என்ன என்ன சந்தேகம் அப்படின்னு கேக்குகிறீர்களா? ஒன்னுமில்லை சும்மாதாங்கோ ஒரு மாற்றம் வேணுமுன்னுல்ல.
எப்பபாத்தாலும் நாமளே பதில் சொல்லிகிட்டு இருக்கோமே ஒரு தபாவாச்சி நாம கேள்வி கேட்போமேன்னுதான், என்ன கேட்கலாம்தானே! இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்
உங்ககிட்டேர்ந்து நான் அறியாதவைகளை அறிந்துகொண்டு
நாங்களும் கொஞ்சம் அறிவாளியாகளாமுன்னுதான்.அதோடு அனைவருக்கும் அறியப்படுத்தவும்தான்
ஓகே ஸ்டாட் ரெடி.
1. ஆண்பெண் சுதந்திரம் என்றால் என்ன?
அந்த சுதந்திரம் எப்படியிருக்க வேண்டும்
இந்த சுதந்திரத்தால் பலனா? பாதிப்பா?
2. ஆணும் பெண்ணும் சமமா? சமம் என்றால் எப்படி?
அந்த சமத்தால் பலமா? பாதிப்பா?
3. பிறரை எளிதில் இளக வைக்கக்கூடியவர். அல்லது பிறரிடம் எளிதில் இளகிவிடுவது யார்? ஆணா! பெண்ணா?
4. ஆண் . பெண். என்றால் எப்படி இருக்க வேண்டும்
இப்படிதான் இருக்க வேண்டுமென வரையறை இருக்கா?
இல்லை எப்படிவேண்டுமென்றாலும் இருக்கலாமா?
5. தன்காலமுழுவதும் தனக்கு துணையாய் இருப்பவர்[வரபோகிறவர்] எப்படியிருக்க வேண்டுமென ஆண் பெண் இருவரும் விரும்புவார்கள். அப்படி விரும்புவது ஏன்?
டிஸ்கி//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒருவழியா கேள்விகளை கேட்டுட்டேன். இதற்கு விதண்டாவாதமாகவோ. சும்மாவாச்சிக்குமோ
பதில் தராமல் உளப்பூர்வமாக, உண்மையான பதில்கள் தரவேண்டும். இது நான் மட்டும் அறிந்துகொள்ளவல்ல, நம் அனைவருமே அறியத்தான். அறிய அறியத்தானே அறிதலில் ஓர் தெளிவு உண்டாகும்.[ஆத்தி,,,, அதுக்குமீறி சேட்டைபண்ண வாரவுகளுக்கு இங்கே இடமில்லை சொல்லிபுட்டேன் ஆமா ஓகேவா?
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
இது நமக்கு புதுசு.[எனக்குள் நான்]
என்ன கவிதையைக் காணோமேன்னு பாக்குறீகளா. இதோ இந்த பொட்டிய கிளிக் பண்ணுங்க வரும்.
எல்லாரும் புதுசு புதுசா யோசிக்கிறார்களே! நீமட்டும் ஏண்டி மல்லி மக்காவேயிருக்கேன்னு மண்டைக்குள் ஒரே சலசலப்பு.
நாமெயென்ன பட்டப்படிப்பா படிச்சிகிறோம். ஏதோ அறிஞ்சதவச்சி இப்படி சும்மா பிலிமுகாட்டிக்கீனுகீறோம்.
நமெக்கென்ன தெரியும், இருந்தாலும் முயற்சிப்போமேன்னுதான்
இத செய்தேனுங்க!
நல்லாயிருக்குதான்னு கொஞ்சம் கிளிக் செய்துபார்த்து கருத்துசொல்லுங்க மக்கா. கிளிக் கிய பிறகு நல்லாயின்னா என்ன செய்வதாம். ஆங் அதை சொல்லிப்புடுங்க மக்கா. அப்பதானே அடுத்த கட்டத்துக்கு இல்லயில்ல இந்தகட்டத்தையே சரிசெய்யலாமுல்ல.
என்ன அடுத்தகட்டம் போகலாமா? இல்லை இதையே சரிசெய்யனுமா?இல்லை வழக்கம்போலதான் எழுதனுமா? எதுன்னாலும் சொல்லுங்கப்பு..
அப்பால இதான் அதுக்குள்ள இருகிற கவிதைகள்.
உன் உச்சி முகர்கையில்
என் நாசியின் வழியே
உட்செல்லும் உன்சுவாசம்
எனக்குளிருக்கும்
உயிரை குளிரச் செய்கிறது
உன் ஸ்பரிசத்தால்.
மலரைவிட இந்த
மழலையழகு-பூத்துசிரிக்கும்
மழலை கண்டு
பூரித்து விரிகிறது
தன்னிதழசைத்து
மெல்லிய புன்னகையால்.
தேனெடுக்க வண்டாய்
தன் காதலன்
சுற்றுவது கண்டு
தேன்மொழியால் தேன் தடவி
தன்னிதழை வைத்தாள்
சொக்கத்தங்கம் இதழ்களிலே
சொட்டுகின்ற தேனைக்கண்டு
சுற்றிவரும் வண்டினமாய்
சொக்கிபோய் நின்றான்
நீந்திச் செல்லும்
நிலவொளியே வா வா
உன்னொளியால்
என்னுறக்கம் களைத்துவிட்டு
நீ மட்டும் நிம்மதியாய்
நீலவானில் நீந்துவது சரியா
உன்னொளிக்குள்
ஒளிந்துவிளையாடவேண்டும்
வா வா
அடியே!
அழகிய மலரே
நீ, நீரில்
ஆடிபாடுவது கண்டு
எனக்குள் காய்ச்சலடிக்கிறது
நீருக்குள் நானும் வந்துவிடவா
நீயும் நானும் சேர்ந்தாடி
என் காய்ச்சல் தனிக்க.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
”வாய்ப்பும் வியப்பும்”
வியப்பு வியப்பு
விண்கண்டு,
விண்ணில் உலவும் வினோதங்கள் கண்டு
மண்கண்டு,
மண்ணில் உலவும் மனிதர்கள் கண்டு
வான்கண்டு,
வான்தூவும் மழைகண்டு
வனம்கண்டு,
வனத்திலும் இனம்கண்டு
பூக்கும் பூமிகண்டு,
பெண்மையும் பூப்பது கண்டு
பூவைவண்டு உண்பது கண்டு
பூவைக்குள் பூகம்பம் வெடிப்பது கண்டு
உச்சியிலெழும் அருவிகண்டு
உருண்டுவிழும் அழகுகண்டு
உடலில் ஓடும் உயிர்கண்டு
ஊடுருவிப்பாயும் குருதிகண்டு
ஊர்ந்துசெல்லும் உயிரினம் கண்டு
மூச்சிகாற்று சுழல்வது கண்டு,
மூங்கிலில் இசை வருவதுகண்டு
முற்றத்தில் குருவி வந்தமர்ந்து,
முனங்கும் பாடல் கண்டு
ஆணும் பெண்ணும் இணைவதுகண்டு,
அதிலுருவாகும் உயிர்கள் கண்டு
அழிந்துவிடும் எனத்தெரிந்தும்,
ஆட்டம்போடும் உடல்கள் கண்டு
காகிதம் மனிதனை ஆள்வது கண்டு,
கானல் தண்ணீராய் தெரிவது கண்டு
காதல் காதல் காதலென்று,
கலங்கித் தவிக்கும் மனங்கள் கண்டு
பாசங்கள் மறந்து பணத்தின் பின்னே
பேயாய் அலையும் மனிதர்கள் கண்டு
பொய்முகம் புனைந்து வாழ்வது கண்டு,
பண்புகள் நாளும் குறைவதுகண்டு
பிறப்பும் இறப்பும் கண்டு,
பயப்படாமல் பாவம் செய்வது கண்டு
இறுதியாய்
என்வீட்டுக்கு கண்ணாடியில்
என்னைக்கண்டு, என்விழிகள் கண்டு
எனக்குள் எழுந்தடங்கும்
எண்ணங்கள் பலகண்டு
வியப்பு வியப்பு
இருவிழியும் மனவிழியும்
விரியும் வியப்பு
வியப்பால் வியக்க வைத்து
வித விதமானவைகளையும்
வினோதங்களையும்,
வியப்போடு அறியத் தந்த - ஏக
இறைவனை
வணங்க கிடைத்திருக்கும்
இந்த அரிய வாய்ப்பு
இவ்வுலகில் எனக்குக் கிடைத்த
இன்றியமையா இப்பிறப்பு....
டிஸ்கி// இது ஒரு கவிதைபோட்டி, இந்த தலைப்பை தந்து எழுதச்சொன்னார்கள் எழுதிவிட்டேன்.
நம்ம கிறுக்கள் பாசையில். வரும் 24 நாளாந்தேதி முடிவாம்,
ஏதாவது தேறுமா? நீங்களும் சொல்லுங்களேன் எப்டிக்கீதுன்னு.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
விண்கண்டு,
விண்ணில் உலவும் வினோதங்கள் கண்டு
மண்கண்டு,
மண்ணில் உலவும் மனிதர்கள் கண்டு
வான்கண்டு,
வான்தூவும் மழைகண்டு
வனம்கண்டு,
வனத்திலும் இனம்கண்டு
பூக்கும் பூமிகண்டு,
பெண்மையும் பூப்பது கண்டு
பூவைவண்டு உண்பது கண்டு
பூவைக்குள் பூகம்பம் வெடிப்பது கண்டு
உச்சியிலெழும் அருவிகண்டு
உருண்டுவிழும் அழகுகண்டு
உடலில் ஓடும் உயிர்கண்டு
ஊடுருவிப்பாயும் குருதிகண்டு
ஊர்ந்துசெல்லும் உயிரினம் கண்டு
மூச்சிகாற்று சுழல்வது கண்டு,
மூங்கிலில் இசை வருவதுகண்டு
முற்றத்தில் குருவி வந்தமர்ந்து,
முனங்கும் பாடல் கண்டு
ஆணும் பெண்ணும் இணைவதுகண்டு,
அதிலுருவாகும் உயிர்கள் கண்டு
அழிந்துவிடும் எனத்தெரிந்தும்,
ஆட்டம்போடும் உடல்கள் கண்டு
காகிதம் மனிதனை ஆள்வது கண்டு,
கானல் தண்ணீராய் தெரிவது கண்டு
காதல் காதல் காதலென்று,
கலங்கித் தவிக்கும் மனங்கள் கண்டு
பாசங்கள் மறந்து பணத்தின் பின்னே
பேயாய் அலையும் மனிதர்கள் கண்டு
பொய்முகம் புனைந்து வாழ்வது கண்டு,
பண்புகள் நாளும் குறைவதுகண்டு
பிறப்பும் இறப்பும் கண்டு,
பயப்படாமல் பாவம் செய்வது கண்டு
இறுதியாய்
என்வீட்டுக்கு கண்ணாடியில்
என்னைக்கண்டு, என்விழிகள் கண்டு
எனக்குள் எழுந்தடங்கும்
எண்ணங்கள் பலகண்டு
வியப்பு வியப்பு
இருவிழியும் மனவிழியும்
விரியும் வியப்பு
வியப்பால் வியக்க வைத்து
வித விதமானவைகளையும்
வினோதங்களையும்,
வியப்போடு அறியத் தந்த - ஏக
இறைவனை
வணங்க கிடைத்திருக்கும்
இந்த அரிய வாய்ப்பு
இவ்வுலகில் எனக்குக் கிடைத்த
இன்றியமையா இப்பிறப்பு....
டிஸ்கி// இது ஒரு கவிதைபோட்டி, இந்த தலைப்பை தந்து எழுதச்சொன்னார்கள் எழுதிவிட்டேன்.
நம்ம கிறுக்கள் பாசையில். வரும் 24 நாளாந்தேதி முடிவாம்,
ஏதாவது தேறுமா? நீங்களும் சொல்லுங்களேன் எப்டிக்கீதுன்னு.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)