நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாழ்க்கைத் துணையின் புலம்பல்!
தாய்மடிதேடும் சேயைபோல்
உன்மடியில் என் தலைசாய்க்க
ஏங்கும் நெஞ்சதிற்கு
இதம் தந்து மகிழ்விப்பாயா?

விரலால் தலைகோதி
முன் நெற்றி முகம் நீவி
பேச்சால் பசியாற்றி
பெருமகிழ்வு தருவாயா?

நிலவுக்கு துணையாக
ஒரு விடிவெள்ளி  வருவதுபோல்
எனக்கு  துணையாக
எப்போதும் வருவாயா?

நீரோடை மீதினிலே
நிலவு  ததும்புவதுபோல்
என்மனக் குளத்தினிலே
நீச்சலடித்து கிடப்பாயா?

உனக்காக என்னிதயம்
விடாமல் துடிக்கிறது
விட்டுவிடாது எனதன்பை
உனதுயிரில் இணைப்பாயா?

என்னில் குறைகளேதும் உண்டெனினில்
குறைகள் களைய முனைவாயா?
என்னில் இல்லாத எதுவும்
பிறரிடத்தில் கண்டாயா?

நம் வாழ்வை காக்க நினைகிறேன்
உன் தோளில் சாய துடிக்கிறேன்
என் துடிப்பை அறிவாயா?
நம் வாழ்வை காப்பாயா?

வினாக்கள் விளைகிறது
விடைகளேதும் தருவாயா?
இல்லை
விதிவிட்ட வழியென்று
விட்டு விலக்கிப் போவாயா?

டிஸ்கி// மணமுடிக்கப்பட்டும் மனமிணையாமல் தவிக்கும் தம்பதியரின்  ஒருதலை அன்பின் புலம்பல்.
இலண்டன் வானொலியிl கடந்த வியாழன் வலம் வந்த கவிதை, வாசித்த சகோதரி ஷைஃபா மாலிக் அவர்களுக்கும். இதற்கான விமசர்னத்தை பகிர்ந்தளித்தமற்றுமொரு அன்புச் சகோதரி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

5 கருத்துகள்:

 1. என்னில் குறைகளேதும் உண்டெனினில்
  குறைகள் களைய முனைவாயா?
  என்னில் இல்லாத எதுவும்
  பிறரிடத்தில் கண்டாயா?//

  suppar suppppppar malikka, ungkal kavithaikal padikka ppadikka theenay inikirathu vazkaithaththuvangkalai mika azakaay vezipaduringkapaa. vazththukal..

  பதிலளிநீக்கு
 2. மணமுடிக்கப்பட்டும் மனமிணையாமல் தவிக்கும் தம்பதியரின் ஒருதலை அன்பின் புலம்பல்.//


  அடடே அங்குமா அப்படி? ஏனிப்படி . ஹூம் என்ன செய்ய புலவும்புவதைதவிர..

  பதிலளிநீக்கு
 3. மணமுடிக்கப்பட்டும் மனமிணையாமல் தவிக்கும் தம்பதியரின் ஒருதலை அன்பின் புலம்பல் அருமையா இருக்கு அக்கா.

  பதிலளிநீக்கு
 4. வினாக்கள் விளைகிறது
  விடைகளேதும் தருவாயா?
  இல்லை
  விதிவிட்ட வழியென்று
  விட்டு விலக்கிப் போவாயா?//
  வலிக்கிறது மலிக்கா

  அருமையாக படைகிறாய் அறுசுவைகள் பொருந்தி அனைத்து கவிகளையும்..
  வாழ்த்துகளோடு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது