நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அரசியலென்பது..


தேர்ந்தெடுக்கும் மக்களை
திண்டாடவைக்கும் 
குறுக்குத் தந்திரம்
கை தேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த
தாரக மந்திரம்


பாமரர்களின் தாகம் தீர்க்காத 
கானல் நீர்
பணம் படைத்தோர் வாய்கொப்பளிக்கும்
வாசனைப் பன்னீர்
கோடிகளை காக்கும் கவசப்பெட்டி-தெரு
கோடிகளை அடக்கியாளும் கபடபுத்தி


ல்லாதோர் தூக்கத்தில் வந்துபோகும்
கருப்பு வெள்ளைக் கனவு
இருக்கப்பட்டோர் கண்ணெதிரில்
கூத்தாடும் செயற்கை நிலவு


திகார வர்க்கங்களின்
ஆஸ்தான சிம்மாசனம்-இது
ஆட்டக்காரர்கள் போட்டிபோட்டு
அரங்கேறும் ஆடுகளம்


ரசியல் என்பது
அழுக்கென்று சொல்லியே
குப்பையாக்கப்பட்ட ஒரு கோபுரம்
அதை தூய்மைப்படுத்த வேண்டும்
மனத்தூய்மை நிறைந்த
மனிதமுள்ள நிர்வாகம்


சாக்கடையென்று சொல்லியே
அதனோடு சாக்கடையானார்கள் பலர்
அதனையும் சுத்தம் செய்து
சாதனை படைத்துள்ளார்கள் -நற்ச்
சான்றோர்கள் சிலர்


கூட்டுச் சதி குறுக்கு புத்தி
கூடிக் கொள்ளை கூத்துகும்மாளமென
நிறைந்து வழியும் உலக போதை
இவைகளனைத்தும் விட்டொழித்தால்
இதைவிட இல்லை
மக்களுக்கு வழிகாட்டும் பாதை


ல்லது நடக்குமென
எதிர்பார்க்கும் நெஞ்சங்கள்
வரும் தலைமுறைக்குள்ளாவது
நிறைவேறிடுமா? நம் எண்ணங்கள்....

டிஸ்கி.// என்ன இப்போது பாத்து இந்த கவிதை அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. அரசியல் அப்படிங்கிற தலைப்புகு கவிதை எழுதுசொன்னதால் வந்து விழுந்த வரிகள் அம்பூட்டுதான்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

17 கருத்துகள்:

 1. ஹை...!
  நான்தான் 1stடா.........!

  ரொம்ப நாளாச்சுப்பா....!
  ஹை...! வடை எனக்குதான்....!


  - Kanchi Murali

  பதிலளிநீக்கு
 2. நல்ல
  கருத்துக்களுடன்
  காலத்தே தேவையான
  கவிதை...!

  வாக்கியங்களும்...
  வரிகளும் அற்புதம்...!

  ஆனால்...!

  ////அதனையும் சுத்தம் செய்து
  சாதனை படைத்துள்ளார்கள் -நற்ச்
  சான்றோர்கள் சிலர்////

  sorry ..! இன்றைய நிலையில் இது சாத்தியமில்லை...!

  பதிலளிநீக்கு
 3. வாங்கோ வாங்கோ. வடை சட்னி எல்லாம் ஒங்களுக்கு முதல கிடைச்சது அதுவும் இப்பதிவுக்கு சரியான சரியே எப்புடி தலீவா இப்புடியெல்லாம்..

  பதிலளிநீக்கு
 4. //sorry ..! இன்றைய நிலையில் இது சாத்தியமில்லை...!//

  எச்சூஸ்மீ . ..”படைத்துள்ளார்கள்” என்றுதானே கூறியுள்ளேன்..

  பதிலளிநீக்கு
 5. காஞ்சி முரளி கூறியது...

  நல்ல
  கருத்துக்களுடன்
  காலத்தே தேவையான
  கவிதை...!

  வாக்கியங்களும்...
  வரிகளும் அற்புதம்...!//

  அப்பாடா கொஞ்சூண்டு சந்தோஷம் நேத்திக்கு தந்த கருத்துகளுக்கு இன்றைக்கு அப்பாடாப்பா..

  ரொம்ப நன்றிங்க சகோ..

  பதிலளிநீக்கு
 6. இந்த

  நக்கலு... நையாண்டி...குத்தலு... குசும்பலு... ஏகதாச்சி...!

  இதெல்லாம் "துபாய்"யோட முடியலையா..!

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. இததான்...! இதத்தான்...!

  எதிர்பார்த்தேன்....!

  இதுதான்....! மலிக்காவின் கவிதைகள்...!

  பதிலளிநீக்கு
 9. காஞ்சி முரளி கூறியது...

  இந்த

  நக்கலு... நையாண்டி...குத்தலு... குசும்பலு... ஏகதாச்சி...!

  இதெல்லாம் "துபாய்"யோட முடியலையா..!//

  அதெல்லாம் முடியாதுங்கோ இன்னும் அதிகமாத்தான் தொடரும்

  பதிலளிநீக்கு
 10. தா.முரளிதரன் கூறியது...

  இததான்...! இதத்தான்...!

  எதிர்பார்த்தேன்....!

  இதுதான்....! மலிக்காவின் கவிதைகள்...!//

  பெரியவா கிட்ட நல்லபெயர் எடுக்கிறது கொஞ்சமல்ல ரொம்ப சிரமந்தேன் போலும்..

  அம்மாடியோ இத இதத்தான் எதிர்பர்த்தேன்.. ரொம்ப நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 11. மகேந்திரன் கூறியது...

  அர (ரசிக்கவைத்த) சியல்//

  இப்போதெல்லாம் அ சி ரசிக்கும்படியாகக்கூட இல்லையின்னு நெனக்கிறேன் சகோ..

  இதையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 12. அரசியலையும் விட்டுவைக்கலையா உங்க கவிதை.

  ஆனாலும் உண்மைய புட்டு புட்டு வைச்சிட்டீங்க.

  அதுசரி நீங்க எப்போ அரசியலுக்கு வரபோறீங்க.

  கை தேர்ந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த தாரக மந்திரம். அருமை

  இப்பெல்லாம் அரசியல் சாக்கடையவிட கேவலமா இருக்குங்க. நாமாதான் அதை சுத்தப்படுத்தனும்.

  கவிதை மிகவும் அருமை. நேர்த்தியாக வரிகளை தேர்ந்தெடுக்குறீங்க வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

  பதிலளிநீக்கு
 13. அரசியல் பற்றிய நல்லதொரு அலசல்.

  இருப்பினும் அது எப்போதுமே அடசல்.

  சுத்தமாவதென்பது சுத்தமாக நடக்காது.

  பதிலளிநீக்கு
 14. ////M .இராஜேந்திரன் சொன்னது…
  அதுசரி நீங்க எப்போ அரசியலுக்கு வரபோறீங்க./////

  ஹி..! ஹி..! இது தெரியாத மிஸ்டர்...!

  கவிஞர் மலிக்கா....!
  முத்துப்பேட்டை 7வது வார்டு கவுன்சுலருக்கு போட்டி போடுறாங்க...!

  இது தெரியாதா....?

  கா.கூ.கா. கட்சி சார்பா போட்டியிடுறாங்க...!

  இன்னைக்கு கவுன்சிலர்...
  அப்புறம் சேர்மன்,
  எம்.எல்.ஏ.,
  எம்.பி.,
  மந்திரி.,
  அப்படியே போய் முதலமைச்சர்....!

  இப்படியே தொடரும்....!

  ஹி...ஹி...ஹி.....!

  பதிலளிநீக்கு
 15. கவிதை சொல்ல கண்ணதாசனே தேவையில்லை நீங்கள் இருக்கையில்..
  எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது