நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்
பதிவர்கள்கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர்கள்கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பெண்பதிப் பூக்களின் சந்திப்பு!

வியாழன் மாலை 7 30, மணிக்கு லூலூசெண்டர் வாசலில் பதிப்பூக்கள் அறிமுகங்களின்
அணிவகுப்பு அதன் பின்பு லூலூவின் பின்பக்கம்
பூங்காவில் சந்திப்புகளில் கொண்டாட்டம் என ஏற்பாடு செய்திருந்த மாலைவேலையில்
பெண்பூக்களின் வருகைக்காக எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
பூக்களில்லாத பூங்கா.
பூங்காவின் எதிர்ப்பார்ப்பை முதலில் பூர்த்தி செய்தது மல்லிகைப்பூதான்.
கையில் வெயிட் அதிகமிருந்ததாலும். செல்லமகனுக்கு உடம்பு சற்று சரியில்லாததாலும் பூங்காவிலே வெயிட் பண்ணவேண்டியதாகிவிட்டது
ஜலிப்பூ லூலூவிற்கு வந்துவிட்டதெனவும் மற்ற பூக்களை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும் சொன்னார்கள்.

பூங்காவோடு மல்லிகைப்பூவும். மற்ற பூக்களுக்காக காத்திருந்தது
வாசலுக்கும் பூங்காவுக்கும் குட்டிப்போட்ட பூனையாக 2 முறை போன் செய்து ஜலிப்பூவிடம் எல்லாம் வந்தாச்சா வந்தாச்சா கேட்டுக்கொண்டே உலாவர


8,25 மணிக்கு ,4 பூக்கள் வாசலில் வந்துநிற்க.
மல்லிப்பூ அந்த பூக்களை பார்த்ததும் சற்று இன்ப அதிர்ச்சி தேடலின் முடிவு இன்னும் தொடர்ந்தது. 5 பூக்கள்தான் ஒன்றுகூடிமலரப்போகிறது என எதிர்பார்த்தவேளையில் பத்துப்பதினோறு பூக்களாய் மலரபோகிறது என சொன்னதும் மற்ற பூக்களின் வரவுக்காக.தேடல் தொடர்ந்தது.

வந்த பூக்களில், 4 பூக்களின் பெரியப்பூ ஸாதிகாக்கா. அடுத்த பூ ஆஸியாக்கா.
அடுத்தபூ மலரக்கா. அடுத்தது. ஸாதிக்காவின் தங்கை.
பூக்கள் வந்தததும் மல்லிப்பூவிடம். இதில் யார் யார் எந்த பூன்னு கேட்டதும் மல்லி முழித்த முழியபார்கனுமே திக்கித்திணறி முட்டிமோதி, இது ஸாதிப்பூ அப்படின்னு சொல்லுவதற்க்குள் சிரிப்புகளின் ஓசை அதிர்ந்தெழுந்தது. அடுத்ததுடுத்து. அறிமுகங்கள் கைக்குலுக்கள்கள். என பூங்காவைச்சுற்றிலும் உள்ளவர்கள் பார்க்க 3, 4, கிளிக் கிளிக். ஏன்னா மலரக்கா உடனே போகனுமுன்னு.அவங்கபோனதும் உள்ளேவந்தமர்ந்து பேச்சுக்கள் தொடர்ந்தது ஆச்சர்யங்களும் மகிழ்வுகளும் பகிரப்பட்டது,


ஆஸியக்கா மல்லியைப்பார்த்து நான் மல்லியை இப்படி எதிர்ப்பார்கவேயில்லைப்பா என 3, 4, முறை சொன்னதும், அப்படி என்ன சொன்னாங்கன்னு கேக்குறீகளா? அத்தனை சாந்தமாக இருக்காளாம் இந்த  மல்லி. உடனே மல்லி கைத்தட்டி யாரங்கே பாரூக்கலி எங்காப்பா  போயிட்டே வந்து இதமுதல கேளுங்கன்னு சொன்னதும்.

 யாருப்பா அது பாரூக்
அதான் நம்ம மச்சான் அப்படின்னு முடிக்கலை
 எழுந்ததே சத்ததுடன் சிரிப்பும் கும்மாளமும் இத இததான் உங்ககிட்ட எதிர்பார்தோமுன்னு. ஹா ஹா
சிரித்துமுடித்த வேளையில் வந்துசேர்ந்தது மற்றப்பூக்களான ஜலீலாக்கா, ஹுசைனம்மாக்கா, நாஸியா மற்றும் சீனியர் மனோசாமிநாதன் மேடம்.


ஒரு பூ வந்துக்கொண்டிருபதாக சொன்னதும் மற்றபூக்கள் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு இதில் மீண்டும் பாரூகலி மேட்டரை சொல்லி அடித்த அரட்டை. என மனங்களும் முகங்களும் சந்தோஷத்தாண்டவமாடின.

ஹுசைனம்மாவுக்கு போன்வர அநன்யா மஹாதேவன். என்ற பூ லூலூ வாசலில் பூத்திருப்பதாகவும் தான்மட்டும் அதெல்லாம் தைரியமாபோய் அழைத்து வந்துவிடுவேனென ஹுசைனம்மாக்கா, புறப்பட்டதும் டிரங்குபெட்டி ஸ்ராங்தான் என எல்லாரும் கிசுகிசுகவும் மீண்டும் சிரிப்பலை.


அநன்யா வந்ததும் மீண்டும் அறிமுகம் மீண்டும் சிரிப்பு, பின்பு ஆஸியாக்காவின் அத்தானை அறிமுகப்படுத்தினார்கள் அவர்கள் வெக்கப்பட்டுக்கொண்டதுபோல் தெரிந்தது ஏன்னா இத்தனை மலர்கள் ஒன்றுகூடி நிற்கும்போது ஹி ஹி நெசந்தானே ஆஸிக்கா. ஹுசைனம்மா தன் அத்தானை ஷேஃப்டியாக லூலூ செண்டரிலே நிக்கவச்சிட்டு வந்துட்டாங்க! நம்ம அத்தான் இந்த பாவம் பிஞ்சிப்பூவ இத்தனபூக்கள் மத்தில் விட்டுவிட்டு அவுக அத்தான்வீட்டு போய்ட்டாக!
நாஸியா அப்பால அவுக அத்தான நிப்பாட்டிவச்சிட்டு அதோ அதோன்னு வெள்ளகாக்காவ காட்டுறமாதரிகாட்டினது சூப்பரப்பூ.
ஒவ்வொருவரும் அவரர்களின் பங்குகளுக்கு பேச்சிகளும், சிரிப்புகளும், அதிலும் அநன்யாவின் பேச்சி அழகு தமிழை தம்ழாக பேசியது சூப்பர். என்ன அநன்யா உங்களுக்கு மட்டுந்தான் சொடக்குபோடத்தெரியுமா பேச்சில்[அதாவது சோக்] நாங்களும் போட்டுட்டோமுல்ல ஹா ஹா.
இந்த பிரியாணி இல்லாத பிரியாணி சட்டிய வச்சிட்டு கிண்டலோ கிண்டல். மனோம்மாவை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி ஓவியங்களின் தாரகையின்னு சொல்லலாம் தத்ரூபமாய் வரையும் அவர்களுக்கு ஒரு கிளாப்ப்ப்ப்..

எல்லாப்புகழும் இறைவனுக்கே ஸாதிக்காக்கா பேச்சிலும்சரி எழுத்திலும்சரி படு சூப்பர். அன்று பூக்களில்லாத பூங்காவுக்கு பூக்களின் அணிவகுப்பை மலரச்செய்த பெருமை அவர்களுக்கே சாரும். அவங்க தங்கை படு அமைதி அவங்க சிரிப்பு சூப்பர்.
மலரக்கா[எப்புடி அக்கான்னு கூப்பிடவேணானுன்னா விடுவோமா]
அடிக்கடி பார்த்தமுகம் ஆனாலும் இப்போதுதான் அறிமுகம்.
அப்புறம் நம்ம ஆலினார் அவுகளிடம் நிறைய பேசவேயில்லை.ஏன்னா நாங்க ரெண்டுபேரும் மற்றப்பூக்களை கவனிக்கும் பொறுப்பில் [பொ]பருப்பாய் இருந்ததால்.

இத்தனை நாள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாத அன்புகொண்ட நெஞ்சங்கள் பார்த்துக்கொண்டபோது சந்தோஷங்கள் சந்தனமாய் அள்ளிதெளித்தது.
பாசங்கள் பந்திப்போட்டு பரிமாரிக்கொண்டது.
ஆனந்தம் ஆடிப்பாடி அத்தனை நெஞ்சங்களையும் குளுர்வித்தது.

போட்டோக்கள் கிளிக் கிளிக் என பூங்கவிற்கு மேலும் வெளிச்சத்தை உண்டாக்கியது. ஸாதிக்காக்கா ஒவ்வொரு முகமாய் கிளிக்கும்போது பிரியாணி. என்னதிது தனித்தனியா கிளிக் வாண்டடுக்கு வக்கப்போறீங்களாக்கா ந்னு சொன்னது [அக்கா உங்க காதில் விழுந்திச்சா] அப்பாடா ஒரு நல்லகாரியம் செய்துட்டன்

அப்பால ஆஸிக்காக்கு போன் போகனுமுன்னு உடனே பார்சல் பிரிக்கப்பட்டது.
ஜலீக்காவின் வேர்கடலை. முர்தபா. மசால்வடை. யக்கோவ் எனக்கு பிடிக்குமுன்னுதானே அந்த வேர்கடலை;;;மல்லிப்பூவின். பெயர் சூட்டப்படாத புது ரெசிபி. புதுசா டிரை பண்ணினேன். [சரி நீங்களெல்லாம் சேர்ந்து அது ஒரு பேர் வச்சிடுங்களேன். எல்லாம் எடுத்து பரிமாறப்பட்டது. மல்லியின் ரெசிபி ரெம்ப்ப்ப்ப்ப நல்லாயிருக்கு செர்ட்பிக்கட் கிடைத்தது [ஹய்யா காலரை தூக்கிவிட்டுகிறேன்.] வேற வழி சொல்லித்தானே ஆகனுமுன்னு யாரோ முணுமுணுப்பது கேக்குதுங்கோய்ய்ய்ய், சற்று வேலை ஜாஸ்திதான் ஆனால் பரம திருப்தி. என்ன சிறு வருத்தம் அநன்யா சாப்பிடலை ஆத்துல அடிவிழுமுன்னு இல்ல அநன். அநன் வருவது தெரியாது இல்லையின்னா சைவமும் செய்திருப்பேன். சந்தோஷம் மனோம்மா டேஸ்ட் பார்த்தது, ஆஸியாக்கா வேர மார்க் போடுறேன்னு சொல்லிட்டு போயிருக்காக அக்கா கொஞ்சம் பாத்து பரிவிச்சிபோடுங்க..
இதில் ஓரமா சின்ன வெள்ளபிளேட்டில் இருக்குதே அதுதான் பெயர் வைக்காத மல்லியின் ரெசிபி

சாப்பாட்டு பரிமாற்றங்கள் முடிந்துக்கொண்டிருக்கும் வேளையில் முதலில் ஆஸியாக்கா. அப்புறம் அநன்யா. மீண்டும் வந்த மலர் மீண்டும். அப்புறம் மனோம்மா. ஒவ்வொரு ஆளாக கிளம்ப. நாஸியாவுக்கு பழைய தோழி அங்கேவர இரட்டிப்பு மகிழ்ச்சி. நாசியா கிளம்புறேன்னு சொன்னதும் அல்லாஹூ மறந்துடிச்சின்னு. ஏதோ மல்லியினால் முடிந்த சின்ன கிஃப்ட்ன்னு ஆளுக்கொரு குட்டி ஹேண்ட் பேக் கொடுத்தேன். அநன்யாவுக்கு ஹுசைனம்மாவிடம் கொடுத்தனுப்பினேன். அப்பால போனா வாங்கிக்கோங்க அநன். ஆஸிக்காவிற்கும், மனோம்மாவிற்கும், மலருக்கும், தரவேண்டியது மல்லியிடமே உள்ளது. நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வாய்புள்ளது தந்துடுவேன்..
எல்லாரும் போய்விட மல்லி, ஜலி, ஹுசை, ஸாதி, அவங்க தங்கை, என 5 மலர்கள் மட்டும். அப்பால நம்ம அத்தான் வாந்தாச்சி.பிரியாவிடைகள் சொல்லி,
காரில் ஏறியபோது  என் மச்சானையும் இதுதான்பா நம்மோட உயிர்ன்னு சொல்லி அறிமுகம். அநியாத்துக்கு வெக்கப்பட்டுக்கொண்டே நல்லாயிருக்கீங்களா ந்னு கேட்டு முடிப்பதற்குள் பாவம் பச்சபுள்ள //இல்ல// கருப்புபுள்ளைக்கு வேர்த்துப்போச்சி. அப்புறம் ஒருவழியா சமாளித்து சிரிச்சி, பை பை சலாம் சொல்லி விடை பெறும் போது மணி 10 25.


ஒரு சேர இத்தனை முகங்களை கண்டதும் அவர்களிடம் பேசியதும் மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எதை கொண்டுவந்தோம் பிறக்கும்போது
அல்லது எதை கொண்டு செல்லப்போகிறோம் இறக்கும்போது
ஆனால் இருக்கும்போதே சேர்த்துவைத்து இவ்வுலகில் விட்டுவைத்து செல்லமுயற்ச்சிப்போமே! அன்பான நட்பை..
என்றுநினைத்தபடியே மனம்முழுக்க
நட்பு பூவின் வாசம்
நாசிவழியே நெடியேறி
நெஞ்சுக்குள் நுழைந்து கஸ்தூரியின்
நற்மணமாய் கமழ்ந்து மணத்தது.


அகமும் புறமும் ஒருசேர சந்தோஷக்குவியல்கள்
அறிமுகங்களின் அணிவகுப்பால் அரங்கேறியது

திருமுகங்கள் பார்த்த திருப்தியிலே
தித்தித்து நெஞ்சம் துள்ளிக்குதித்ததுவே!

எழுத்துக்களின் ஈர்ப்பால் கவர்ந்தவர்கள்
எண்ணிலடங்கா அன்பால் எதிரெதிரே!

நட்பின் வழிமையை நமக்குணர்த்த
நான் நீ என போட்டிப் போட்டனரே!

உணர்வுகள் ஊற்றுப்பெருக்கெடுத்து
நட்புக்குள் ஓடி உறைந்தனவே!

நிலையில்லா உலகில் நாமிருந்தும்
நல்ல நட்பை
நிலைநிறுத்த முனைவோமே!!

பூக்களின் பெயர்கள்

ஸாதிகாக்கா[எல்லாபுகழும் இறைவனுக்கே]
ஜலில்லாக்கா[சமையல் அட்டகாசங்கள்]
ஆஸியாக்கா[சமைத்து அசத்தலாம்]
மலர் ரக்கா [மலர்]
ஹுசைனம்மா க்கா [ஹுசைனம்மா]
மனோ மேடம் [முத்துச்சிதறல்]
அநன்யா [அநன்யாவின் எண்ண அலைகள்]
நாஸியா [பிரியாணி]

கடைசியாக [மூவோடை மலிக்கா]
எல்லாம் அறிந்த பெரியவாளுகளுக்கு மத்தியில், எதுவுமே அறியாத சும்மா பதிவர்ன்னு பேரவச்சிக்கிட்டு ஏதேதோ
கிறுக்கிதள்ளும் நான் நான் நானே! 

டிஸ்கி// ஆனந்த மழையில் நனைந்தில் பிடித்தது ஜுரம். ஆதலால்.
 இதில் எதுவும் சொல்ல விடுபட்டிருந்தால் ஆலினார் நிர்வாகம் பொறுப்பேற்கும் என்பதையும். அதற்கு துணையாக டிரங்கு பெட்டியையும்கேட்கும்படியும். இல்லாத பிரியாணியிடம் பிரியாணிக்கேட்டு தொந்தரவு செய்யும்படியும். அநனிடம் அழ்கு தம்ழை கற்றுதர கேட்டுக்கும்படியும் வலியுருத்துகிறேன்.
போட்டோக்கள் தந்த கூகிளுக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம் அக்காக்களுக்கு. [அடியே மல்லி சொன்னத மறந்துட்டு அக்கா சொக்கானு எழுயிருக்கே அடிவாங்கப்போறே.] யாரெல்லாம் வாறீங்க அடிக்கன்னு சொல்லிட்டா அடிகொடுக்க வசதியா ஏற்பாடுகள் செய்யப்படும்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தூள்கிளப்பிய பதிவர்கூட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பதிவர்கள் கூடி கலக்கல் ஆர்ப்பாட்டம்
அண்ணாச்சி அழைக்கிறார் பதிவர்கள் எல்லாம் ஒன்றுகூடி படம் காட்டப்போகிறோம் என்ற ட்ரைலரைப்பார்த்து நாமளும் போகலாமுன்னு
முன்பதிவு செய்ததோடு வெள்ளியன்று கிளம்பும் நேரத்தில் ஞாபகம் வரவே உடனே போன்செய்தேன்

ஹலோ ஆலினார் அம்புலிமாமா கடையா? ஆமாங்க யார் பேசுறது நாந்தான் அன்புடன் மலிக்கா. சொல்லுங்க என்னவேணும். இல்லைங்க ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருக்கேன் பதிவர்கூட்டத்துக்குன்னு சொல்லி முடிக்கு முன் ஓ அதுவா, நீங்க கேட்டிருந்த அத்தனையும் எங்க சிலவிலேயே அனுப்பிச்சாச்சி, எல என்னசொல்தீகன்னே அதாம்மா வாழ்க கோசம்போட 50 ஆள். டிரம்ஸ் வாசிக்கிர கோஸ்டி. வாட்டர்ஃப்ரூப் மேடை செட்டிங்.[அட அடிக்கடி மழை வந்துக்கிட்டு கிடக்குல்ல அதுக்குதேன்] என எல்லாம் அனுப்பியாச்சி, ஏங்க நானும் பதிவர்தாங்கர பேனரு ன்னு இழுத்தப்ப

அதுசரி உம்பேரு என்னசொன்னேன்னாரு அட நந்தாங்க பதிவர் அன்புடன் மலிக்கா. சரியாபோச்சிபோ இன்னுமா நீ கிளம்பள அங்கே படம்போட்டு பொட்டிய தூங்கி பிரியாணிபோட்டு சட்டிய தூக்கிப்பாகளே என்ன நீ பொளைக்கத்தெரியாத புள்ளயா இருக்கியே இதுக்கெல்லாம் முன்னாடியே போய் துண்டப்போடக்கூடாதா ன்னு சொல்லிகிட்டே இருக்கும்போது டக்குன்னு போனவச்சிட்டு மணியப்பாத்தா மதியம் 2..

சிம்மபாரதியின் போன் உங்க இடத்துக்கே வந்து சாப்பாடெல்லாம் போடுகிறோம் வந்துடுங்கப்பா என்றபோது இல்லை இங்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க சாப்பாட்டுக்குபின் வருகிறேன் எனக்காக எல்லாரும் சாப்பிடாம இருந்திடாதீங்கன்னு சொன்னேன் [ஆமா இவுக போறவறைக்கும்தாம் உக்காந்துகீன்னு இருக்கபோறாகலாக்கும் சரி சரி.] காலையில் சொல்லியதை நினைவில் கொண்டு புறப்பட தயாராகிவிட்டேன்

மதியம் மணி 2, 10 புறப்பட்டது எங்கள் வாகனம், இடையே போனில் சிம்மபாரதிடம் லொக்கேஷன் கேட்டா அவுக அண்ணாச்சிகிட்டே கொடுத்துட்டாக[ அவுக துபைகாரவுக] அண்ணாச்சி நலம் விசாரிச்சிட்டு நம்மகிட்ட லொகேஷன் சொல்லப்போனாக நமக்குத்தான்[ ஹி ஹி ஹி] ஒரு நிமிசம் மச்சான்கிட்டதரேன் சொல்லி போனை நாசூக்க கொடுத்துட்டோமுள்ள.

 என்னுடைய போன் அடித்தது எடுதால் நம்ம ஜலீலாக்கா. என்னப்பா நீங்க கிளம்பளையா/ இதோ கிளம்பிட்டேங்கா, நீங்கதான் வரமுடியல கவலைபடாதீங்க ஒன்னுவிடாம வந்து சொல்லிவிடுகிறேன் என்று சொன்னபோது நீங்க சொல்லும்போது என்காதில் புகை வந்திடனும் என்றார்கள் ஓகே என்று போனைவைத்து நிமிர்ந்தபோது,
அண்ணாச்சி சொன்ன இடத்து கரகீட்டா வந்துவிட்டு மீண்டும் போன் சிம்மபாரதிக்கு செய்துபோது அவங்க வந்து கூட்டிகிட்டு போனங்க

ஒரு சுத்து சுத்தி [அந்த புத்தம் புதிய பில்டிங்க அண்ணாச்சி அவங்க கூட்டுகாரகங்களும் சேர்ந்துதான் இரண்டுநாளைக்கு முன்னாடி திறந்துவைத்தாக கேள்வி] அந்த ஃபிளாட்டிற்கு போனால்!!!!!!!!!!!!! வாசல் கதவிலேயே அண்ணாச்சி மிரட்டுகிறார் ஸ்ஸ்ஸ்ஸ் அண்ணாச்சி அழைக்கிறார் என போஸ்டரில் [அண்ணாச்சி குனிந்த தலை நிமிராமல்] போட்டு நம்மை அழைத்தார்கள்.

வாசலில் நுழைந்ததும் பாட்டுச்சத்தம் தூள்கிளப்பியது
அங்கே வரவேற்ற அண்ணாச்சி மற்றும் ஜெஸிலா, அவரது கணவர். மற்றும் ஹுசைன்னம்மா நின்றிருந்தார்கள்.

எங்க அண்ணாவும்கூடவந்ததால் மச்சான் சொன்னார்கள் நீ இங்கு இரு நான் சாகுலைபோய்விட்டுட்டு வருகிறேன்னு [அவங்களை துபையில் விடனும் 3, மணிக்கு டூட்டி] என்றுசொல்லி இந்த பச்சபுள்ளயமட்டும் அந்தகூட்டதில் விட்டுவிட்டு போய்டாங்க.

அங்கே நின்றிருந்த தோரணையை வைத்து நீங்கதானே ஹுசைன்னம்மா என்றேன் பக்கத்தில் நின்றிருந்தவர் ஜெஸிலா. அவர்களை ஏற்கனவே பாக்கியராஜ் பட்டிமன்றத்தில் பேசியபோது பார்த்திருக்கிறேன்
அறிமுகப்படுத்திகொண்டோம். [பிரியாணி திண்புட்டு பாக்கு போட்டுகொண்டு நின்னாகபோல இருவரும்]

சரி சரி உள்ளேவாங்கப்பா படம் காட்டப்போறாங்கன்னாங்க [உள்ளே செல்ல சிறுதயக்கம்தான் ஏன்னா மெஜாரிட்டியா நாங்க இல்லையேன்னுதான்] ஒருவழியா உள்ளேபோனதும் நீங்க சாப்பிடலையா கீழை ராசாவின் [அவுங்களத்தான் அவுக புரொபைலில் பார்த்திருக்கோமுள்ள.]
மற்றும் அண்ணாச்சியின் [இவுங்கள போஸ்டரில்]அன்பான உபசரிப்பு. சாப்பிட்டுவிட்டு வந்துட்டோம் என சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தா

சுவற்றில் ஆங்காங்கே வீற்றிருந்த போஸ்டர்கள் அடிச்சு தூள் கிளப்பு என்பதைபோல் இருந்தது அங்கே கிடந்த சோபாக்களில் அத்தனை ஜென்டில்மேன்களும் அமர்ந்தால் அரட்டை அடிக்கமுடியாது என்பதால் மைனாரிட்டியான எங்களுக்கு மரியாதை பலமாகி ஷோபகளில் இடம் கிடைத்தது[ அண்ணாச்சி ஏற்கனவே இதுக்குதான் துண்டை போட்டுமுன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்று சொன்னது ஞாபகம் வந்தது]

நிறைய பதிவர்கள் வந்திருந்தார்கள் ஆனால் எனக்குதான் யார் யாருன்னு பெயரோ ஊரோ தெரியலை எனக்கு அங்கு ஏற்கனவே தெரிந்தவங்கன்னு சிம்மபாரதியும். ஜியாவுதீன் அண்ணனும்தான், மற்றும் தமிழ்தேரில் உறுப்பினர்களும் இருந்தார்கள் [இதுக்குதான் ஆலினார்அம்புலிமாமாவிடம் நானும் பதிவர்தான் நானும் பதிவர்தான் ன்னு போட்டு ஒரு பேனர் கேட்டிருந்தேன் கையில் பிடித்திருந்தாலாவது தெரிந்திருக்கும்]

நிஜமாய் தியேட்டருக்குள் போனதைபோன்ற ஒருபிரம்மிப்பு, புரெஜக்டர் வைத்து
படம் தொடங்கியதுமே பாரதியின் வீரமிகு வார்தைகள் மனதுக்கு இதத்தை தந்தது. அடுத்தடுத்து மொக்கயும் 75/ கொலைவெறியும் 25/ விதமும் அட்டகாசமாக. அருமையான இசையும் காமெடியும்

கலந்து வயிறுகுலுங்க சிரிக்கவைத்தது [காசுகொடுக்காமல் ஓசியில் தியேட்டரில் இருந்து சிரித்தது இன்னும் சிரிக்கச்சொன்னது] அப்பப்பா தியேட்டர் தோற்றதுபோங்க விசிலும் கைதட்டலும் யூத்தல்லவா [ஹங் ஹங் எல்லாரையும் இல்லைங்கோ] சரி போனா போகுது அன்றிருந்த அனைத்து யூத்தும் ஒன்றிணைந்து சிரித்தகாட்சி மறக்கமுடியாத நிகழ்ச்சி.

என்ன அண்ணாச்சி இந்த டிரஸ் போனமுறை பதிவர்கூட்டதுக்கு போட்டதா? ஆமாம்பா அப்ப போட்டது இன்னும் கிளட்டவில்லை, ஆஸிப் மீரான் என்ற அண்ணாச்சி சொல்லியபோது எழுந்ததே சிரிப்பொலி..

இதுதான் அபூ அஃப்ஷர் என்று ஜெஸிலா சொன்னாங்க அட இது நம்ம ஊர்காரவுங்களாச்சேன்னு ஜெஸிலாவிடம் சொல்லி அதிரையான்னு கேட்க்கச்சொன்னேன். அவங்க கேட்டபோது ஆமாம் நான் அதிரைதான் என்றதும் என்னை தெரிகிறதா? என்றேன் மாலிக்கிடம் [அபு அப்ஷர் என்பது அவரது மகன்] உடனே ஜெஸிலா, இப்படி கண்ணைமட்டும் காட்டி என்னை தெரியுமான்னா எப்படிதெரியும் என்றார்களே பார்க்கனும். [ஏன்னா நான் பர்தாவில் ஃபுல் க்ளோஸிங்]பின்பு நான் நாந்தான் இன்னார்வீட்டு பிள்ளை என்றதும் புரிந்துகொண்டு புருவம் உயர்த்தினார் நாங்க ஒரே தெருவுக்காரங்கப்பா..
ரொம்ப வருசமாச்சில்லன்னு பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது..

அப்புறம் என்பக்கத்து ஷோபாவில் பார்த்தால் கவிஞானி ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்.சிறப்பு விருந்தினாராக அழைக்கப்பட்டுடிருந்தார்கள்.
பக்கத்தில் சென்று வாப்பா என்றழைத்தபோது. அம்மா நீயா முகம்முழுவதும்கவர் செய்திருந்ததால் நீயென்று தெரியவில்லைமா என்று சொல்லி பக்கத்தில் அமரச்சொன்னார்கள். சிறிதுநேரம் என் கவிதைகளைப்பற்றி உரையாடினார்கள்.எவ்வளவு பெரிய மனிதர்களையெல்லாம் நம்மோடு இணைத்தது நம் எழுத்துக்கள் என்று மனதுக்குள் மகிழ்ந்துகொண்டேன்.

பின்பு நான் ஹுசைன்னமா பக்கத்தில் வர எத்தனித்தபோது அம்மணிக்கு போன்வந்ததும் வெளியில் போனாங்க கூடவே நானும் ஒட்டிக்கொண்டு வெளியானேன்.

வாசலுக்கு முன்னால் உன்ன சிறிய கோரிடரில் மூன்று பெண்களும் பேசிகொண்டு நின்றோம். போன் நமபர்கள் பகிர்ந்துகொண்டோம் படம் முடிந்ததும் கனிசமான பேர் வெளியேறியதும் என்னாடா இன்னும் மச்சானைக்காணவில்லையே எனபோன் செய்தேன் இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்றார்கள் அதற்குள்ளா முடிந்துவிட்டது எனகேட்டார்கள் ஆமாம் எனக்காக ஹுசைன்னமா வெய்ட் பண்ணுராங்க சீக்கிரம் வாங்கன்னு சொல்லி போனை வைத்தேன்.

சொல்லி 12 நிமிடத்திற்குள் கீழே வந்துட்டேனே வந்துவிடுகிறாயா என்றார்கள் அப்போது அண்ணாச்சிவந்து உள்ளேவாங்கன்னு அழைக்க. மீண்டும் மச்சானிடமிருந்து போன் காரை போட்டுவிட்டு மேலேவரலாமுன்னா பார்க்கிங் கிடைக்கலை நீயே வந்துடேன் என்றார்கள், ஓகேன்னு நானும் கிளம்பிட்டேன், நான் கிளபுகிறேன் என தலையை ஆட்டியபடியே அனைவரிடமும் சொல்லிவிட்டு மாலிக்கை அழைத்து என்னுடன் பள்ளியின் அருகே வரை வரமுடியுமா என்றேன், வருகிறேன் என அபு அப்சரையும் கையில் பிடித்துக்கொண்டு கிளம்பி வாசலுக்கு வந்தபோது,

திரும்பிப்பார்த்தேன் கதவில் அண்ணாச்சி அழைக்கிறார் [என்றிருந்த போஸ்டரை பார்த்து அடுத்த தடவை நிச்சயம் கையில் பேனரோடு வந்துவிடுகிறேன் என எனக்குள் சொல்லிக்கொண்டு நடையைகட்டினேன்] என்னைவிட்டுவிட்டு மாலிக் கிளம்ப. காரில்வந்து அமர்ந்தபோது மச்சான் என்னப்பா இத்தனை சீக்கிரமாக முடிந்துவிட்டது நான் போகும்போது தொடங்கி வருவதற்குள் முடிந்துவிட்டதா என்றார்கள். நான்தான் கடைசியாபோய் முதலில் வந்த ஆள் என்றேன்.

பதிவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் மனதில் நிறைந்திருந்தது . நம்தமிழ் நம்எண்ணங்கள் நம்எழுத்துக்கள் நம்மை தேசம்விட்டு தேசம் வந்தும் எங்கெங்கே இருந்தநம்மை ஒன்றிணைத்த பதிவர்கூட்டத்தை நினைத்து மிகுந்த பெருமைகொண்டேன். இதேபோல் அனைத்து பதிவர்களையும் ஒருநாள் சந்திக்கும் வாய்ப்புவரும் என்ற நம்பிக்கையான மகிழ்ச்சியிலேயே இந்நிகழ்ச்சியை முடித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக...........

இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அன்புடன் மலிக்கா
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது