நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கவனமாக இரு!


கண்கள் இணைய
காதலால்
கைகள் இறுக
கடற்கரையெங்கும்
கால்கள் அலைய

தொலைப்பேசியின்
தொடர்போடு
தெருவெல்லாம்
திரிந்து
தியேட்டரின்
மூலையில்
தொடங்கும்

அத்துமீறும்
அதிகாரம்
சிலசமயம்
அரியணையிட்டு
வயிற்றில்
அடங்க

வேறு
வழியற்று
வீட்டைவிட்டு
வெளியேற

கையிருப்பு
இருந்தவரை
காலம் கனிய
மிச்சமில்லாமல்
மொத்தமும்
கரைய

இறுகிய
கைகள்
இறுக்கத்தை
தளர்த்த

இணைத்த
விழிகளோ
இணைந்த
விழிகளை
விட்டு
விலகிச்சொல்ல

மன்றாடிக்
கேட்டும்
கும்மாளமிட்ட
காதல்
கொஞ்சமும்
மசியமறுப்பதால்

மரணத்தைதேடும்
மனங்கள்
சிலசமயம்
மானத்தை
தொலைக்கும்
உடல்கள்

பெற்றோரின்
பேச்சைமீறி
படிதாண்டும்
பிள்ளைகளே!

காதலென்ற
பெயரில்
களிப்பாட்டம்
நடத்தும்
காலமிது

காதல்
வென்றபோதும்
காதலர்கள்
தோற்கும்
மாயமது

கலங்கிடும்
முன்னே
கவனமாயிரு
கண்ணே!
காதலென்ற
காதலே!

கலங்கியப்
பின்னே
கவலைப்பட்டு
ஆவதொன்று-
மில்லை

அன்புள்ள
பெண்ணே
அதேபோல்
ஆணே!!!!!




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காவியத்திலகதிற்கொரு கவிதை


பனிமலையில்
பூபாளம்
கேட்டீர் –அதை

பன்னீர்
புஷ்பங்களாய்
பகிர்ந்தளித்தீர்

பல
காவியங்களைத்
தொகுத்தீர்

பத்தாயிரம்
கவிதைகளுக்கு
மேல்
வடித்தீர்

கல்லாதோர்க்கும்
கவியெழுத
கற்றுக்
கொடுத்தீர்

காவியத்
திலகமென்று
பெயரெடுத்தீர்

முத்
தமிழையும்
மூச்சில்
கொண்டீர்

முதிர்ச்சியிலும்
இளமை
கண்டீர்

பன்னாட்டு
இஸ்லாமிய
இலக்கிய
கழகம்
தந்தீர்

பசுமை
கொஞ்சும்
இனிமையாய்
பல மனங்களில்
நிறைந்தீர்

பிறரை
பாராட்டும்
பண்புகள்
கொண்டீர்

பிறர்
மதிக்கும்
மனிதராய்
உயர்ந்தீர்

வெண்பாக்கள்
கவிதைகள்
புனைந்தீர்-அதில்

வெற்றி
வரிகளையும்
விதைத்தீர்

வரிகளுக்கும்
விளக்கம்
கொடுத்தீர்

வைர
வரிகளையும்
கற்றுக்
கொடுத்தீர்

அற்புதக்
கவியெழுதும்
காவியமே!

அன்பு
மனங்கொண்ட
மனிதநேயமே!

ஆசிகள்
அள்ளித்
தந்திடுங்கள்

ஆண்டவனின்
அருளோடு
வாழ்ந்திடுங்கள்...

இக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.
அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்
அவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.

வளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.

இன்று துபையிலிருந்து தன்தாயகம் செல்லும் அவர்களுக்கு
இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக!

இக்கவிதையை பார்த்தும்  தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்
இதோ அது

மகளே!

கவிதை படித்தேன்
களிப்புற்றேன்.

நன்றியொடு
வாழ்த்துக்கள்
நவின்றேன்.

இன்று
என் தாய்நாடு
ஏகுகின்றேன்

இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடுவான்

மீண்டும் சந்திப்போம்.

--வாப்பா--

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

காலையும் மாலையும்



கதிரவனே!
காலை கதிரின்
ஒளியாகி
கண்களுக்குள்
குளிர்கின்றாய்!

இருவிழிக்குள்
இறங்கி
இதயத்தை
இழுக்கின்றாய்

மலைச்
சாரலில்
மல்லிகைப்பூ
தொடுக்கின்றாய்

மலையருவியின்
மேல்
மண்டியிடுப்
படுக்கின்றாய்

மாலை
வந்தவுடன்
மெல்ல மெல்ல
மறைகின்றாய்

பள்ளத்தாக்கில்
ஒளிந்துகொண்டு
பதுங்கிப் பதுங்கிப்
பார்கின்றாய்

பாவைகளின்
பார்வைகளுக்கு
பசும்பொன்னாய்
பரவுகின்றாய்

இன்று போய்
நாளை வா
அது உன்
வேலையல்லவா

காலை
மாலை வந்ததும்
சாரளம் வழியே
சரம் சரமாய்
கவிதைகள் தா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது