நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீழ்வேன் என்று நினைத்தாயோ!


வாழவந்திருக்கும் பூமியில்
வசதிகளும் வாய்புகளும்
ஏராளம் ஏராளம்- அதை
வகையாய்
வகைப்படுத்திக்கொண்டால்
வசந்தம் கைகூடும் எந்நாளும்.

சாதிக்கத்துணிந்த பின்னே
சோதனைகளைகண்டு
சோகமெதற்கு-மனம்
அழுக்கானவர்களைக் கண்டு
அச்சம்கொண்டு
அடங்குவதெதற்கு- நீ

மறைவதுபோல
தோன்றிடும் இருட்டு-ஆனால்
மறுநாளே விடிந்திடும்
மங்கள கிழக்கு.

முக்காடிட்டு மறைத்திருப்பது
முகத்தையே தவிர
மூளையையல்ல –நீ
முன்னுக்கு வரும்வழியில்
முட்டுக்கட்டைகளைக்கண்டு
முடங்கிவிடாதே!

முயற்சிசெய்தால்- அதே
முட்டுக்கட்டைகளைக்கொண்டு
மேடைகளாக்கு! மேதைகள் கையால்
மாலைகள் கிடைக்கும்
மாபெரும் இறைவனின் அருளால்
மதிப்புகள் உயரும்.

உலகம் என்பது
ஒரு நாடகமேடை –அதில்
உலவும் மனிதரோ
ஓ ராயிரம் வகை
ஒவ்வொரு மனங்களும்
ஒவ்வொருவிதம்-அதில்
ஓடும் எண்ணமோ பலபல ரகம்

வீசிடும் தென்றலில்
வாஞ்சையுமுண்டு கோபமுமுண்டு
வாஞ்சையாய் நீயும் கோபத்தைப்பாரு
வருத்ததை உதறி வாரியணைத்து -உன்
வாஞ்சையை பகிரு
வந்துசேருமே- ஒன்றாய்
வசந்தங்கள் நூறு

கவிதை எழுதும் கடுகொ ன்று அங்கே
காலுன்றிகொண்டு வேரூன்றிவிடுமோயென
கவலை கொள்வோரின் முன்னே!
கவனமாய் நீயும்
கடந்திடு பெண்ணே-உன் கவனமெல்லாம்
களைகளைக் கலைந்து -நற்
க விதைகளை விதைப்பது தானே!

விசால மண்ணில்
[க]விதைகளை விதைத்து-அதில்
விசமில்லாத உரமும் தூவி-
விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே
வீரிட்டு எழுந்திடு!
வேர்விட்டு வளர்ந்திடு

வெட்டிதள்ளினும்
வேர்விட்டு தளைத்திடும்
ஆலமரம்போல
வரம்புமீராத உன்
வாழ்கையினாலே வளர்ச்சிகண்டிடு
ஆலம்விழுதினப்போல
வல்லோன் நினைத்தால் அதற்குமேலும்
வாழந்துகாட்டிடு
வாழையடி வாழை....

டிஸ்கி// சென்னை //ரஸ்மி// என்ற ரஸ்தாமாவிற்காக இக்கவிதை..
சிலர் சிலரை உயர்த்துவதும் தாழ்த்துவதும். தவறாக எடைபோடுவதும் .[ அவங்களுக்கு மட்டுமா எங்கும் இதுபோன்ற விசமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.குறுகியமனதோடு]
பூமியில் சகஜம். அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.
அது [செருப்பு தைய்பதாகட்டும்.
சிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.

தோல்வியன்றபோதும் தொடர்ந்த முயற்சி ஒருபோதும் வீணாகாது. ஒருமனிதனின் சிறு சாதனையும்  அது சிலமனிதர்களை மகிழ்ச்சி கொள்ளச்செய்யும் சிலமனிதர்களை சங்கடத்திற்குள்ளாகும்.
நம்மைவிட அவன் முன்னேறுவதா என மனதுக்குள் முனங்கிக்கொண்டே வெளிவேசமாய் உலவும் மனிதர்கள் நிறைய இப்பூமியிலே!
உனக்கென்று எது கிடைக்க இருக்கிறதோ அது கிடைத்தேதீரும்
யார் தடுத்தாலும். ஆனால் உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.
 இது இறைவனின் வாக்கு!
எவன்வசம் எல்லாம் இருக்கிறதோ அவன்வசமே அனைத்தும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

29 கருத்துகள்:

  1. ஹய்.. நான்தான் பர்ஸ்ட்....

    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  2. வடையும் எனக்குத்தான்...

    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  3. சாரதாவிஜயன்..27 மே, 2010 அன்று 9:57 AM

    //உலகம் என்பது
    ஒரு நாடகமேடை –அதில்
    உலவும் மனிதரோ
    ஓ ராயிரம் வகை
    ஒவ்வொரு மனங்களும்
    ஒவ்வொருவிதம்-அதில்
    ஓடும் எண்ணமோ பலபல ரகம் //

    மனிதன் மனசாட்சியோடு வாழ்வதை விரும்புவதேயில்லை.

    அடுத்தவரை ரணப்படுத்திப்பார்க்கும்
    விசகுணம்படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    யார் முன்னேறுவதும் பிடிக்காது தான்மட்டுமே முன்னேறி மூக்குமுட்ட கொட்டிக்கனும் அதுதான் மனித செய்லாக தற்காலத்தில் நிறைய நிறை பார்த்தாசிமா.

    உன்னோடு எனுணர்வுகளையும் இணைத்துவை..

    அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை அதான் கொஞ்சநாளாய் உன்கவிதைகள்பக்கம் வரமுடியவில்லை. கடவுளிடம் கேள் அவருக்கு நல் ஆரோக்கியத்தை.
    அன்பு அம்மா..

    பதிலளிநீக்கு
  4. //உலகம் என்பது
    ஒரு நாடகமேடை –அதில்
    உலவும் மனிதரோ
    ஓ ராயிரம் வகை
    ஒவ்வொரு மனங்களும்
    ஒவ்வொருவிதம்-அதில்
    ஓடும் எண்ணமோ பலபல ரகம்//

    உண்மை! உண்மை!

    பதிலளிநீக்கு
  5. /////முக்காடிட்டு மறைத்திருப்பது... முகத்தையே தவிர.... மூளையையல்ல –நீ.... முன்னுக்கு வரும்வழியில்.... முட்டுக்கட்டைகளைக்கண்டு.... முடங்கிவிடாதே!////
    ////முயற்சிசெய்தால்- அதே...... முட்டுக்கட்டைகளைக்கொண்டு..... மேடைகளாக்கு! மேதைகள் கையால்.... மாலைகள் கிடைக்கும்...
    மாபெரும் இறைவனின் அருளால்.... மதிப்புகள் உயரும்.////

    மேற்சொன்ன வரிகள்... நல்ல வாழ்வியல்..... வாழ்க்கைக்கு ஏற்ற சிந்தனை...
    அதுவும்... எதுகைமோனை கவி வரிகளுடன்...

    அதுவும்...
    //முக்காடிட்டு மறைத்திருப்பது... முகத்தையே தவிர/// என்ற வரிகளும்...
    ///முட்டுக்கட்டைகளைக்கண்டு.... முடங்கிவிடாதே!.... முயற்சிசெய்தால்- அதே...... முட்டுக்கட்டைகளைக்கொண்டு..... மேடைகளாக்கு!//// என்ற வரிகளும்

    நல்வாழ்வியல் சிந்தனை... தத்துவம்....

    அதைப்போலவே....

    //விசால மண்ணில்.... [க]விதைகளை விதைத்து-அதில்.... விசமில்லாத உரமும் தூவி-.... விளைமண்ணைமுட்டி மோதிக்கொண்டே...
    வீரிட்டு எழுந்திடு!.... வேர்விட்டு வளர்ந்திடு////

    மிகவும் அற்புதமான வரிகள்.... மலிக்கா....

    விதைத்தவுடன்... அவ்விதை வளர்வதற்கு.... உரம்.. அதுவும்... விஷமில்லா உரம்... என்னே கற்பனை...! என்ன வரிகள்...

    இறுதியாய்...
    ரஸ்மிவுக்காக தங்கள் இக்கவிதை எழுதி இருந்தாலும்.....
    அனைவருக்கும்... அனைத்து காலத்திலும்... அறிவுரையாய் அமையும் கவிதை....
    பொருள்பதிந்த... சிறந்த.... அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்...
    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. //முக்காடிட்டு மறைத்திருப்பது
    முகத்தையே தவிர
    மூளையையல்ல –நீ
    முன்னுக்கு வரும்வழியில்
    முட்டுக்கட்டைகளைக்கண்டு
    முடங்கிவிடாதே!//

    புது உற்ச்சாகம் தரும் கவி வரிகள் மல்லி அக்கா....

    வாழந்துகாட்டிடு
    வாழையடி வாழை....

    பதிலளிநீக்கு
  8. வெட்டிதள்ளினும்
    வேர்விட்டு தளைத்திடும்
    ஆலமரம்போல
    வரம்புமீராத உன்
    வாழ்கையினாலே வளர்ச்சிகண்டிடு
    ஆலம்விழுதினப்போல
    வல்லோன் நினைத்தால் அதற்குமேலும்
    வாழந்துகாட்டிடு
    வாழையடி வாழை//

    எப்படி மல்லி இப்படியெல்லாம் உங்களிடம் கற்கவேண்டியது நிறைய இருக்குப்பா. கடவுளின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும்.

    ச்சே இதுபோன்றவர்களின் குணம் தெரிந்தால் அவர்களின் முகம்கொடுத்தே பேச எரிச்சலாக வரும்பா. எங்கப்பா எத்தனைதடவை இதுபொன்றவர்களிடம் மாட்டியிருக்கார்பா அவர்களை இப்போது கண்டாலும் எனக்குள் ஏதோ செய்யும்.. என்ன மனிதஜென்மங்கள்..

    பதிலளிநீக்கு
  9. ////முக்காடிட்டு மறைத்திருப்பது
    முகத்தையே தவிர
    மூளையையல்ல//

    இதுதான் நானும், முதல்முறை என்னிடம் கேட்ட ஒரு ஆசிரியையிடம் சொன்ன பதில்!!

    நல்ல நச் கவிதை!!

    ரஸ்மி யாருப்பா?

    பதிலளிநீக்கு
  10. கவிதை நீளமாயிருக்கு மல்லிக்கா.ஆனால் எப்பவும் போல செய்தி சொல்கிறது.அருமை.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவிதை வரிகள் மல்லிக்கா

    வீசிடும் தென்றலில்
    வாஞ்சையுமுண்டு கோபமுமுண்டு
    வாஞ்சையாய் நீயும் கோபத்தைப்பாரு
    வருத்ததை உதறி வாரியணைத்து -உன்
    வாஞ்சையை பகிரு
    வந்துசேருமே- ஒன்றாய்
    வசந்தங்கள் நூறு

    என்ன ஒரு விஸ்தால‌மான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. நல்ல கருத்துக்களை கொண்ட கவிதை... அருமை. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. நா கவிதையை பாராட்டவா ?
    இல்லை டிஸ்கிய பாராட்டவா ?
    இல்லை இரண்டையுமே பாராட்டவா ?

    நம்பிக்கை விதை போட்டு
    அதை ஆல் போல பரவச்செய்த
    உங்களுக்கு ஒரு சல்யூட் அவர் சார்பில்

    பதிலளிநீக்கு
  14. யாரை சொல்கிறீக‌ள் என்று என‌க்கு தெரிய‌வில்லை.. க‌விதை வ‌ரிக‌ள் அனைத்தும் அருமை..

    பதிலளிநீக்கு
  15. // முக்காடிட்டு மறைத்திருப்பது
    முகத்தையே தவிர
    மூளையையல்ல //
    நம்ப ஜாஸ்மின் இருக்கா ...
    உதாரணம் காட்ட ...
    மறந்துடாதீங்க அன்பு மலிக்கா...

    பதிலளிநீக்கு
  16. அதையெல்லாம் தாண்டி சாதிக்கத்துணிந்தவன்.
    அது [செருப்பு தைய்பதாகட்டும்.
    சிகரத்தை தொடுவதாகட்டும்.] எதுவென்றபோதும் மனசிந்தனையை ஒருநிலைப்படுத்தி இறைவனின் வழிப்படி போவோமேயானால் வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்.//

    நிச்சயம்...

    பதிலளிநீக்கு
  17. //////சாதிக்கத்துணிந்த பின்னே
    சோதனைகளைகண்டு
    சோகமெதற்கு-மனம்
    அழுக்கானவர்களைக் கண்டு
    அச்சம்கொண்டு
    அடங்குவதெதற்கு- நீ
    ///////

    நம்பிக்கை தீ வார்த்தைகளில் தெறிக்கிறது அருமை !

    பதிலளிநீக்கு
  18. ஹுஸைனம்மா கூறியது...
    ////முக்காடிட்டு மறைத்திருப்பது
    முகத்தையே தவிர
    மூளையையல்ல//

    இதுதான் நானும், முதல்முறை என்னிடம் கேட்ட ஒரு ஆசிரியையிடம் சொன்ன பதில்!!//

    அதுசரி அங்கேயுமா? கேட்ட நெஞ்சங்களுக்கு உள்ளம் நோகாமல் நான் கொடுக்கும் பதிலும் இதுவே!
    நம்மால் முடியும் இறைவன் நாடினால் என்று எப்போது நினைக்கிறோமோ அப்போதே வெற்றி வாசலில் மண்டியிட்டு கிடக்கிறது. நன் கண்ணுக்கு தெரியாமல் அதை உடனே அடைந்திட்டால் அதன் மதிப்பு தெரியாதல்லவா அதனால்தான். கொஞ்சம் சிரபட்டபின் கிடைக்கிறது, அதுவரை பொறுமை அவசியம்..


    //நல்ல நச் கவிதை!!//

    மிக்க நன்றி ஹுசைனம்மா..

    //ரஸ்மி யாருப்பா?//

    அவங்களை நான் நேரில் பார்த்தில்லைப்பா நான் எழுதும் சிலதளங்களில் அவரும் இருக்கிறார் ஆனால் பெயர்மாற்றி அதை குறிப்பிட வேண்டாம் என்பதால் குறிப்பிட வில்லை. அவங்களீன் மன ஆதங்கத்தை சொல்லி புழம்பினார்கள் சங்கடமும் வருத்தமும் மனதை பிசைந்தது. எனக்காகவெல்லாம் ஒரு கவிதை எழுதுவீங்களாப்பா என்றார்கள். சொன்ன மறுநாளே எழுதிவிட்டேன். ஏதோ நமதறிவுக்கு எட்டியவரை சரிதானே ஹுசைனம்மா..

    பதிலளிநீக்கு
  19. நியோ கூறியது...
    // முக்காடிட்டு மறைத்திருப்பது
    முகத்தையே தவிர
    மூளையையல்ல //
    நம்ப ஜாஸ்மின் இருக்கா ...
    உதாரணம் காட்ட ...
    மறந்துடாதீங்க அன்பு மலிக்கா
    //

    வாங்க அன்புநியோ. யாரந்த ஜாஸ்மீன் புரியலையே நியோ நான் ரொம்ப சின்னப்புள்ளைங்க விவரமா சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  20. //நியோ நான் ரொம்ப சின்னப் புள்ளைங்க விவரமா சொல்லுங்க.//

    சின்னப்புள்ள அப்ப சரி...கொயந்தைக்கு நான் பேடண்ட் வாங்கிட்டேன்...அதை யாரும் யூஸ் பண்ணக்கூடாது (C)(@)(Tm)

    பதிலளிநீக்கு
  21. யாருக்கோ கைகொடுக்கும் உங்கள் அக்கறை பிடித்திருக்கிறது கவிதையும் மீறி

    பதிலளிநீக்கு
  22. //முக்காடிட்டு மறைத்திருப்பது
    முகத்தையே தவிர
    மூளையையல்ல –நீ
    முன்னுக்கு வரும்வழியில்
    முட்டுக்கட்டைகளைக்கண்டு
    முடங்கிவிடாதே!//

    சூப்பர்...

    பதிலளிநீக்கு
  23. அன்பு மலிக்கா ,
    ஜாஸ்மின் தான் முந்தா நேத்து தமிழ் நாட்டோட ஹார்ட் நியூஸ் ...
    நீங்க புரியலைன்னு சொன்னதில கொஞ்சம் வருத்தம் எனக்கு ....
    http://adiraipost.blogspot.com/2010/05/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  24. ///உனக்கு எதுகிடைக்கமுடியாதோ அதை பெற்றுத்தரயிலவே இயலாது அது யார் நினைத்தாலும்.
    இது இறைவனின் வாக்கு ///

    Nothing like trying - Right thozhi...

    ரொம்ப நல்ல வரிகளோடு கூடிய பதிவு...தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  25. நியோ கூறியது...
    அன்பு மலிக்கா ,
    ஜாஸ்மின் தான் முந்தா நேத்து தமிழ் நாட்டோட ஹார்ட் நியூஸ் ...
    நீங்க புரியலைன்னு சொன்னதில கொஞ்சம் வருத்தம் எனக்கு ..//

    அல்லாஹ் அப்படியில்லை நியோ என் உணர்தல் தவறாகிவிட்டது!
    ஏன்னா நீங்க வேற ஆள குறித்துசொல்லுறீங்களோன்னு நான் தவறாக புரிந்துகொண்டதுதான் இதற்கு காராணம் என்ன இருந்தாலும் தவறு என்மேல்தால் மன்னிக்கவும்.

    ஜாஸ்மீனின் விடமுயற்சியும். ஏழ்மையிலும் என்னால் எதையும் சாதிக்கமுடியும். என்ற தைரியமும்.துணிவும் பாராட்டபடவேண்டியவரே!

    இன்னும் மென்மேலும் முன்னேற்றத்தை அவருக்கு கொடுக்க எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும்..

    பதிலளிநீக்கு
  26. காஞ்சி முரளி கூறியது...
    ஹய்.. நான்தான் பர்ஸ்ட்....

    காஞ்சி முரளி..../

    சபாஷு..

    //காஞ்சி முரளி கூறியது...
    வடையும் எனக்குத்தான்...

    காஞ்சி முரளி...//

    ஆகா இனி சட்னியும் சேர்த்துவைக்கனுமோ..

    பதிலளிநீக்கு
  27. சாரதாவிஜயன்.. கூறியது...
    //உலகம் என்பது
    ஒரு நாடகமேடை –அதில்
    உலவும் மனிதரோ
    ஓ ராயிரம் வகை
    ஒவ்வொரு மனங்களும்
    ஒவ்வொருவிதம்-அதில்
    ஓடும் எண்ணமோ பலபல ரகம் //

    மனிதன் மனசாட்சியோடு வாழ்வதை விரும்புவதேயில்லை.

    அடுத்தவரை ரணப்படுத்திப்பார்க்கும்
    விசகுணம்படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    யார் முன்னேறுவதும் பிடிக்காது தான்மட்டுமே முன்னேறி மூக்குமுட்ட கொட்டிக்கனும் அதுதான் மனித செய்லாக தற்காலத்தில் நிறைய நிறை பார்த்தாசிமா.

    உன்னோடு எனுணர்வுகளையும் இணைத்துவை.//

    என்ன செய்வது புமி சுற்றும்போது பலவிதமாற்றங்கள் நிகழ்வைதைப்போல் மனிதன் வளர்ச்சியென்னும் விததில் சுற்றும்போது இதுபோன்ற இடையூர்களை சந்தித்துதான் ஆகவேண்டியிருக்கு.
    மனிதன் பிறமனிதனையும் தன்னைபோன்ற மனிதனாக பார்ப்பதில்லை. பொறாமையின் உச்சத்தில் நின்று பொருமுகிறான்.
    தானும் தனக்கு வேண்டியவர்களும் வாழ்ந்தால்போதும் என எண்ணம்கொண்டு இழிந்த நிலைக்கு தன்னைதானே கொண்டுசெல்கிறான்.
    பிறருக்கு கொடுக்கும் துன்பம் தனக்கே ஒருநாள் வரும்போது உணர்வான்.

    //அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை அதான் கொஞ்சநாளாய் உன்கவிதைகள்பக்கம் வரமுடியவில்லை. கடவுளிடம் கேள் அவருக்கு நல் ஆரோக்கியத்தை.
    அன்பு அம்மா..//

    இப்போது எப்படிமா இருக்கு கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிருவரின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.நீங்க முதலில் அப்பாவை கவனிங்க. மற்றவைகளை பின்பு பார்த்துக்கொள்ளலாம்..

    ராதை வந்தாளா. விசாரித்தாக சொல்லவும்..

    பதிலளிநீக்கு
  28. கவிதையை அழகாக வடிவமைத்துள்ளீர்கள், தன்னம்பிக்கையூட்டும் வரிகள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது