நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நீரோடையில் நீந்தும் நினைவுகள்.

 

கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!

நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!

கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் -  அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது
கவிவந்த வழிதனையே!

நித்தம் நித்தம் புதுக்கனவு!
நீச்சலடித்து பாய்கிறது
நிகழ்கால நிகழ்வுகளோடு!
நீந்தி நீந்திச்செல்கிறது
நிதர்சனமான உண்மைகளை!
நியாப்படுத்தச் சொல்கிறது.

உறக்கமின்றிச் சிலவேளை!
உணவின்றிச் சிலவேளை!
ஊறரியச் சிலவேளை!
ஊமையாகச் சிலவேளை!-

இப்படி

ஒவ்வொரு நாளும் கழிகிறது!
ஓசையின்றி ஒளிர்கிறது!
ஓராயிரம் கனவுகளை! - உள்ளம்
ஒளிவு மறைவின்றி
ஓடவிட்டுப் பார்க்கிறது!.

கவியென்றுச் சொல்கின்றேன்
ஆனாலது!
கவியா? என்பது தெரியவில்லை
ஆனாலும் எழுதுகின்றேன்!- என்
ஆர்வங்கள் மட்டும் ஓயவில்லை!

நீரோடையின் நீருக்குள்ளே!
நினைவுகளை
நீந்தவிட்டுப் பார்க்கின்றேன்!
நீந்திச்செல்லும் நினைவுகளை-அடி
நெஞ்சுக்குள்!
நிலையாய் தேக்கிக்கொள்கின்றேன்...

இக்கவிதை எனது முதல்கவிதை நூலான ”உணர்வுகளின் ஓசை” யில் இடம்பெற்றுள்ளது.
  முத்துப்பேட்டை ஓ ஆர் ஜியில் ந[எ]ம்மைப்பற்றி கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஹாஹா

அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

28 கருத்துகள்:

 1. நன்றாகவே நீந்துகிறீர்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. மு.ஜபருல்லாஹ் கூறியது...

  நன்றாகவே நீந்துகிறீர்கள் சகோதரி.//

  வாங்க சகோ. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

  நீச்சல் தெரியாமலே நீருக்குள் இறங்கிவிட்டேன்.
  இனி நீந்தி கரையேருவதும் நீருக்குள்ளே மூழ்க்குவதும் இறைவன் துணையிலும். தங்களைப்போன்றவர்களின் அன்பென்னும் கருத்துகளின் வழியிலும்தான் உள்ளது..

  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 4. ஆழமான கவிதை சகோதரி என் மனதை தொட்டது வாழ்த்துக்கள் தொரட்டும் கவி மழை ..!நீரோடை நிறையட்டும்

  பதிலளிநீக்கு
 5. // kalaimahel hidaya risvi கூறியது...

  ஆழமான கவிதை சகோதரி என் மனதை தொட்டது வாழ்த்துக்கள் தொரட்டும் கவி மழை ..!நீரோடை நிறையட்டும்.//

  வாருங்கள் கலைக்கவிச் சகோதரி. தங்களின் வரவும் அன்பார்ந்த கருத்துகளுக்கும் எனது நெஞ்சத்தை நிறைத்துவிட்டது நேசத்தால்..

  மகிழ்ச்சியோடு கலந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 6. நித்தம் நித்தம் புதுக்கனவு!
  நீச்சலடித்து பாய்கிறது
  நிகழ்கால நிகழ்வுகளோடு!
  நீந்தி நீந்திச்செல்கிறது
  நிதர்சனமான உண்மைகளை!
  நியாப்படுத்தச் சொல்கிறது.//

  நீரோடையின் நீருக்குள்ளே!நினைவுகளை நீந்தவிட்டுப் பார்க்கின்றேன்!நீந்திச்செல்லும் நினைவுகளை-அடிநெஞ்சுக்குள்! நிலையாய் தேக்கிக்கொள்கின்றேன்...//

  சிலர் தவமிருந்து வரம் பெறுகிறார்கள்
  சிலருக்கு இறைவன் தவமின்றியே
  வரம் வழங்குகிறான்
  நீங்கள் இரண்டாம் ரகம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்குத் தலைகீழா நின்னாலும் கவிதை வர மாட்டேங்குது. நீயானா இப்படி கவிதை எப்படி வருதுன்ற ஆச்சரியத்தையே கவிதையா எழுதி அசத்துறியே தங்கச்சி... ரமணி ஸார் சொன்ன மாதிரி இறைவனின் கொடைதான் போலும். தொடரட்டும் உன் கவித்திறம்.

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நானும் உங்களை நினைத்து பல நேரம் சிந்திப்பதுண்டு. அவ்வளவாக படித்ததில்லை என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அழகாய் கவி எழுதும் திறமை கிடைத்திருப்பது இறைவனின் கிருபை தான்.

  தொடர்ந்து பல கவி படைத்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துகள் மலிக்கா அக்கா

  பதிலளிநீக்கு
 9. மாஷா அல்லாஹ்.. அருமையான வரிகள்... உங்களால் மட்டும் எப்படி இபப்டி எல்லாம் சிந்திக்க முடிகிறது.... வல்ல இறைவன் உங்களுக்கு என்றென்றும் உதவி புரிவானாக!

  பதிலளிநீக்கு
 10. இன்னும்
  நீரோடையில் நினைவுகள் நீந்தட்டும் சகோ

  பதிலளிநீக்கு
 11. //கவியென்றுச் சொல்கின்றேன்
  ஆனாலது!
  கவியா? என்பது தெரியவில்லை
  ஆனாலும் எழுதுகின்றேன்!- என்
  ஆர்வங்கள் மட்டும் ஓயவில்லை!//

  இது கவிதைகள் இல்லையென்றால் வேறு எதை கவியென்பதுக்கா..

  உங்களுக்கு இறைவன் தந்த அருமையான கவிவரம் அழகாய் கைப்பற்றிக்கொண்டீர்கள் வாழ்த்துகள்.பாராட்டுகள்..

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொரு நாளும் கழிகிறது!
  ஓசையின்றி ஒளிர்கிறது!
  ஓராயிரம் கனவுகளை! - உள்ளம்
  ஒளிவு மறைவின்றி
  ஓடவிட்டுப் பார்க்கிறது!.//

  ம்ம்ம்ம் சூப்பர் எங்களுக்கெல்லாம் வரமாடேங்கிறதே அம்மணி..

  பதிலளிநீக்கு
 13. நீச்சல் அறிந்ததால் தான்..உங்களின் நீரோடையில் நீச்சல் அடிக்கும் சத்தம் (கவிதை) கேட்டுகொண்டே இருக்கு...!

  பதிலளிநீக்கு
 14. இன்னாதிது...!

  யப்பா...!
  இந்த அழுகாணி ஆட்டத்துக்கு நான் வரல...!


  பொய் சொல்றதுக்கும்....!
  புளுகர்துக்கும்...!
  ஓர் எல்லை உண்டு மேடம்...!

  அண்டப்புளுகு...
  ஆகாசப்புளுகு...
  இதெல்லாம் கேள்விபட்டிருக்கேன்...!

  ஆத்தாடி...!

  யப்பா.....!
  உலகைத் தாண்டி...!
  நவக் கிரகங்களையும் (புளுட்டோ, நெப்டியூன்,சாட்ரன் போன்ற கிரகங்கள்)
  தாண்டி
  புளுகுனா...!

  இந்த டகால்டி வேலையெல்லாம் எல்லாம்....
  நம்மளாண்ட வேணாங்கோ...!

  நாங்க எங்க வேல செய்யற ஆளுன்னு தெரியும்ல...!

  ஐயோஓஓஓஓ..........!

  என்னை...! யாராச்சும் காப்பாத்துங்களேன்...!

  பதிலளிநீக்கு
 15. // Ramani கூறியதுசிலர் தவமிருந்து வரம் பெறுகிறார்கள்
  சிலருக்கு இறைவன் தவமின்றியே
  வரம் வழங்குகிறான்
  நீங்கள் இரண்டாம் ரகம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்.//

  வாங்கய்யா.

  நான் கேட்காமலே இறைவன் தந்த இவ்வரத்திற்க்கு என் ஆயுள்தீர்ந்தபின்பும் நன்றி சொல்லவேண்டும்..

  தங்களின் நேசமிகுந்த கருத்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 16. S.A. நவாஸுதீன் கூறியது...

  Nalla irukku thangachi. Vaazhththukkal.//

  அம்மாடியோ எவ்வளவோ காலத்திற்கு பின் பின்னுட்டம் அண்ணாவிடமிருந்து..

  வாங்கண்ணா வாங்க. தங்களின் மீண்[டும்]ட வருகைகும். அன்பு வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 17. பா.கணேஷ் கூறியது...

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்குத் தலைகீழா நின்னாலும் கவிதை வர மாட்டேங்குது. நீயானா இப்படி கவிதை எப்படி வருதுன்ற ஆச்சரியத்தையே கவிதையா எழுதி அசத்துறியே தங்கச்சி... ரமணி ஸார் சொன்ன மாதிரி இறைவனின் கொடைதான் போலும். தொடரட்டும் உன் கவித்திறம்.//

  என்னாது தலைகீழாவா. அண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணி அண்ணாவப்பாருங்க தவமிருக்கேன்னு தலைகீழா நிக்கிறாங்களாம்..

  உண்மைதான் கணேஷண்ணா எனக்கே என்னை நினைக்கும்போது ஆச்சரியம்தோன்றும் நான் எழுதியதை நானே பலமுறைகள் படித்து ரசித்ததுண்டு. ஏனெனில் எனக்குக்கூட இப்படியெல்லாம் வருதேன்னு..

  எல்லாம் வல்ல இறைவன் தந்த பாக்கியம்..
  இந்த எழுதினால்தானே இப்படியான அண்ணாக்கள் நட்புகள் சகோதரத்துவங்கள் எனக்கு அருட்பொக்கிஷமாய் கிடைத்திருக்கு.. ஆக எல்லா புகழும் எனக்கு எழுத்தறிவித்தவனுக்கே..

  மிக்க நன்றிண்ணா..

  பதிலளிநீக்கு
 18. ஆமினா கூறியது...

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நானும் உங்களை நினைத்து பல நேரம் சிந்திப்பதுண்டு. அவ்வளவாக படித்ததில்லை என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அழகாய் கவி எழுதும் திறமை கிடைத்திருப்பது இறைவனின் கிருபை தான்.

  தொடர்ந்து பல கவி படைத்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துகள் மலிக்கா அக்கா//

  வாங்க ஆமி..
  சிந்தித்தீர்களா! அவ்வளவாக படித்ததில்லையல்ல பத்தில் பாதிகூட இல்லை.. ஹா ஹா

  இறைகிருபைதான் அவனின்றி அசையாது அணுவும் அதுபோன்றே என் எழுத்தும்.அவந்தந்த அருள்கொடை..
  வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஆமி...

  பதிலளிநீக்கு
 19. யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் கூறியது...

  மாஷா அல்லாஹ்.. அருமையான வரிகள்... உங்களால் மட்டும் எப்படி இபப்டி எல்லாம் சிந்திக்க முடிகிறது.... வல்ல இறைவன் உங்களுக்கு என்றென்றும் உதவி புரிவானாக!//

  வாங்க சகோதரி. எனது எண்ணங்கள் என்னுள் சேர்க்கப்படுகிறது அது எழுத்துக்களாய் உருமாருகிறது. எல்லாம் ஏக இறைவனின் செயலால்..
  தங்களின் அன்பான பிராத்தனைக்கு ஆமீன்.

  மிக்க நன்றி சகோதரி..

  பதிலளிநீக்கு
 20. செய்தாலி கூறியது...

  இன்னும்
  நீரோடையில் நினைவுகள் நீந்தட்டும் சகோ..//

  மிக்க நன்றி சகோ இன்ஷா அல்லாஹ் நீண்டு நீந்த நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 21. திண்டுக்கல் தனபாலன் கூறியது...

  ////நான்
  கம்பன் வழி வந்தவளில்லை!
  கண்ணதாசன் பேத்தியில்லை!
  வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
  வைரமுத்துவின்
  வாசக்காற்றும் பட்டதில்லை! /////

  இந்த இல்லைகள் எதுவும்
  தேவையில்லை கவி எழுத !

  என்பதை நீருபித்து விட்டீர்கள் ! அருமை ! நன்றி சகோதரி !//

  இல்லைகள் என்னிடம்நிறைய இல்லை சகோ
  இருந்தபோதும் இல்லையென்ற சொல்லுக்கே
  இடமில்லை என் எண்ணத்தில் .

  தங்களின் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 22. //இது கவிதைகள் இல்லையென்றால் வேறு எதை கவியென்பதுக்கா..

  உங்களுக்கு இறைவன் தந்த அருமையான கவிவரம் அழகாய் கைப்பற்றிக்கொண்டீர்கள் வாழ்த்துகள்.பாராட்டுகள்..

  // பெயரில்லா கூறியது...


  ம்ம்ம்ம் சூப்பர் எங்களுக்கெல்லாம் வரமாடேங்கிறதே அம்மணி..

  சுஜி தங்களின் வாழ்த்துகளும் பாசம் நிறைந்த கருத்துகளும் நெஞ்சார்ந்த நன்றி..


  பெயரில்லா சகோ. முயற்ச்சியுங்கள் முயன்றால் முடியாததென்று எதுவும் உண்டோ..

  தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 23. இங்கிலீஷ்காரன். கூறியது...

  நீச்சல் அறிந்ததால் தான்..உங்களின் நீரோடையில் நீச்சல் அடிக்கும் சத்தம் (கவிதை) கேட்டுகொண்டே இருக்கு...!//

  வாங்க இங்லீஸ்காரர். தங்களில் முதல் வருகைக்கு மிகுந்த மகிழ்ச்சி..

  கவிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்க
  கரமேந்தி கேட்கிறேன்
  கிருபை செய்யும் இறைவன்
  கருணைமழை பொழிகிறான்..

  மிக்க நன்றி. சகோ..

  பதிலளிநீக்கு
 24. காஞ்சி முரளி கூறியது...

  இன்னாதிது...!

  யப்பா...!
  இந்த அழுகாணி ஆட்டத்துக்கு நான் வரல...!//

  கல்லோ ஹல்லல்லோஒ நாங்கயின்னா அழுகாணியாட்டம் ஆடுறோம் உண்மையாட்டம்தேன் ஒத்துகோங்க அப்பு..


  பொய் சொல்றதுக்கும்....!
  புளுகர்துக்கும்...!
  ஓர் எல்லை உண்டு மேடம்...!

  அண்டப்புளுகு...
  ஆகாசப்புளுகு...
  இதெல்லாம் கேள்விபட்டிருக்கேன்...!

  ஆத்தாடி...!//

  அதுசரி நான் யின்னா புளுகு புளுகினேன். யின்னா பொய் சொல்கின்னேன் ஏனிப்படி உண்மைச்சொன்னா இம்மாம்பெரிய உலகம் நம்பவே நம்பாதுன்னு சும்மாவா சொன்னாங்க.. அது உண்மையாவுல்ல கீது..

  பதிலளிநீக்கு
 25. அழகான வரிகள் சகோதரியே!
  என்னையும் நீரோடையில் நீந்த வைத்தீர்கள்.
  அட என்ன பொருத்தம் சகோதரிக்கும் எனக்கும் - நீரோடையில்.
  புத்தகம் வெளியிட என்னென்ன வழிமுறைகள்? நண்பர்கள் யாரேனும் உதவி செய்ய முடியுமா.
  mahesnila@gmail.com
  neerodai.com
  நீரோடை மகேஷ்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது