நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நாயா? நானா?

அம்மா அம்மா என்னப்பாரு
அதையும் கீழே எறக்கிவிடு
வயித்துல என்ன சுமந்தியே-இப்போ
வழியில சுமக்க முடியலையா!

அம்மா அம்மா இதக்கேளு
அழுது சொல்லுறேன் கொஞ்சங்கேளு
நாயின் வாழ்வைப் பார்த்தயா!
நா அழறதுக்கூட கேக்கலையா!

பிஞ்சுவிரலை பிடித்துக்கொண்டு
பரக்கப் பரக்க போறாயே
ஒன்னோட வேகத்துக்கு-என்னால
ஓடிவரவும் முடியலையே!

பச்சபுள்ள என்னையும்தான்
பரிதவிக்கவிட்டு விட்டு
செல்லப்பிரணி என்பதனால்
சோக்கா தோளில் சுமந்தாயோ!

நாலுகாலு இருந்தபோதும்
நாயை நடக்க விடுவதில்லை-ஆனா
நான் தத்தித் தத்தி நடக்கிறனே
தடுக்கிக் கீழே விழுகிறனே

பெத்தவளே பெத்தவளே
பிள்ளை சொல்றதக் கேளம்மா
பெத்தெடுத்த பிள்ளையைவிட -உனக்கு
பாசம் அந்த பிராணிமேலா?

உன்பொறுப்பைக் கண்டு வருந்துகிறேன்
உனக்கு மகளாய் வெதும்புகிறேன்
நாயிக்குயிருக்கும் நன்றிகூட
நானிருக்க மாட்டேனென்று நினைத்தாயோ!

அடுத்த ஜென்மம் ஒன்னிருந்தால்
அதில் நீ எனக்கு மகளாகு
பாசமென்றால் என்னவென்று-உனக்குத்
பாடம் படித்துத் தருகின்றேன்...

டிஸ்கி//இதை பாட்டாப் பாடுங்கோ பாப்போம் அம்மா இங்கே வா வா அந்த ரைமிங்கில்[யாரு[ம்மா]ப்பா இந்த போட்டோவ எடுத்தது. அல்லாரும் சாக்கிரதையா இருங்கோன்னு யாரோ பின்னால் இருந்து எச்சரிக்கிறாங்கன்னு நெனக்கிறேன். கையில கேமரவோட அலையுறாக பாத்துங்கோ] ஏன் கேக்குறீங்க இந்தபோட்டோவை பார்க்கசொல்லி கிட்ட தட்ட எனக்கு 20. 25 மெயில்கள்..

அதிலிருந்த வாசகங்கள் ஒவ்வொன்றும் மனதை கஸ்டப்படுத்தினாலும். இன்றைய சில அம்மாக்கள் இப்படியிருப்பதால் எல்லாருக்கும் சேத்து எழுதுறாங்க. என்ன செய்ய ஒரு பானைசோத்துக்கு ஒருசோறு பதமாம். இது எந்த ஊரு நியாங்க.. என்ன கொடுமையிது. அப்படின்னு தலைப்பு வேறு..
இதபாத்த நம்ம மூளை சும்மாயிருக்குமா அதான் இருக்கும் கொஞ்சூண்டு மூளையை  கசக்கிப்பிழிஞ்சி கவிதையின்னு கிறுக்கியிருக்கேன். இதை எழுதியது யார்மனதையும் நோகடிக்கவல்ல. அப்படியிருப்பின் பொருந்திக்கொள்ளவும்..

இப்படத்திற்க்கு ரியாஸ் எழுதிய கவிதை


ஏ.. நிலவே

பூமிக்கு
வந்துவிடாதே
வந்தால்
என் நிலைதான்
உனக்கும்.


துண்டு போட்டு
பங்கு
போட்டுக்கொள்வார்கள்
மனிதர்கள்..
மழைக்கு
காத்திருப்பது போல
பின்
இவர்கள்
இரவுக்கும்
காத்திருக்கலாம்.

ஆமாம்மா செய்தாலும் செய்வாங்க!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா!

நீயின்றி நானேது!....


எனைத்தொடரத்தான்
உனைப் படைத்தானோ!
இல்லை-எனக்குள்
உனைப் புதைத்துதான்
எனைப் படைத்தானோ!

என்னில் நீ
முழுமையாகி -நான்
எழும்போதும் விழும்போதும்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
முன்னும் பின்னும்
என் எல்லா நிலைகளிலும்
எனக்குளாகிவிட்டாய்!

சிலவேளை
உனைக்கண்டு நான் அதிர!
பலவேளை
எனைக்கண்டு நீ மிரள!

என்னைப்போலவே நீயிருந்தும்
எலும்புகள் ஏதும் உனக்கில்லாததும்!
என் உருவம் அழகாய் இருக்கையில்
எனக்குளிருக்கும் நீ
நிழலாய் தெரிவதும்
உலகப் பாடம் படித்திடவே
மனசாட்சி
நிழல்ப் படமாய் தெரிகிறதோ!

நான் தவறிடாவாறு
கண்கானிக்கிறாய்-என்
மனம்போன போக்கை
கண்டிக்கிறாய்!
மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!

நீ
என்கூடவே வரும்வரை
என்னக்கில்லை மரணம்
நீ
என்னைவிட்டுப் பிரிந்தபின்
எனக்கேது உலகிலே உறைவிடம்.

டிஸ்கி// இப்படத்திற்கான /சிநேகிதன்/ அக்பரின் கவிதை
மரக் காதல்
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்..

அக்பர் அங்கேயே நிற்கச்சொல்லி நிலாவுக்கு தூது அனுப்பிச்சாச்சி ஓகேயா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

அதிரைக்கு கிடைத்தது அங்கீகாரம்

அதிரை. யுனிக்கோட் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில்: உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

"உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பி அவர்களின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் ஓர் அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர் இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி.

உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டி நான் ஒரு பதிவை என் வலைதளமான கலைச்சாரலில் April 21, 2010 8:59.க்கு போட்டேன். அதில் நிறைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் இருந்தது. அத்துடன் அப்பதிவிலேயே சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் வலைத்தளப் பதிவில் போட்டால் மட்டும் போதாது. இக்கோரிக்கை நேரடியாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இது அரசு சம்மந்தப்பட்டது எதையும் நேரடியாக செய்யவேண்டும் என்றார்கள். அதனால் அவர்களை மெயில்மூலம் தொடர்புகொண்டு என்ன செய்யவேண்டுமென விபரம் கேட்டேன். அவர்கள் மெயில் ஐடிகள் தந்தார்கள்.

இதை இப்படி இப்படிசெய்யவேண்டும். இன்ன இன்னாருக்கு கடிதம் அனுப்பவேண்டுமென விபரமாக சொன்னார்கள். அவர்கள்சொன்னதுபோல் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு . Tue, Apr 27, 2010 at 6:40 AM அன்று கடிதம் எழுதினேன்

அக்கடிதத்தோடு, நான் கலைச்சாரலில் போட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை கருத்துரைகளையும் சேர்த்து மாண்புமிகு துணை முதல்வர் வலைதளத்தின் தலைமை நிர்வாகியான திரு ஹசன் முகம்மது ஜின்னா அவர்களுக்கு, துணை முதல்வர் பெயரில்

Wed, 5 May 2010 10:23:11அன்று உமர் தம்பி தொடர்பான கோரிக்கை அனுப்பினேன்...
இதுதான் நான் துணை முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிலிருந்து சில.
""மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சார் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
என் அன்பான வாழ்த்துக்களுடன்...
வலைதள தமிழை பயன்படுத்தும் தமிழன் என்ற முறையில்,
ஓர் தமிழனுக்கு ஓர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்க்கு,
தாங்கள் 'கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்' அங்கீகாரம் கிடைக்கும் - தாங்கள் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவீர்கள் எனும் நம்பிக்கையில்  அயல்நாட்டில் வாழும் தமிழர்களின் சார்பாக
இக்கோரிக்கை மனுவினை தங்கள் முன் வைக்கிறேன்...

அனுப்புனர்:
திருமதி. மலிக்காஃபாரூக்

அடுத்தடுத்து யார் யார்க்கு மெயில் அனுப்பனுமோ அவர்களுக்கெல்லாம் மெயில்கள் அனுப்பினேன். அனுப்பியதோடல்லாமல் இடையிடையே விசாரித்துக்கொண்டேயிருந்தேன்.

அதன் காரணமாய். திரு.ஹசன் முகமது ஜின்னா அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டுபோய்... துணை முதல்வர் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கு பரிந்துரை செய்து, இது தொடர்பான குழு அமர்ந்து, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அதன் தொடர்ச்சியாக மாநாட்டினை முன்னிட்டு மாணவர்களுக்கான கணினி போட்டி நடைபெறுகிறது.. அப்போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறும் மாணவருக்கு செம்மொழி இணைய மாநாட்டில் "உமர் தம்பி விருது" வழங்க உத்தேசித்து. பின்பு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையதள மாநாடு நடைபெறும் ஐந்து அரங்கத்தில் ஓர் அரங்கினுக்கு "உமர் தம்பி அரங்கம்" என உமர் தம்பி அவர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளது தமிழக அரசு.

இறைவனின் உதவியால் உமர்தம்பி அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அதோடு இதற்கு பேருதவியாக இருந்த நல்லுள்ளங்கள். சகோதரர் காஞ்சி முரளி, திருவாரூரில் பிறந்த சகோதரர், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா, உலக தமிழ் மாநாட்டு செயலாளர் திரு. அலாவூதீன். அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.

என்னுடைய இந்த அன்பான வேண்டுகோளை ஏற்கச்சொல்லி திரு. ஹசன் முகம்மது ஜின்னா அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சொல்லியபோது மறுக்காமல், செய்ய சொல்வதாய் சொல்லியதோடு இல்லாமல் அதை நிறைவேற்றிதந்த

”உமர் தம்பி அரங்கம்” பெயர் வைத்திட முழுக்காரணமாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

ஒரு நல்ல விசயத்துக்காக என்னாலான சிறு உதவி. இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திய இறைவனுக்கே என் சிரத்தை தாழ்த்துகிறேன்..

எந்த ஒரு அடியானும் அவன் சக்திக்குமீறி சோதிக்கப்படுவதில்லை.
அதேபோல் எந்த ஒரு நல்ல மனிதருக்கும் அவரின் நல்லதொரு செயல்களுக்கு தகுந்த கூலி வழங்கப்படாமலிருப்பதில்லை என்பது இறை வாக்கு. அதன்படி தான் உயிரோடுயிருக்கும்போது செய்த நல்லதொருக் காரியம், தான் இறந்தபின்னும் உலகவாசிகள் பயனடைவதுபோல் செய்து சென்ற உமர்தம்பி அவர்களுக்கு, தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் சாலச்சிறந்ததே!

இது நன்மை செய்தவருக்காக இறைவன் அளித்த நற்கூலி அல்கம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே...

நான் கலைச்சாரலில் இட்ட பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

டிஸ்கி// எனது தந்தையும் அதிரையென்பதால்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..
இத்துடன் நான் சகோதரர் தாஜுதீன் அவர்களின் பதிவில் இட்ட கருத்துரைகளும். சகோதரரின் பதில்களும்.

அன்புடன் மலிக்கா, Thursday, April 22, 2010
நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.
நானும் இப்பதிவை போட்டுள்ளேன்.
http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html
தாஜூதீன், Thursday, April 22, 2010
அன்புடன் மலிக்கா.
வருக்கைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா, தங்களின் வலைப்பூவிலும் இந்த வெளியிட்டதற்கு மிக்க நன்றி. இந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.
அன்புடன் மலிக்கா, Sunday, May 02, 2010
அன்புச்சகோதரர் அவர்களுக்கு.
இது சம்மந்தமாக தெரிவிக்கவேண்டி இடத்திற்க்கு என்னால் ஆன ஒரு சிறு முயற்ச்சியை செய்துள்ளேன்.
அந்த முயச்சிக்கு பலன் [கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்கு]நிச்சயம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
தாஜூதீன், Sunday, May 02, 2010
சகோதரி மலிக்கா அவர்கள், உங்களின் தனிப்பட்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உண்மையில் உங்களை போன்ற மற்ற தமிழ் ஆர்வளர்களின் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும் என்று நம் அனைவரின் நம்பிக்கை.
 நம்பிக்கையின்படியே இறைவன்  நிறைவேற்றித்தந்துவிட்டான்..அல்ஹம்துலில்லாஹ்!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது