நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எதிரி வேறெங்குமில்லை!உறங்கப்போகும்முன் இவ்வுலகைக்கண்டு  பயப்பட்டு
உறங்கியெழும்போது உதறிவிட்டு விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

கெட்டவர்களைக் கூட
நல்லவர்களென நம்பிக்கை கொள்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தைரியமாக முடிவெடுத்தபின்பும்-சிலசமயம்
தடுமாறி தவறாகி விடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

துரோகங்களை கண்டு துவண்டுபோய்
சுதாரிக்கத் தோன்றாமல் கிடக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

தெளிவுகள் கண்ணெதிரே தெரிந்தபின்பும்
மறைவானவற்றையே தேடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

மதிசொல்லும் அறிவுரையை ஏற்கமறுத்து-பலசமயம்
சதிகளை விதிகளென நம்பிவிடுகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பாசாங்குகளை பாசமென நம்பி
பாதாளத்தில்கூட விழத்துடிகிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பசுந்தோல் போர்த்திய புலிகளுக்கு மத்தியில்
பால்மனம் மாறா பச்சிளமாகவே இருக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

பொய்யான உலகில் மெய்யாக வாழ
வெள்ளாந்தியான உள்ளம் அடம்பிடிக்கிறது
எதிரி எங்கேயுமில்லையென்று!

இப்படி

எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று! 
எண்ணும்போதே எழுந்தது எதிரி 
எனக்குள்ளிருந்து....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

 1. கவிதை அருமை. அதைவிட அருமை கவிதைக்குத்தகுந்தாற்போல மிகவும் பொருத்தமான அந்தப்படம்.

  அதை உற்றுப்பார்த்தால் தெரிகிறது அதனுள்ளே நாமோ அல்லது நமக்குள்ளேயே உள்ள எதிரியோ!

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. //எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
  எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று!
  எண்ணும்போதே எழுந்தது எதிரி
  எனக்குள்ளிருந்து....//

  நிஜமோ நிஜம்...

  அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 3. எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
  எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று!
  எண்ணும்போதே எழுந்தது எதிரி
  எனக்குள்ளிருந்து....


  ..... superb!

  பதிலளிநீக்கு
 4. //Rathnavel கூறியது...

  நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

  // எல் கே கூறியது...

  கவிதை அருமை மலிக்கா//

  மிக்க மகிழ்ச்சி கார்த்தி..

  பதிலளிநீக்கு
 5. //வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  கவிதை அருமை. அதைவிட அருமை கவிதைக்குத்தகுந்தாற்போல மிகவும் பொருத்தமான அந்தப்படம்.

  அதை உற்றுப்பார்த்தால் தெரிகிறது அதனுள்ளே நாமோ அல்லது நமக்குள்ளேயே உள்ள எதிரியோ!

  பாராட்டுக்கள்.//
  வெகுநேரமானது இப்படை எடுக்க. பின்ன நமக்குள் இருக்கும் எதிரியை சீக்கிரம் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதா!

  ரொம்ப சந்தோஷம் அய்யா தங்களின் அன்பான கருதிற்கு. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 6. //சிசு கூறியது...

  //எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
  எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று!
  எண்ணும்போதே எழுந்தது எதிரி
  எனக்குள்ளிருந்து....//

  நிஜமோ நிஜம்...

  அருமையான கவிதை.//

  வாங்க சிசு. இப்[உங்க]பெயர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. வருகைக்கு கருதிற்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 7. // Chitra கூறியது...

  எதிரிகளின் சாம்ராஜ்ஜியத்தில்
  எனக்கெதிரி எங்கேயுமில்லையென்று!
  எண்ணும்போதே எழுந்தது எதிரி
  எனக்குள்ளிருந்து....


  ..... superb!//

  நன்றியோ நன்றி சித்துக்கா..

  பதிலளிநீக்கு
 8. //meenu-asha கூறியது...

  அருமை.உண்மை

  // meenu-asha கூறியது...

  அருமை,உண்மை//

  வாங்க மீனு .தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 9. உண்மையைச் சொல்லிவிட்டீர்கள் தோழி !

  பதிலளிநீக்கு
 10. என்ன ஒரு அருமையான கவிதை. உள்ளத்திருப்பதை ஒளித்துவைக்காமல் வெளியுலகிற்க்கு உண்மையை சொல்வது எல்லாராலும் முடியுமா. அதான் மலிக்கா அனைத்திலும் தன்னை தனித்தவளாக சிறந்தவளாக காட்டுவதால்தான் உன்கவிதைகள் பலருக்கும் பிடிக்கிறது.

  எதிரி எங்குமில்லை நம்மில் தான் உள்ளது என்பதை பட்டவர்தனமாக சொன்னதற்க்கு பாராட்டுக்கள் மலிக்கா.

  பொய்யான உலகில் மெய்யாக வாழ்வதா? என்ன கிண்டலா? சும்மா சொன்னேண்டா.. உன்னால்முடியும் உன்னால்முடியும். அசத்து. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 11. அசத்தலான வரிகள் ...
  மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ...

  பதிலளிநீக்கு
 12. க‌விதை ரெம்ப‌ ந‌ல்லாயிருக்கு ச‌கோ...

  பதிலளிநீக்கு
 13. பலமுறை படிக்கத் தூண்டும் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 14. எதிரி வேறெங்குமில்லை...!
  உனக்குள்ளேதான்...!

  உன் வாழ்கையின்
  முதல் எதிரியே நீதான்...!
  உனக்குள்
  உறைந்திருப்பவன்...!
  மறைந்திருப்பவன்....! என்பதை சொல்லும் கவிதை...!

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 15. // சிவகாமி கூறியது...

  என்ன ஒரு அருமையான கவிதை. உள்ளத்திருப்பதை ஒளித்துவைக்காமல் வெளியுலகிற்க்கு உண்மையை சொல்வது எல்லாராலும் முடியுமா. அதான் மலிக்கா அனைத்திலும் தன்னை தனித்தவளாக சிறந்தவளாக காட்டுவதால்தான் உன்கவிதைகள் பலருக்கும் பிடிக்கிறது.

  எதிரி எங்குமில்லை நம்மில் தான் உள்ளது என்பதை பட்டவர்தனமாக சொன்னதற்க்கு பாராட்டுக்கள் மலிக்கா.

  பொய்யான உலகில் மெய்யாக வாழ்வதா? என்ன கிண்டலா? சும்மா சொன்னேண்டா.. உன்னால்முடியும் உன்னால்முடியும். அசத்து. வாழ்த்துக்கள்..//

  என்னம்மா என்னை கலாய்க்கிறீங்களா.. ஏதோ ள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டேன் அம்ம்புட்டுதான்.. பொய்யான உலகில் மெய்யாக வாழ்ந்துதான் பார்ப்போமே..

  ரொம்ப சந்தோஷமா தங்களின் பாசம் நிரைந்த கருதுரைக்குமனம் நெகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சிமா..

  //ஹேமா கூறியது...

  உண்மையைச் சொல்லிவிட்டீர்கள் தோழி !// ஆகா எல்லாருக்குள்ளும் எதிரி உக்காந்துகிட்டு இருக்கு அப்படிங்கிறீங்களா தோழி..ஹா ஹா. மிக்க நன்றி தோழி..

  பதிலளிநீக்கு
 16. // அரசன் கூறியது...

  அசத்தலான வரிகள் ...
  மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ...//

  அப்படியா மனம் நிறைவாக இருக்கு மிக்க நன்றி அரசன்..

  //நாடோடி கூறியது...

  க‌விதை ரெம்ப‌ ந‌ல்லாயிருக்கு ச‌கோ.// மிக்க நன்றி ஸ்டீபன்..

  பதிலளிநீக்கு
 17. // FOOD கூறியது...

  பலமுறை படிக்கத் தூண்டும் பகிர்வு.// ரொம்ப சந்தோஷம் வருகைக்கும் கருத்துபகிர்தலுக்கும் மிக்க நன்றி சகோ....

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது