நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உறக்கமென்பது!!!!!


மரணத்திற்கான
முன் ஒத்திகை!
மரணம் வருமென்ற
முன்னெச்சரிக்கை!

மனப்போராட்டத்திற்கு
சிறு ஓய்வு!
மனிதப்போராட்டத்திற்கு
மறு ஆய்வு!

நிறைவேறாத ஆசைகளின்
நீச்சல்குளம்!
நிறைவேற்றும் எண்ணங்களின்
எதிர் நீச்சல்தளம்!

உடல் உழைப்புக்குண்டான
இடைவேளை!
உள்ளச் சோர்வுக்குண்டான
மலர்மாலை!

கலர் கனவுகளின்
வேடந்தாங்கல்!
கனப்பொழுதினிலும்
சொர்க்க ஊஞ்சல்!

ஆறடியையும் அடக்கும்
மயக்கும் வித்தை!
அடங்கிவிட்டால் அன்றே
மண்ணுக்குள் சிறை!!!!!!!!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

பரபரப்பு இங்கேயும்

என் மற்றொரு வலைப்பூவான  இனியபாதையில் இன்று
/மனிதக்கடவுளின் மர்மலீலைகள் அம்பலம்/ என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்,  அதை பார்க்கும்படி கேட்டுகொள்கிறேன்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

கெளரவ வாழ்க்கை




உள்ளக் குமுறலை
ஒருவருக்குமறியாமல்
கொட்டித் தீர்க்க
இடம் தேடிய மனம்

அன்னாந்து பார்த்ததும்
அந்திவானம் அவசரமாய்
இன்றனக்கொன்றும்
மனக்குறையில்லை
அதனால்

மேகம் கூடி
வலம் வரவில்லை
மழை வரவும்
வாய்ப்பில்லை
என்பதுபோல்
வெளித்துக் கிடக்க

வேதனைகள் வேர்விட்டு
வேகமாய் முகம்கறுக்க
விதியிதுவோவென
வெதும்பியபடி

குளியலறை நோக்கிய
கால்கள்
கெளரவமாய் கொட்டியது
குமுறலைக் கண்ணீராய்

தண்ணீர் மட்டுமறிய
சல சலவென
சென்றது
ஷவரின் அடியில்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது