நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சிக்கித் தவிக்கும் சனநாயகம்


சனநாயக நாட்டில்
சனங்களுக்கேது மதிப்பு!            
பணநாயகப் பிடியில்
சிக்குண்டல்லவா கிடக்கு!              
ஆள்வோரின் கையில்
அதிகாரம் ஏந்தி! 
அடைத்து வைக்கப்பட்டுள்ளதோ                    
சனநாயக சாந்தி!

அரசைக்கூட தேர்ந்தெடுக்கும் அதிகாரம்                       அத்தனைபேருக்குமுண்டு-ஆனால்                          
தேர்ந்தெடுக்கபட்டவன் தினம் கோடியாள                  
தேர்ந்தெடுத்தவன் நிலையோ!                     
தெருக்கோடியில் வாட!

எவ்வளங்களில்லை என்றெண்ணுமளவிற்க்கு              
எல்லாமும் உண்டு சனநாயக நாட்டில்                      
என்ன இருந்தும் என்ன பயன்!                    
எத்தனையோ மக்கள் இன்னும் இருப்பதோ                  
எந்நாளும் வறுமைக்கோட்டின் கீழ்!

உண்மைகளை உறங்க வைத்து                             
பொய்மைகளை ஆட்டுவிக்கும் ராஜதந்திரம்                 
உரிமைகள் பலயிருந்தும்     
அதனை பறித்தும், பறிகொடுத்தும்                       
அடிமையாக்கப்படுதே தினம் தினம்!

சட்டப்படி எல்லோரும் சரிசமம்தான்                         
சாதிப்படி பார்த்தால் சரிந்த நிலைதான்!              
சத்தியவான்களென மார்த்தட்டிக்கொண்டும்                 
சண்டை பலமூட்டி வேடிக்கைகள் காணும்                   
இதனை புரிந்தும் புரியாத சனங்கள் -பாவம்                 
இவர்களுக்காக தீக்கூட குளிக்கும் !

மனசாட்சியற்றோர் அரசாட்சியாண்டால்                     
மாசற்ற பூமி அமையுமா சாமி!                    
மனசாட்சி விற்று மன்னராக ஆனால்                       
மக்கள் நிலையெல்லாம் என்னாகும் யோசி!           
சனநாயகம் சரியாக அமைய –முதலில்                     
சனங்களெல்லாம் தெளிவாக வேண்டும்!

மதியிருந்தும் மக்கள்
மதியிழப்பதை விடுத்து               
மதியுடையோராக இருந்தால்                               
மண்ணும்கூட பொன்னாக மாறும்                          
சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி                       
சனநாயகம் வீழாதே எந்நாளும்...

இக்கவிதை” சனநாயகம்” என்னும் தலைப்பிற்க்காக  அமீரக தமிழ்தேர்  இதழுக்காக எழுதியது. நன்றி தமிழ்தேர்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..             

22 கருத்துகள்:

  1. //மதியிருந்தும் மக்கள்
    மதியிழப்பதை விடுத்து
    மதியுடையோராக இருந்தால்
    மண்ணும்கூட பொன்னாக மாறும்
    சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி
    சனநாயகம் வீழாதே எந்நாளும்...//

    அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

    //இக்கவிதை” சனநாயகம்” என்னும் தலைப்பிற்க்காக அமீரக தமிழ்தேர் இதழுக்காக எழுதியது. நன்றி தமிழ்தேர்..//

    இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல சாட்டையடி ....
    இன்னும் சுழட்டுங்கள் சகோ உங்கள் சாட்டையை .....

    பதிலளிநீக்கு
  3. கல்யாண் சிவபிரகாசம்.1 ஜூன், 2011 அன்று 9:31 AM

    //தேர்ந்தெடுக்கபட்டவன் தினம் கோடியாள
    தேர்ந்தெடுத்தவன் நிலையோ!
    தெருக்கோடியில் வாட!//

    சத்தியமான உண்மைங்க சகோ. கோடிக்கோடியாய் கொள்ளை அடிப்பாங்க. நாமதான் முட்டாள். என் படிப்புக்காக எத்தனை பெரியதலையை பார்க்க வாசலில் நின்னுருப்பேன் இப்ப நினைச்சாலும் ச்சேன்னு இருக்கு.

    மலிக்காக்கான்னு கூப்பிடவா. தினமணிவழியே உங்க தளம் வந்தேன். மிக அருமையான படைப்புகளாக இருக்கு. உங்க வலைதளம் இனி தொடர்ந்து வருவேன் காலையில் பேப்பர் படிப்பதற்க்கு முன்னால் இங்குவந்து படித்துக்கொள்கிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் எழுத்தில் ஈர்ப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா..

    பதிலளிநீக்கு
  4. நல்ல சாட்டையடி// இதையே நானும் வழிமொழிகிறேன்.
    பின்னிட்டீங்க மலிக்கா. அரசியலுக்கா மக்களுக்களா? அல்லது மக்களுக்காக அரசியலா. நம்மையே கேள்விகேட்கனும். நாம் சரியாக இல்லையென சொல்லமுடியாது சரியாக இருந்தாலும் சரியில்லாமல் அல்லவா அக்கிவிடுறாங்க..

    //சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி
    சனநாயகம் வீழாதே எந்நாளும்...//

    இந்த வரிகள் நிஜமாக நானும் வேண்டுகிறேன்..

    பாராட்டுக்கள் மலிக்கா..

    பதிலளிநீக்கு
  5. அரசைக்கூட தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அத்தனைபேருக்குமுண்டு-ஆனால்
    தேர்ந்தெடுக்கபட்டவன் தினம் கோடியாள
    தேர்ந்தெடுத்தவன் நிலையோ!
    தெருக்கோடியில் வாட!//

    ஜனநாயக நாட்டில், ஒரு சில அரசியல் வாதிகளின் சுய நலத்திற்காக மேற்கொள்ளப்படும் ஊழலின் மூலம் மக்கள் வாழ்வு எவ்வாறு மாறுபடுகின்றது என்பதனை உங்களின் கவிதை சொல்லுகிறது.

    அருமையான கவிதை சகோ.

    பதிலளிநீக்கு
  6. அதான் சிக்கி சீரழியுதே. இனியும் சீரழியபோகுதே வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க ஆரத்தி எடுத்து ஆத்துல போடுங்க..

    பதிலளிநீக்கு
  7. ஏன் இப்படி என்று நிறைய கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறேன். ஆனால் சனநாயகத்தினை போக்கினை மாற்றும் வழி அறிந்திடவில்லை. சிந்தனைக்குரிய கவிதை. நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  8. ஜன நாயகம் குறித்த உங்கள்
    உரத்த சிந்தனை
    படிப்போர் உள்ளத்தில்
    சூடேற்றிப் போகுது
    சிந்தனையை தூண்டிப்போகும்
    நல்ல பதிவு
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அரசியல் சாக்கடையைக் கழுவித் துடைக்க சாதாரண மக்கள்தான் நினைக்கிறோம்.அரசியல் சாக்கடை நாத்தம்தான் சர்வசாதரணம்.
    திருத்துவது கஸ்டம்.பணம் பதவி !

    பதிலளிநீக்கு
  10. மாற்றம் முதலில் மக்கள் மனத்தில் உருவாக வேண்டும். பயிரையும் களையையும் பகுத்தறியும் தெளிவு வேண்டும். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். உணர்ந்து நடந்தால் உயர்வு நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  11. ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ண‌ நாய‌க‌ம் ஆகி ரெம்ப‌ நாள் ஆச்சி ச‌கோ..

    பதிலளிநீக்கு
  12. வை.கோபாலகிருஷ்ணன்// தாங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி.


    தினேஷ்குமார் கூறியது...

    நல்ல சாட்டையடி ....
    இன்னும் சுழட்டுங்கள் சகோ உங்கள் சாட்டையை //


    என்னைய தேடிவந்து சுழட்டிமாட்டாங்களா சகோ.....

    மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  13. கல்யாண் சிவபிரகாசம்.//

    வாங்க கல்யாண். அனுபவம் நமக்கு பாடம். தங்களின் அன்பு நிறைந்த கருதுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.

    //மலிக்காக்கான்னு கூப்பிடவா. // தாளரமாக கூப்பிடலாம் தம்பி..

    தொடர்ந்து வாருங்கள்..

    பதிலளிநீக்கு
  14. வாங்க ராஜதுரை. நாம்தான் விழிப்போடு இருக்கனும்.வருகைக்கும் அருமையான கருதுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

    //மேட்டுக்குடி.. கூறியது...

    அதான் சிக்கி சீரழியுதே. இனியும் சீரழியபோகுதே வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க ஆரத்தி எடுத்து ஆத்துல போடுங்க..//

    சீரழிக்காரணம் யாருன்னு யோசிச்சா தெரியும்தானே மேட்டுக்குடி. இனியும் சீரழியாமல் தடுக்கலாமல்லவா. ஓ அதுவும் முடியாதேன்னு இருந்தா அதோகதிதான் நமக்கு..

    அது சரி எந்த ஆத்துல போடச்சொல்றேள்..

    வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  15. //நிரூபன் கூறியது...அரசைக்கூட தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அத்தனைபேருக்குமுண்டு-ஆனால்
    தேர்ந்தெடுக்கபட்டவன் தினம் கோடியாள
    தேர்ந்தெடுத்தவன் நிலையோ!
    தெருக்கோடியில் வாட!//

    ஜனநாயக நாட்டில், ஒரு சில அரசியல் வாதிகளின் சுய நலத்திற்காக மேற்கொள்ளப்படும் ஊழலின் மூலம் மக்கள் வாழ்வு எவ்வாறு மாறுபடுகின்றது என்பதனை உங்களின் கவிதை சொல்லுகிறது.

    அருமையான கவிதை சகோ.//

    தன்னுடைய சுயநலங்களுக்காக பிறரின் வாழ்வை சீரழிப்பது எவ்விதத்தில் நியாயம். நியாமில்லாதவர்களிடம் நியாயம் எங்கே கிடைக்கபோகிறது என்கிறீர்களா அதுவும் உண்மைதான் சகோ..

    மிக்க நன்றி சகோ..

    //நாடோடி கூறியது...

    ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ண‌ நாய‌க‌ம் ஆகி ரெம்ப‌ நாள் ஆச்சி ச‌கோ..//

    அப்ப நான் தெரிஞ்சிக்கத்தான் லேட்டா. சரியாப்போச்சி போங்க..

    மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  16. //சாகம்பரி கூறியது... ஏன் இப்படி என்று நிறைய கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறேன். ஆனால் சனநாயகத்தினை போக்கினை மாற்றும் வழி அறிந்திடவில்லை. சிந்தனைக்குரிய கவிதை. நன்றி மலிக்கா.//

    நாமே கேள்வியும் கேட்டு நாமே பதிலும் சொல்லிக்கொள்ளவேண்டிய நிலமையாகிவிட்டது இல்லையா!.

    மாற்றம் வருமென்ற பலமனங்களில் நானும் ஒருத்தியாக..

    மிக்க நன்றி சகோதரி..

    பதிலளிநீக்கு
  17. Ramani கூறியது...

    ஜன நாயகம் குறித்த உங்கள்
    உரத்த சிந்தனை
    படிப்போர் உள்ளத்தில்
    சூடேற்றிப் போகுது
    சிந்தனையை தூண்டிப்போகும்
    நல்ல பதிவு
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்//

    அப்பசரி சுடவேண்டியவர்களுக்கு சுடும். வாழ்த்துக்களுக்கும் அருமையான கருத்துக்கும் .. மிக்க நன்றி ரமணி சார்..

    பதிலளிநீக்கு
  18. //ஹேமா கூறியது...

    அரசியல் சாக்கடையைக் கழுவித் துடைக்க சாதாரண மக்கள்தான் நினைக்கிறோம்.அரசியல் சாக்கடை நாத்தம்தான் சர்வசாதரணம்.
    திருத்துவது கஸ்டம்.பணம் பதவி !//

    சுத்தம் செய்வாவது நினைக்கிறோமே! நினைக்க நினைக்க ஒருநாள் நடக்கும், சுத்தமாகும் என கனவுகள் வேறு கலர்கலராக கண்டுகொண்டு இருக்கிறோம். நிஜமாகுமா?என பொருத்திருந்து பார்போம் தோழி..

    பதிலளிநீக்கு
  19. //கீதா கூறியது...

    மாற்றம் முதலில் மக்கள் மனத்தில் உருவாக வேண்டும். பயிரையும் களையையும் பகுத்தறியும் தெளிவு வேண்டும். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். உணர்ந்து நடந்தால் உயர்வு நிச்சயம்.//

    வாங்க கீதா. உணர்தல்வேண்டும் உயர்வும் வேண்டும். களைகளென தெரிந்து அறுதெரியப்படாமல் இருப்பதால்தான் பயிரையே நாசம் செய்துவபோல் மண்டிவிடுகிறது..

    வருகைக்கும் புரிதாலான கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  20. மனசாட்சியற்றோர் அரசாட்சியாண்டால்
    மாசற்ற பூமி அமையுமா சாமி!
    மனசாட்சி விற்று மன்னராக ஆனால்
    மக்கள் நிலையெல்லாம் என்னாகும் யோசி!
    சனநாயகம் சரியாக அமைய –முதலில்
    சனங்களெல்லாம் தெளிவாக வேண்டும்!

    மதியிருந்தும் மக்கள்
    மதியிழப்பதை விடுத்து
    மதியுடையோராக இருந்தால்
    மண்ணும்கூட பொன்னாக மாறும்
    சாய்ந்துவிடாத சட்டங்களும் தோன்றி
    சனநாயகம் வீழாதே எந்நாளும்...
    இக்கவிதை” சனநாயகம்” என்னும் தலைப்பிற்க்காக அமீரக தமிழ்தேர் இதழுக்காக எழுதியது. நன்றி தமிழ்தேர்..//

    இதழில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள். மலிக்கா..

    பதிலளிநீக்கு
  21. //மதியிருந்தும் மக்கள்
    மதியிழப்பதை விடுத்து
    மதியுடையோராக இருந்தால் மண்ணும்கூட பொன்னாக மாறும் //
    அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. //மதியிருந்தும் மக்கள்
    மதியிழப்பதை விடுத்து
    மதியுடையோராக இருந்தால் மண்ணும்கூட பொன்னாக மாறும் //
    அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது