நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பழுக்காத இலையொன்று!தேடியெடுத்த வாழ்க்கை
தோற்றுவிட்டதாய் எண்ணி
வழக்கில் விட்டபோது
வாழ்ந்த வாழ்க்கையின்
வகைகளை சொல்ல வழியின்றி
வார்த்தைகள் சிறைப்பட்டுக்கிடந்தன

வாய்தாக்கள் வாங்காமல்
வழக்கு முடிவடைந்ததும்
வழக்கத்திற்க்கு மாறாக
வாக்குவாதமேயில்லாமல் நான்கு
விழிகளும் விசாரித்துக்கொண்டன

பிரியாவிடைபெறும் சமயம்
பொசுக்கென வந்தபோது -இதுவரை
சிறையிருந்ததாய் சிணுங்கிய இதயம் -ஏனோ
சிணுங்கியழத் தொடங்கின
சிதறிய வாழ்வையெண்ணி

பழுக்காத இலையொன்று
பட்டென எழுந்த காற்றில்
படபடத்து கீழே விழுந்து
பரிதவித்து போய்
பட்டமரநிழலில் ஒதுங்கியதுபோல்

பிரியம் அவநம்பிக்கையானபோது
பாசம் பொய்த்தபோது
நேசம் வேசம் கலைத்தபோது
நிம்மதி நெடுந்தூரம் போனபோது
நிறைவு நெஞ்சைவிட்டு அகன்றபோது

அவமானங்களை சுமந்தபடி
அடிநெஞ்சு கனத்தபடி
அச்சத்தோடு வாழ்வது சரியல்லவென்று
அச்சடித்த காகிதத்தின் அடியில்
அச்சுப் பிசகாமல் அப்படியே

விவாகத்தின்போது
அன்பினாலிட்ட  கையெழுத்தை
விவாகரத்தின்போதும்
அன்பைவெருதிட்டது
விரல்கள் விரும்பாமலே
விரக்தியான மனதோடு...

இக்கவிதை எழுத்து.காமில் வெளியாகியுள்ளது
 எழுத்து.காமிற்க்கு எனது நன்றிகள்.. 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

19 கருத்துகள்:

 1. படத்துக்கு கவிதையா..?? கவிதைக்கு படமா..?? :-))

  பதிலளிநீக்கு
 2. கவிதை எழுதிவிட்டு படத்தை வடிவமைத்தேன். ஏன் அண்ணாதே இப்படியொரு கேள்வி.

  அதுசரி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம் அதிகாலையில் அதிலும் முதல் கருத்தாக நீரோடைபக்கம் தெரியுது.. ஆத்தாடி சம்திங் ராங்கா.. இல்லை சம்திங்க ரைட்டா..

  பதிலளிநீக்கு
 3. பலரின் வாழ்க்கை இன்னும் இருட்டுக்குள்ளேயே மூழ்கி கிடக்கிறது வெளியில் சொல்ல வழியில்லாமல்..

  அதைபற்றியும் எழுதுங்களேன் மலிக்கா..

  உணர்வுகளை அப்படியே எழுதுறீங்களே எப்படி..
  சபாஷ் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்..

  பதிலளிநீக்கு
 4. உதிர்ந்த பழுக்காத இளையது
  காய்ந்து சருகாகுமுன்
  மனங்களில் மாற்றங்கள்
  ஏற்பட்டு வாழ்வியல் கூறுகளை
  உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்திடல் வேண்டும்...

  அருமையான கவிதை சகோதரி.

  பதிலளிநீக்கு
 5. வரிகள் ஒவ்வொன்றும் வெகு அருமை அக்கா
  இளசுகளுக்கு ஒருபாடம் இந்த பழுக்காத இலை..

  பதிலளிநீக்கு
 6. ///ஜெய்லானி கூறியது...
  படத்துக்கு கவிதையா..?? கவிதைக்கு படமா..?? :-))///

  Good Question from Mr. Jailani...!

  கவித...! கவித..!
  நல்லா இருக்கு.....!

  குறிப்பாக...!

  //பிரியாவிடைபெறும் சமயம்
  பொசுக்கென வந்தபோது -இதுவரை
  சிறையிருந்ததாய் சிணுங்கிய இதயம் -ஏனோ
  சிணுங்கியழத் தொடங்கின
  சிதறிய வாழ்வையெண்ணி///

  இதுதான்
  இல்லற வாழ்க்கையின்
  சூத்திரம்...!
  சுட்ஷுமம்...!

  அவிங்க ஏன் அழுதாங்கன்னு..
  அவங்களுக்கே தெரியாது...!
  இது
  என்றும்...
  எப்போதும்...
  எவராலும்...
  விளக்கமளிக்க முடியாதது...!

  இது என்றுமே...!
  "விடையில்லா வினாக்கள்"...!

  சரி..!
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்....!

  நீரோடைக்குன்னு கவிதை எழுதுற பழக்கமெல்லாம் போயிடுச்சா...!

  எழுத்து.காம்-க்கு எழுதி...
  அத மறுபிரசுரம் பண்றீங்க...!
  அப்போ...! "நீரோடை" சப்ளிமெண்டரியா....!

  பதிலளிநீக்கு
 7. //சரி..!
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்....!

  நீரோடைக்குன்னு கவிதை எழுதுற பழக்கமெல்லாம் போயிடுச்சா...!

  எழுத்து.காம்-க்கு எழுதி...
  அத மறுபிரசுரம் பண்றீங்க...!
  அப்போ...! "நீரோடை" சப்ளிமெண்டரியா....! //

  அண்ணாத்தேஏஏஏ... நான் ஒரு வரியில கேட்டா நீங்க 9 வரிக்கு கேக்குறீங்களே இது நியாயமா..?? அடுக்குமா..? அப்புறம் அக்கா என்னையதானே கோவிச்சிப்பாங்க ஹி...ஹி..... :-)))

  பதிலளிநீக்கு
 8. "சிங்கத்த

  சிறைல அடைச்சாலும்

  சிறையே

  சிதச்சுடும்..."

  ரொம்ப நாளாச்சு...!

  ஜெய்லானி சிங்கத்த சிக்கவச்சு...!

  அதா...!

  ஹா...! ஹா...! ஹா....!

  பதிலளிநீக்கு
 9. அது சரி மலிக்கா இங்க வந்து பேசிக்கிட்டு இருக்கிற இந்த இரு கிழட்டு சிங்களும் யாரு..

  ஒட்டிபிறக்காத ரெட்டைக்குழந்தைகளா இவங்களை பேஷ்புக்கிலும் பார்க்கிறேன் இங்கேயும் பார்கிறேன் அடிச்சி தூள் கிளப்புறாங்களே.

  இவங்களுக்கு கிழட்டு லொள்ளுங்க ந்னு பட்டம் கொடுக்கலாமா.. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 10. விவாகத்தின்போது | அன்பினாலிட்ட கையெழுத்தை | விவாகரத்தின்போதும் |
  அன்பைவெருதிட்டது | விரல்கள் விரும்பாமலே | விரக்தியான மனதோடு...
  எக்ஸலண்டான வரிகள். நான் நேரிடையாகக் கண்டு உணர்ந்த விஷயம் இது என்பதால் மனதில் தைத்தது. வாழ்த்துக்கள்ம்மா.

  பதிலளிநீக்கு
 11. சம்பத் கூறியது...

  பலரின் வாழ்க்கை இன்னும் இருட்டுக்குள்ளேயே மூழ்கி கிடக்கிறது வெளியில் சொல்ல வழியில்லாமல்..

  அதைபற்றியும் எழுதுங்களேன் மலிக்கா..

  உணர்வுகளை அப்படியே எழுதுறீங்களே எப்படி..
  சபாஷ் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்..//

  வாங்க சம்பத். அப்பா நலமுடன் இருக்காங்களா?

  தங்களின் பாசத்துக்கு மிக்க நன்றி.. நிச்சயம் எழுதுகிறேன் சம்பத்..

  பதிலளிநீக்கு
 12. மகேந்திரன் கூறியது...

  உதிர்ந்த பழுக்காத இளையது
  காய்ந்து சருகாகுமுன்
  மனங்களில் மாற்றங்கள்
  ஏற்பட்டு வாழ்வியல் கூறுகளை
  உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்திடல் வேண்டும்...

  அருமையான கவிதை சகோதரி.//

  சகோதரரின் வார்த்தைகள் மிக நன்று. அப்படி நடந்தால் வாழ்க்கை வழமாகுமே..

  சகோவிற்க்கு நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 13. // susi கூறியது...

  வரிகள் ஒவ்வொன்றும் வெகு அருமை அக்கா
  இளசுகளுக்கு ஒருபாடம் இந்த பழுக்காத இலை..//

  வாங்கம்மா வாங்க எங்கே அந்தபக்கம் ஆளையே காணோம். ஏதும் விசேசமா..


  ரொம்ப நன்றி சுஜி..

  பதிலளிநீக்கு
 14. காஞ்சி முரளி /இதுதான்
  இல்லற வாழ்க்கையின்
  சூத்திரம்...!
  சுட்ஷுமம்...!//


  அனுபவசாலிங்க சொல்லுறப்ப கேளுங்கப்பா இதுதான் வாழ்க்கை

  பதிலளிநீக்கு
 15. காஞ்சி முரளி//அவிங்க ஏன் அழுதாங்கன்னு..
  அவங்களுக்கே தெரியாது...!
  இது
  என்றும்...
  எப்போதும்...
  எவராலும்...
  விளக்கமளிக்க முடியாதது...!

  இது என்றுமே...!
  "விடையில்லா வினாக்கள்"...!//

  உண்மைதான் சகோ. விடைதேடும் பலவினாக்களுக்கு வினாக்களே விஞ்சி நிற்கின்றன..

  பதிலளிநீக்கு
 16. //சரி..!
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்....!

  நீரோடைக்குன்னு கவிதை எழுதுற பழக்கமெல்லாம் போயிடுச்சா...

  எழுத்து.காம்-க்கு எழுதி...
  அத மறுபிரசுரம் பண்றீங்க...!
  அப்போ...! "நீரோடை" சப்ளிமெண்டரியா....!// //


  அச்சோ ஏனுங்கப்பூ இப்படியொரு கேள்வி அப்படியெல்லாமில்லை. எதார்த்தமாக அங்கு சென்றபோது பல கவிஞர்களின் பட்டியலிருந்தது.அதில் நம்ம கவிதையும் அதாவது கவிதையின்னு கிறுவதும் வரட்டுமேன்னு எழுதுறோங்க அம்பூட்டுதான்

  பதிலளிநீக்கு
 17. ஜெய்லானி கூறியது...

  //சரி..!
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகோணம்....!

  நீரோடைக்குன்னு கவிதை எழுதுற பழக்கமெல்லாம் போயிடுச்சா...!

  எழுத்து.காம்-க்கு எழுதி...
  அத மறுபிரசுரம் பண்றீங்க...!
  அப்போ...! "நீரோடை" சப்ளிமெண்டரியா....! //

  அண்ணாத்தேஏஏஏ... நான் ஒரு வரியில கேட்டா நீங்க 9 வரிக்கு கேக்குறீங்களே இது நியாயமா..?? அடுக்குமா..? அப்புறம் அக்கா என்னையதானே கோவிச்சிப்பாங்க ஹி...ஹி..... :-)))//

  இந்த புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறேன் என எதிரேயிருக்கு சுவற்றிலேயும் முட்டிவிட்டு வேட்டிக்கை பார்ப்பதென்பது இதுதானோ..

  பதிலளிநீக்கு
 18. காஞ்சி முரளி கூறியது...

  "சிங்கத்த

  சிறைல அடைச்சாலும்

  சிறையே

  சிதச்சுடும்..."

  ரொம்ப நாளாச்சு...!

  ஜெய்லானி சிங்கத்த சிக்கவச்சு...!

  அதா...!

  ஹா...! ஹா...! ஹா....!//

  சிங்கம் சீறிவந்து சின்ன புள்ளையைல்ல மிரட்டுது..

  பதிலளிநீக்கு
 19. கணேஷ் கூறியது...

  விவாகத்தின்போது | அன்பினாலிட்ட கையெழுத்தை | விவாகரத்தின்போதும் |
  அன்பைவெருதிட்டது | விரல்கள் விரும்பாமலே | விரக்தியான மனதோடு...
  எக்ஸலண்டான வரிகள். நான் நேரிடையாகக் கண்டு உணர்ந்த விஷயம் இது என்பதால் மனதில் தைத்தது. வாழ்த்துக்கள்ம்மா.//

  பலரின் வாழ்வில்
  வாழ்வியலை தொலைவிட்டு
  வலக்கவியலையல்லாவா
  வாரிசாக பெறுகிறார்கள்..

  தோற்றுபோகும் வாழ்க்கைக்கு
  தன்னை தயராக்கிக்கொள்ளும் தலைமுறைகள் சிந்திக்கவேண்டும்.

  மிக்க நன்றிண்ணா..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது