நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இதயசாரலில் இனிக்கும் எண்ணங்கள்

மரகத பெண்பூவே!
மஞ்சம் தந்த மாமயிலே
தாய் மடித்தேடி வந்த
மஞ்சள் நிலவே
தாய் தந்தையின்
தாரகை மலரே

தேகங்கள்
மையம் கொண்டிட
தேவதையாய் வந்தவளே!
தேன்சிந்தி நின்றவளே!

நீ
பிறந்த பொன்தினம்
பாரெங்கும்
பைந்தமிழ் ஓசைக்கேட்டதடி
எங்கள் காதினில் வந்து
அவை ஒலித்ததடி

நீ
வளர்ந்த ஒவ்வொரு நாளும்
வாசல்தேடி வசந்தங்கள் வந்ததடி
எங்கள்
வாழ்க்கையில் வண்ணங்கள் பூத்ததடி

வண்ணமயிலே
நீ வாழ்ந்திடு
பல ஆண்டுகாலம்
உன் வாழ்க்கை முழுதும்
சிறந்து விளங்கட்டும்
ஆனந்த விழாக்கோலம்

அன்பு மகளே!
அடுத்தவர் ஆயிரம்கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
அடங்காது எங்கள்
ஆருயிர் நெஞ்சம்

அன்போடு நீ,,
கிள்ளிக்கொடுத்தால் போதும்
அதுபோதும்
எங்களுக்கு எப்போதும்

இதயங்கள் இணைந்ததால்
இனியசாரல் அடிக்குதடி
உன்னால் -எங்கள்
இதயக்கூட்டுக்குள்
எண்ணங்களெல்லாம்
இனிக்குதடி.........

டிஸ்கி// இந்த கவிதை என் அன்பான நட்பின்
மகள் சாருஸ்ரீ யின். பிறந்தநாள் பரிசாக நான் எழுதிய கவிதை.
இணைய இதழ் தமிழ்குறிஞ்சியிலும் வெளிவந்துள்ளது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

யாதுமாகி…...

அனைத்து அன்னையர்க்கும்
[அன்னையாக்கிய தந்தைகளுக்கும்]
 என்மனமார்ந்த
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...!!



அன்னையவள் மடிதனிலே
                              அகிலமதை கண்டேன்
அதையுணர்ந்த போதினிலே 
                    மனம் மகிழ்ந்து கொண்டேன்
நான் பிறக்கும் வேளைதனில்
                       வேதனைகள் கொண்டாள்
நாள்தோறும் எனக்காக
                       கண்விழித்து நின்றாள்

தாயவளாள் மட்டுமே -
                தன்னிகரற்ற அன்பைத் தரமுடியும்
தந்தையின் அன்பினையும்
                        சேர்த்து தர இயலும்
அகிலத்தை காட்டிடவே
                        அன்னையவள் வந்தாள்
அனுதினமும் நினைதிடவே
                       அன்னையென ஆனாள்
அன்னையவள் நெஞ்சினிலே
                       அன்பொழுகக் கண்டேன்
அணைத்து எனை நிற்கயிலே
                      அசையாது நின்றேன்
நான் வளரும் வேளைதனில்
                       வேலியாய் நின்றாள்
நம்பிக்கை ஊட்டியே
                    எனைக் காத்துக் கொண்டாள்

காயங்கள் நான்படவே
                           ரணமாகிப் போனாள்
கண்ணுக்குள் எனைத்தாங்கி
                   கலங்காமல் பார்த்தாள்
காலங்கள் கடந்திடவே
                     நான் தாயாகிப் போனேன்
கண்ணிமைக்காமல் அப்போதும்
                      எனைப்பார்த்துக்கொண்டாள்
அன்னையவள் காலடியில்
                        சொர்க்கமதை உணர்ந்தேன்
அதையுணர்ந்த போதினிலே
                       அகிலத்தை மறந்தேன்
யாதுமாகி  எனக்காக
                      தன் வாழ்க்கை வாழ்ந்தாள்
சேயாகி நானுமதை
                    உணர்ந்திடவே வைத்தாள்

தாயாக  எனைத்தாங்கி
                  செய்தஅத்  தனையும்
தள்ளாட்டம் வரும்
                வயதில் முடியாமல் போகும்
சேயாக நானிருந்த போதும் –
              செய்வேன் பணிவிடைகள் அத்தனையும்
தாயாகி நானும்....

டிஸ்கி// ராகத்தோடு படியுங்கள் ரம்மியமாய் இருக்கும்.
ஒருவார உடல் இன்னல்களுக்கு பின் புத்துயிர்தந்தது அன்னையை நினைத்து எழுதிய கவிதை..
இன்று ஒருநாள் போதுமா? அன்னையை வாழ்த்த!
வாழும் காலம்தோறும் மறந்திடாத பாசம் அன்னையின் அன்பானநேசம் மட்டுமே!
அது சரி தந்தையர்கள் தினம் எப்போது?//

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் மனசு

[facebook. கவிதைகள்.]

                                                              /நன்றி கூகுள்/

என்னிடமில்லை -நான்
என்று உனைக்கண்டேனோ-அன்றே
என்மனசு எனையறியாமல்
உன்மனதோடு இணைந்து
உள்ளத்துக்குள் சென்று
உறைந்துவிட்டது

இனி

என் மனசுக்கென்று
எதுமில்லை
எல்லாம் உன்வசமே
என்னில் நீயாய்
உன்னுள் நானாய்
உயிரெழுதோடு மெய்யெழுத்துப்போல்
உயிருக்குள் உதிரமாய் ஓடியது

என்மனசும் உன்னிலும்
உன்மனதும் என்னிலும்...

டிஸ்கி// என்மனசு அல்லது என் மனது. தலைப்புக்கு கவிதை எழுதச்சொன்னார்கள். நாம ரெண்டையும் இணைச்சு எழுதியிருக்கோம்
சரியா?. சும்மா சொல்லிட்டுப்போங்க எப்புடி இருக்குன்னு. சிகரத்ததொடவேண்டுமுன்னு அன்பான அண்ணாக்களின் ஆசைகள் அதைதொட கொஞ்சூண்டாவது எட்டிஎட்டிப்பாப்போமேன்னுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது