நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அமைதி பூப்பதெங்கே!ஏற்ற இறக்க வாழ்வு தனிலே
ஏற்றமொன்றையே ஏக்க உள்ளம்
கேட்டுத் தவித்திடுதே
இறக்கமொன்று வந்த போதினிலே
இன்னல்கள் கொண்டு
துடித்தே துவழ்கிறதே!

நிரந்தரமில்லா இவ்வுலக மண்ணினில்
நிரந்தர வாழ்வு தேடும் நெஞ்சங்களாகிடுதே!
எதையோ தேடித் தேடி
எங்கும் அலையாய் அலைகிறதே!
அதில் தன்னையே தொலைத்திடுதே!

இருப்பதைக் கொண்டு இன்பம் பெற்றால்
இல்லம் செழித்திடுமே!
உள்ளதைக் கொண்டு நல்லது செய்தால்
உள்ளம் குளிர்ந்திடுமே!
அற்ப வாழ்வும்  அற்புதமாகிடுமே!
அங்கே அமைதி பூத்துக் குலுங்கிடுமே!

அருளாளான் அள்ளித் தந்த
அற்புத வாழ்வினிலே
ஆயிரமாயிர அர்த்தங்கள்  பொதிந்து
மொட்டுக்களாகிறதே!
மொட்டு வெடித்து மெல்ல மலர்ந்து
அழகாய் பூத்திடுமே!
அன்புக்கொடி வழிதனில் அமைதி  படர்ந்திடுமே!
அதில் ஆன்மாக்களும் சுகம் பெறுமே!..

வியாழன் நேரக்கவிதையில் இலண்டன் வானொலியில் வலம் வந்த கவிதை, எனது வரிகளை உள்வாங்கி வாசித்தவிதம் அருமை. சகோதரி ஷைஃபா மாலிக் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

7 கருத்துகள்:


 1. மொட்டு வெடித்து மெல்ல மலர்ந்து அழகாய் பூத்திடுமே! அன்புக்கொடி வழிதனில் அமைதி படர்ந்திடுமே! அதில் ஆன்மாக்களும் சுகம் பெறுமே!..

  சுகமான கவிதை வரிகள்.. பாராட்டுக்கள்.  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 2. நிரந்தரமில்லா இவ்வுலக மண்ணினில்
  நிரந்தர வாழ்வு தேடும் நெஞ்சங்களாகிடுதே!
  எதையோ தேடித் தேடி
  எங்கும் அலையாய் அலைகிறதே!
  அதில் தன்னையே தொலைத்திடுதே!//

  உண்மை உண்மை .. மிக அழகாய் தொடுக்கிறீர்கள் வார்த்தைகள்..

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. அற்ப வாழ்வும் அற்புதமாகிடுமே!
  அங்கே அமைதி பூத்துக் குலுங்கிடுமே!
  //dhuuuuuuuuuuuuuuuuul malikka
  asaththungka..vaazththukal

  பதிலளிநீக்கு
 4. கவிதை நல்ல சிந்தனையுடன் வடிக்கப்பட்டிருக்கிறது அதுதான் தெளிவாகவும்,ஆளமாகவும் இருக்கின்றன வரிகள் வாழ்த்துக்கள்.தோழமையுடன்

  பதிலளிநீக்கு
 5. கவிதை நல்ல சிந்தனையுடன் வடிக்கப்பட்டிருக்கிறது அதுதான் தெளிவாகவும்,ஆளமாகவும் இருக்கின்றன வரிகள் வாழ்த்துக்கள்.தோழமையுடன்

  பதிலளிநீக்கு
 6. இதயங்கனிந்த
  இனிய
  புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  எல்லோர் வாழ்விலும்
  எல்லோர்
  இல்லங்களிலும்
  இன்பப் பூக்கள்
  இனிதே
  இவ்வாண்டு முழுதும் பூக்கட்டும்...

  வாழ்த்துக்களுடன்...
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு
 7. இதயங்கனிந்த
  இனிய
  புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  எல்லோர் வாழ்விலும்
  எல்லோர்
  இல்லங்களிலும்
  இன்பப் பூக்கள்
  இனிதே
  இவ்வாண்டு முழுதும் பூக்கட்டும்...

  வாழ்த்துக்களுடன்...
  காஞ்சி முரளி

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது