நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆத்மார்த்தமாய்....


மண்டபம் நிரம்பி வழிய
மணக்கோலத்தில் செல்லமகள்
மார்போடு அணைத்ததும்
படபடவென துடித்த நெஞ்சம்
பாசத்தால் பரிதவித்து
புதுவித மன
பாரத்தால் துடித்தது

மழலையான வயதினிலே-என்
மடிசுமந்த முத்துமகள்
மழலையாகி மங்கையாகி
மாலைசூடி மணக்கோலம் பூண்டு
மருகிக்கொண்டே
மறுவீடு செல்லும் நேரம்

சுமந்த மடி சுருங்கி கதற
சுணங்கி சுணக்கி இதயம் நொருங்க
சுரந்து சுரந்து விழிகள் கலங்க
குருதி மொத்தம் நரம்பில் உறைய
குரலும் நடுங்கி உதறி உடைய
சொல்லயியலாச் தாயின்துயரம்
சொல்லில் வடிக்கத் தெரியாத்
சேயின் நிலையும்

மகளாகத் தூளியாடி
சினேகிதியாய் துயர்கள் நீக்கி
உறவாடிய உயிர்கள் இரண்டு
உருகியபடியே
விட்டுப் பிரிந்த பொழுது
புழுங்கித் தவித்தது
கரு சுமந்த மடியும்
பால் சுரந்த மாரும்
பாசத்தை சுமந்த மனதும்

தோழியாக இருந்தமகள்
தோள்சாய்ந்து கிடந்தமகள்
கண்ணுக்குள்ளே காத்தமகள்
கணவனோடு கைகோர்த்தாள்
இணைந்த கைகள்போல
இதயங்கள் இணைந்து இனிக்க
காலந்தோறும் கண்கலங்காது
கஷ்டமேதும் நெருங்காது
காக்கவேண்டும் வல்ல நாயன்

அன்பும் அறணும் அவள்பேணி
அனைவரும் புகழ மகள்வாழ
அன்னை நெஞ்சம் உருகியபடி
அகிலம் காக்கும்  இறைவனை
ஆத்மார்த்தமாய் வேண்டுகிறேன்..........

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என்னது மீண்டுமாஆஆஆ!


அன்புள்ளங்களே!
அனைவரும் எப்படியிருக்கீங்க. நலமா?
சுகமா? செளக்கியமா?

நீஈஈஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்கு பின் கிடைத்த சற்று நேரத்தில் உங்களுடன் உறவாட ஓடோடி வந்துவிட்டேன்.அன்பு நெஞ்சங்கள் அனைவரும் இறைவனின் உதவியால் நலமோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

உங்கள் படைப்புகளெல்லாம் எப்படி போகுது?. வலையுலகம் ஒரு தனியுலகமாக இயங்குவது சந்தோசமே!

கடந்த இடைப்பட்டகாலத்தில்  உங்களின் பதிவுகளை நிறைய படிக்கமுடியாமல் போனதும்.நீரோடையில் கவிதை நீரின் ஓட்டம் சற்றே  தேங்கமடைந்ததும்  . சற்று மனதுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சூழல்களை அனுசரி்க்கும்,நம் முக்கிய கடமைகளிலும் கவனம் செலுததவேண்டிய பொருப்புகளும் மிக மிக முக்கியமல்லவா! அதனை சரிவர செய்துமுடித்த திருப்தியோடு மீண்டும் உங்கள் முன். 

என்னது மீண்டுமாஆஆஆ. யாருப்பா அது அதிர்ச்சி அடைவது சரி சரி எத்தனையோ சகிச்சிகிறீங்க இதையும் அப்படியே நெனச்சிகீங்களேன்.
ஹா ஹா ஹா..

நெஞ்சத்தின் சில அதிர்வுகளை
நிலைகொள்ள பலநிகழ்வுகளை
நித்தம் நடக்கும் நிகழ்வுகளை
எண்ணத்தால் கோத்து
எழுத்து வடிவில் ஏட்டில்
விரல்வழியே வடிக்க
விரைவில் வருகிறேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
.

அன்பு உள்ளங்களுக்கு!

வாழ்க்கையில் சில வெற்றிகள் சிலதோல்விகள் வந்துபோகும். வருவதெல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியாவிட்டாலும் என்ன செய்யனும் என்பதை புத்தியில் தீட்டிவைக்கலாம், அதனை செயல்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்குபோது பயன்படுத்திக்கொள்ளலாம். சில சமயம் சந்தர்ப்பம் நம்மைத்தேடிவரும் சிலசமயம் நாம்தான் அதைத்தேடிப்போகனும். எதற்க்கும் மனம் தளர்ந்துவிடாமல் இறைவனின் நினைவோடும் அவனின் துணையோடும் உங்கள் வாழ்க்கைபயணத்தை தொடருங்கள். நடப்பது எல்லாம் நம் நன்மைக்கே!

என்ன தத்துவமா அப்படினெல்லாம் கேட்கக்கூடாது. 
பாலைவன வாழ்க்கைக்கு குட்பாய் சொல்லும் நாள் இன்று. இறைவன் நாடினால் மீண்டும் அக்கரையிலிருந்து இக்கரைக்கு..

ஓகே நான் ஊருக்கு போகிரேன் ஊருக்கு போறேன்.
இன்று மதியம் கிளம்புகிறேன்..அப்பாடா போயிட்டு வாம்மா நாங்க கொஞ்சநாளைக்கு நிம்மதியாயிருக்கோம் கவிதைங்கிறபேர்ல திணராமா அப்படினெல்லாம் நெனப்பிங்களோ! ச்சே சே நினைக்கமாட்டீங்க.. மச்சான் கொஞ்சம் லேட்டா வருவாங்க அவங்களை பத்திரமா அனுப்பிவைங்கப்பா.

கொஞ்சநாளைக்கு நீரோடை மற்றும் உங்கபக்கமெல்லாம் வரமுடியாதுன்னு நினைக்கிறேன். இருந்தாலும் நேரம் கிடைக்கிறப்ப வந்து உங்க எல்லாரையும் எட்டிப்பார்த்துவிட்டுபோவேன். நீங்களும் நம்மள மறந்துடாதீங்கோ..

அன்பைகொண்டு இவ்வுலகம் சுழலுமாயின் எம்மனிதரின் உள்ளமும் அழுக்கடையாது ஆனந்தத்தில் திழைத்திருக்கும்..
நான் பலநேரம் தாங்களின் கருத்துரைகளுக்கு பதிலளிக்காதிருந்திருப்பேன் நேரமின்மை காரணமாக அதையும் பொருந்திக்கொள்ளவும் எவ்வகையிலாவது உங்கள் மனம் சங்கடப்படும்படியோ! வருத்தப்படும்படியோ நடந்திருந்தால் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள். உங்கள் அனைவரின் நினைவுகளிலும் அன்பிலும் பிராத்தனையிலும் எனக்கான பங்கு எந்நாளும் இருக்கட்டும்...

இறைவா! 
எங்களின் பயணத்தை எவ்வித சிரமமும் இன்றி உனது துணையோடு அமைத்துதருவாயாக!
உலகிலுள்ள அனைவருக்கும் சாந்தியையும் அருளையும் தந்தருள்வாயாக!!!
உங்கள் அனைவரின் ஆசிகளும். வாழ்த்துகளும். எந்நாளும் எதிர்பார்ர்க்கும்
உங்கள் அன்பு மலிக்கா
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது