் படைத்து காக்கும் இறைவனே
அந்த ஆவல்களை நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!

தரவும் வேண்டுமே!  
நிச்சயம் தரவும் வேண்டுமே!
நிறைவேற்றித் தரவும் வேண்டுமே!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது