நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இன்றுமட்டுமல்ல என்றும்..

உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும். [அம்மாஸ்தானத்தை அடையச்செய்த அப்பாக்களுக்கும்]என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..

த்துமாதம் சுமந்து
பட்டபாடெல்லாம்
பசுமரத்து ஆணியாய் நெஞ்சில்
பதிந்திருந்தபோதிலும்

பெற்றதாயின் துன்பதை
பகிர்ந்துகொள்ள யியலாப் பிள்ளைகளாய்
தான் பெற்ற பிள்ளைக்காக
தேசம்கடந்து போகும் நிலை!

பெற்றதாயின் பாதத்தில்
சொர்க்கமுண்டு என்றபோதிலும்
பாழும் இனிப்பு நோயால்
பாதமிரண்டும் பற்றி எரிந்து
அவதிப்படும் வேளையில்
பக்கத்திலிருந்து
பார்க்க முடிவதில்லையே!
பாவிமக்களால்

லதுயரம் பலசிரமம்
பலதிசையில் கண்டு
பேணிவளர்த்தாள் அன்று
பிணிகொண்டு கிடக்கையிலே
பார்க்க கேட்க ஆளில்லாது
பரிதவிக்கும் நிலையானதே! இன்று

ன்னைமடியில்
ஆழ்ந்துறங்கிய அன்னங்கள்
அக்கரைக்குச் சென்று
அல்லல்பட்டு அவதிப்பட்டு
அயராது வேலைசெய்தபோதிலும்

ன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அல்லும் பகலும் அனுதினமும்
அன்னையவளை சேயினுள்ளம்
ஆத்மார்த்தமாக  நேசிக்குமென்பதையும்
அடி பிசகாமல் உணரும்
அன்னையவளின் நெஞ்சம்..

டிஸ்கி// புத்தக மதிப்புரையில் என் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை”  தினத்தந்தியில் வந்துள்ளது..மணிமேகலை பிரசுரத்தாருக்கும்.தினதந்திக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

21 கருத்துகள்:

 1. வரையறை இல்ல
  விதிமுறை அவள் பாசம்...

  ஒரு முறை சொல்லு

  அம்மா என்று

  திரு மறை தோற்கும்

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

  பதிலளிநீக்கு
 2. அன்னையர் தின வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 3. அன்னைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ..

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை.
  பாராட்டுக்கள்.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. யாரு அந்த போட்டோவில் உங்கள் உம்மாவா?

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள்.வாழ்த்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. ♔ம.தி.சுதா♔ கூறியது...
  வரையறை இல்ல
  விதிமுறை அவள் பாசம்...

  ஒரு முறை சொல்லு

  அம்மா என்று

  திரு மறை தோற்கும்

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா//

  தாய்மையின் மகத்துவத்தை திருமறையிலிருந்தே அறிந்தேன்
  அம்மா என்னும் மந்திரத்தை அறியதந்த திருமறைக்கும் அதன்மூலம் உணரச்செய்த இறைவனுக்கும்.என் நன்றிகள் எந்நாளும்..

  மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 8. கலாநேசன் கூறியது...
  அன்னையர் தின வாழ்த்துக்கள்....  நாடோடி கூறியது...
  அன்னைய‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ..//

  வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரர்களே..

  பதிலளிநீக்கு
 9. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
  அருமையான கவிதை.
  பாராட்டுக்கள்.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்.//

  ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 10. Jaleela Kamal கூறியது...
  யாரு அந்த போட்டோவில் உங்கள் உம்மாவா?// ஆமாம் ஜலிக்கா என்னுடைய அம்மாதான்..  Jaleela Kamal கூறியது...
  வாழ்த்துக்கள்.வாழ்த்த்துக்கள்.//

  தாங்களுக்கும் என் வாழ்த்துகள் க்கா..

  பதிலளிநீக்கு
 11. அன்னையர் தினத்தில் உங்கள் அருமையான கவிதை படித்தேன். அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
  உங்கள் “உணர்வுகளின் ஓசை” குறித்து தினத்தந்தி புத்தக மதிப்புரையில் வந்த்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 12. ""..பெற்றதாயின் துன்பதை
  பகிர்ந்துகொள்ள யியலாப் பிள்ளைகளாய்..""...பாதிப்பேரும் கவலையுறுகின்றனர். இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் மலிக்கா.தங்கள் தாயார் புகைப்படம் வெளியிட்டு அன்பினை வெளிப்படுத்திய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 14. பிந்திய அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 15. அன்னையை எப்போதுமே நாங்கள் நேசிக்க வேண்டும், அன்னையினை எந் நாளும் நாங்கள் கூட இருந்து பரமாரிக்க வேண்டும் எனும் நல் உணர்வை, உங்களின் கவிதை தருகிறது.

  பதிலளிநீக்கு
 16. புத்தக மதிப்புரையில் உங்கள் நூல் வெளி வந்தமை மகிழ்ச்சியே சகோ. உங்கள் நூல்களைத் தமிழ் நாட்டிற்குப் போகும் போது வாங்க வேண்டும் எனும் ஆவல் எழுகிறது.

  பதிலளிநீக்கு
 17. எந்த கோயிலுக்கு போனாலும்..
  எல்லா தெய்வமும் ஒண்ணுதான்...!

  எந்த வீட்டுக்குப் போனாலும்...
  எல்லாத் தாயும் ஒண்ணுதான்...!

  மாசற்ற
  பரிசுத்தமான
  பத்தரைமாற்று தங்கத்தைப் போன்றது....!
  "அன்னை"யின் அன்பு.....!

  பூவுலகில் உள்ள
  அனைத்து
  அன்னைக்கும்
  என் சிரந்தாழ்ந்த
  "அன்னையர்தின வணக்கங்கள்"....!

  காஞ்சி முரளி....!

  பதிலளிநீக்கு
 18. அன்னையர் தின வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 19. உலகிலுள்ள அனைத்து அம்மாக்களுக்கும். [அம்மாஸ்தானத்தை அடையச்செய்த அப்பாக்களுக்கும்]என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 20. தாயுள்ளம் கொண்ட ”அன்பின் அன்னையர்” அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள்...

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது