நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மை மை மை.

 
உயிர் தருதல்
உருக் குலைதல்
உள்ளம் கொடுத்தல்
பெண்”மை”

 ஆர்ப்பரித்தல்
ஆழ்ந்துரைத்தல்
அரவணைத்தல்
ஆண்”மை”
 
உயிர் வதைத்தல்
உணர்வுடைத்தல்
நிலைகுலைத்தல்
பொய்”மை

உயிர் கசிதல்
உள்ளம் உடைதல்
நிலை குலைதல்
ஏழ்”மை”
 
இதயம் தொலைத்தல்
ஈர்த்து எடுத்தல்
இன்பம் நிறைத்தல்
இள”மை”
 
மதி மயக்கல்
மனம் கெடுத்தல் 
பேருண்மையும் மறை[த்]தல்
கண்”மை”
 
நிலைநிறுத்தல்
நிமிர்ந்து நடத்தல்
நீதி தழைத்தல்
நேர்”மை”
 
சுயம் காத்தல்
செயல் படுத்தல்
சுமை குறைத்தல்
திற”மை”
 
மனம் சிறத்தல்
நிலம் சிறத்தல்
செழி செழித்தல்
தூய்”மை”
துன்பம் சகித்தல்
தூசென நினைத்தல்
துவழாது இருத்தல்
பொறு”மை”

 
இவையணைத்தையும்
எனக்குணர்த்தி
எம்”மை”யும் எழுத வைத்த[ல்]து
மை மை மை உண்மை...
 
மை. தலைப்பிற்காக எழுதியது. அமீரக தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளது..
நன்றி வானலை வளர்தமிழ்..
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

13 கருத்துகள்:

  1. அனைத்தும் அரு'மை'கள்...

    அமீரக தமிழ்த்தேர் மாத இதழில் வெளியாகியுள்ளதற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. O h! "மை” G O D !

    எத்தனை எத்தனை “மை” கள் ;)))))

    எழுத்தினில் உங்கள்

    உண்’மை’
    நேர்’மை’
    பெரு’மை’
    பொறு’மை’
    ஆளு’மை’

    என அனைத்தையும்
    கண்டு மகிழ்ந்தேன்.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    நன்றிகள்.


    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  3. ‘மை’ய்யை
    ‘மை’(ம)ய்யமாக வைத்து...

    ‘மை’(மெ)ய்யாய்
    ‘மை’க் கவிதை வடித்துடன்...
    ‘மை’மெய்) சிலிர்க்க வைத்து...
    ‘மை’மெய்) மறக்கச் செய்த
    ‘மை’(ம)லிக்காவுக்கு வாழ்த்துக்கள்...


    வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!
    வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  4. ‘மை’ய்யை
    ‘மை’(ம)ய்யமாக வைத்து...

    ‘மை’(மெ)ய்யாய்
    ‘மை’க் கவிதை வடித்துடன்...
    ‘மை’மெய்) சிலிர்க்க வைத்து...
    ‘மை’மெய்) மறக்கச் செய்த
    ‘மை’(ம)லிக்காவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. ‘மை’ய்யை
    ‘மை’(ம)ய்யமாக வைத்து...

    ‘மை’(மெ)ய்யாய்
    ‘மை’க் கவிதை வடித்துடன்...
    ‘மை’மெய்) சிலிர்க்க வைத்து...
    ‘மை’மெய்) மறக்கச் செய்த
    ‘மை’(ம)லிக்காவுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. துன்பம் சகித்தல்

    தூசென நினைத்தல்

    துவழாது இருத்தல்

    பொறு”மை”

    ..super malikka. mika azakay ezuthuringka. vazththukal.

    பதிலளிநீக்கு
  7. அத்தனையும்
    பொய்மையின்றி
    உண்மை உண்மை உண்மையே....

    பதிலளிநீக்கு
  8. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...//

    அய்யாவின் வருகைக்கும் அன்பு நிறைந்த கருத்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  9. ..super malikka. mika azakay ezuthuringka. vazththukal.//

    வாங்க ஜமல் நலமா..

    வருகைக்கும் கருதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  10. Starjan ( ஸ்டார்ஜன் )கூறியது...
    அருமை
    // வாங்க சேக்.

    வருகைக்கும் அருமைக்கும் மிக்க நன்றிமா..

    பதிலளிநீக்கு

  11. //மகேந்திரன் கூறியது...
    அத்தனையும்
    பொய்மையின்றி
    உண்மை உண்மை உண்மையே....///

    வாங்க சகோ . வசந்தமண்டம் வசந்தமாய் நீராட வந்தமைக்கு
    வாஞ்சையான நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  12. இந்த கவிதை பத்திரிக்கை எதாவதில் வந்தால் நல்லாருக்குமெ என நினைத்து கொண்டே வாசித்தேன்...முடிவுரை பார்த்து அசந்து போனேன்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது