நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காணாமல் போனதே கார்மேகம்!
கார்மேகங்களென
கருத்த நீண்ட
கருங் கூந்தலெல்லாம்
கணுக்கால்களை தொட்டது அன்று!

கழுத்துக் கீழ்  காற்றில் ஆடியபடி
கத்தரிக்கோலுக்கு இரையாகி
கருங்கூந்தலே
காணாமல் போனது  இன்று!

பளபளக்கும் பட்டும்
தளைத் தளையப் பின்னலும்தான்
தமிழ்நாட்டின் திருஉருவம்
பாப் கட்டும் பேண்ட் சர்ட்டும்
வெளிநாட்டவரின் மறுஉருவம்

மேலைநாட்டின் மோகம்
மேம்பட்டுப் போகப் போக
மேகக் கூந்தலும்
மேலோட்டமாய் ஆனது

ஆடைகள் குறைவதுபோல
அழகிய கூந்தலும்
அளவுகோலில்லாமல்
அடியோடும் குறைகிறது!

நாகரீகம்  மேலோங்கி
கறுத்த கூந்தலெல்லாம்
வெளுத்தும் பழுத்தும்
வெவ்வேறு நிறங்களாகியது!

அந்திவானம்
சிவந்தால் அழகு
அடிபெண்ணே!உன் கூந்தல்
கறுத்தால்தான் அழகே!

அழகு மேனிக்கு
அங்க அலங்காரமும்
சிகை அலங்காரமும்
செய்வதில் தவறில்லையே!

அதற்காக!
சிகையையே அலங்கோலம் செய்து
அங்கத்தின் தரத்தை
குறைக்கலாமோ பெண்ணே!....


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

5 கருத்துகள்:

 1. அருமையான ஆதங்க கவிதை! கூந்தலுக்கு கருப்பே அழகு! இதை உணர்வார்களோ இன்றைய பெண்கள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. நாகரீகம் மேலோங்கி
  கறுத்த கூந்தலெல்லாம்
  வெளுத்தும் பழுத்தும்
  வெவ்வேறு நிறங்களாகியது!//

  அந்தக்கொடுமைய ஏன் சொல்லுறீங்க நாங்க பார்த்தா எங்களுக்குதான் அவங்க மேல வெறுப்பு வருதுக்கா..

  ஆதங்கக்கவிதை அருமையோ அருமை. உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மிகுந்த ஆதங்கம்தான் அக்கா..

  பதிலளிநீக்கு
 3. naan ippa thaan cut pannalam endru mudivu panni iruntheen.. kavithai manasa maathividum poola ..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது