நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

அன்பே உன் நினைவை!

நெஞ்சமெங்கும் நினைவலைகள்
நிலவில் உதித்த
மஞ்சப்பூக்களாய் பூத்திடவே-உன்
மடியில் கிடந்தேனே

மடிசாய்ந்து முகம்பார்த்தேன்-என்
மனதுக்குள்
மஞ்சம்கொண்ட உன் நினைவுகள்
மரகத வீணை மீட்டிடவே!

அன்பைச்சொரிந்து அனுதினமும்
அலைபாய விடுகின்றாய்
அந்திவானம் சிவப்பதுபோல்
அதரம் சிவக்க வைக்கின்றாய்

குளிர்கால இரவுகளில்
கோடைவெப்பம் உன்னாலே
வெயில்கால தருணங்களில்
குளிரடிக்குது தன்னாலே

நினைவுகளின் தாக்கத்தால்
நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
உணர்வுகள்  மரித்தபின்னும்
உன்நினைவோடு நானிருக்க

ஒவ்வொரு மணித்துளியும்
ஓராயிரம் ஒளிக்கதிராய்
நிலையாக  நிலைத்திருக்க
ஒவ்வொரு நொடியும்
உருகி உருகி வேண்டுகிறேன்.......


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

41 கருத்துகள்:

 1. //குளிர்கால இரவுகளில்
  கோடைவெப்பம் உன்னாலே
  வெயில்கால தருணங்களில்
  குளிரடிக்குது தன்னாலே//


  எங்கேந்து பிடிச்சீங்க இந்த வரியை சூப்பர்.

  பதிலளிநீக்கு
 2. //நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்//

  வரிகள் உண்மை.. கவிதை அருமை சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் எங்கள் ஊருக்கு அருகிலா..?

  நான் அதிராம்பட்டினம்..

  நீங்கள்?

  பதிலளிநீக்கு
 4. நினைவுக‌ள்/// க‌விதை ந‌ல்லா இருக்கு....

  பதிலளிநீக்கு
 5. காதல் கவிதை...அதுவும் விடுமுறை தினத்தில் ரசிக்க ஒரு சந்தோஷம்தான் மல்லிக்கா !

  பதிலளிநீக்கு
 6. very fine kavidhai. eppadi ippadi ellaam yosichu eludhareenga malikka. silarukku thaan ippadi thiramai irukkum. ungalidam naan romba thiramaigal parkiren. neengal cinemavukku superaaga suit aaveergal. valthukal..

  பதிலளிநீக்கு
 7. //-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க//

  அருமை அருமை

  பதிலளிநீக்கு
 8. ///அன்பைச்சொரிந்து அனுதினமும்
  அலைபாய விடுகின்றாய்
  அந்திவானம் சிவப்பதுபோல்
  அதரம் சிவக்க வைக்கின்றாய்////

  'அன்பெ'னும் வார்த்தைக் கொண்டு...
  அழகான வரிகளால் வடித்த
  அருமையான கவிதை...

  ////நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க///

  வேகுவது... நினைவின் தாக்கத்தில்..!
  உணர்வுகள் மரித்த பின்னும் நினைவுகளுடனா...!

  நம்பமாட்டீர்கள்...! இந்த
  நான்கு வரிகளை மட்டும்
  திரும்பத்திரும்ப படித்தேன்.....

  எத்தனை முறை படித்தேன்
  என்பதை எண்ணவில்லை...
  எண்ணவேண்டுமென்ற
  எண்ணமும்மில்லை ......
  என்றும் மனதில் அசை போடும் வரிகள்...

  எப்படி... இப்படி... எங்கிருந்து... இந்த வரிகள்...
  நீங்கள் என்ன "கவிதை ஆர்டீசியன் ஊற்றா"..!


  இறுதியாய்...
  "அன்பே உன் நினைவை..!" என்ற இக்கவிதை...
  அனைவரையும் ஈர்க்கும் கவிதை...

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 9. ///அன்பைச்சொரிந்து அனுதினமும்
  அலைபாய விடுகின்றாய்
  அந்திவானம் சிவப்பதுபோல்
  அதரம் சிவக்க வைக்கின்றாய்////

  'அன்பெ'னும் வார்த்தைக் கொண்டு...
  அழகான வரிகளால் வடித்த
  அருமையான கவிதை...

  ////நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க///

  வேகுவது... நினைவின் தாக்கத்தில்..!
  உணர்வுகள் மரித்த பின்னும் நினைவுகளுடனா...!

  நம்பமாட்டீர்கள்...! இந்த
  நான்கு வரிகளை மட்டும்
  திரும்பத்திரும்ப படித்தேன்.....

  எத்தனை முறை படித்தேன்
  என்பதை எண்ணவில்லை...
  எண்ணவேண்டுமென்ற
  எண்ணமும்மில்லை ......
  என்றும் மனதில் அசை போடும் வரிகள்...

  எப்படி... இப்படி... எங்கிருந்து... இந்த வரிகள்...
  நீங்கள் என்ன "கவிதை ஆர்டீசியன் ஊற்றா"..!


  இறுதியாய்...
  "அன்பே உன் நினைவை..!" என்ற இக்கவிதை...
  அனைவரையும் ஈர்க்கும் கவிதை...

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 10. வாவ் அருமையான காதல்கவிதை ரொம்ப நல்லாருக்கு... வாழ்த்துக்கள் கவிஞரே...

  பதிலளிநீக்கு
 11. //ஒவ்வொரு மணித்துளியும்
  ஓராயிரம் ஒளிக்கதிராய்
  நிலையாக நிலைத்திருக்க
  ஒவ்வொரு நொடியும்
  உருகி உருகி வேண்டுகிறேன்//

  நிஜத்தை எரித்து நினைவுகளில் உருகிகொண்டிருக்கும் கவிதை அழகு... அழகு....அக்கா..வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. //ஒவ்வொரு மணித்துளியும்
  ஓராயிரம் ஒளிக்கதிராய்..//
  அருமையான வரிகள் மலிக்கா அக்கா.
  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 13. அன்பைச்சொரிந்து அனுதினமும்
  அலைபாய விடுகின்றாய்
  அந்திவானம் சிவப்பதுபோல்
  அதரம் சிவக்க வைக்கின்றாய்//

  எப்படி இப்படியெல்லாம் அசத்துறீங்க.
  போங்கப்பா நானெல்லாம் வேஸ்ட்.

  நெடு நாளைக்குபின் வருகைதந்தேன். நெஞ்சில் தேன்சரம் கொட்டவைத்துவிட்ட்ர்ர்கள். அருமை

  அன்புச்சாமி.

  பதிலளிநீக்கு
 14. நம்பமாட்டீர்கள்...! இந்த
  நான்கு வரிகளை மட்டும்
  திரும்பத்திரும்ப படித்தேன்.//

  அதையேதான் முரளி நானும் படித்தேன் என்ன ஒரு வர்ணனை அழகுங்க மலிக்கா உங்க கவிகள் அனைத்தும்.

  தொடர்ந்து வருவேன் இனி
  ஹரிநாத்..

  பதிலளிநீக்கு
 15. //நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க//

  அருமையான வரிகள்!கலகுரிங்க

  பதிலளிநீக்கு
 16. ஜெய்லானி கூறியது...
  //குளிர்கால இரவுகளில்
  கோடைவெப்பம் உன்னாலே
  வெயில்கால தருணங்களில்
  குளிரடிக்குது தன்னாலே//


  எங்கேந்து பிடிச்சீங்க இந்த வரியை சூப்பர்.//

  இதோ இப்பவே கேட்ட்ச்சொல்கிறேன்.

  மனதே ச்சே மூளையே: எங்கிருந்து இந்த வரிகளைப்பிடித்தாய்.

  மூளை: அதெல்லாம் சீக்கிரெட் மேட்டர் வெளியே சொல்லக்கூடாது

  ஜெய்லானி அண்ணா கேட்கும்போது சொல்லாமல் இருக்கமுடியுமா? சொல்;

  மூளை ஊகூம். மாட்டேன் அவர் சுடுதண்ணீரில் எத்தனை முறை சுடுதண்ணீர் வெந்துடுத்தான்னு கைவிட்டபோது வெந்ததா வேகலையான்னு சொல்லலை.
  அதனால் நனும் சொல்லலை..

  அப்பாடா .. இதுக்குமேல் என்னத்தச்சொல்ல
  ஜெய்லானி அண்ணா..

  பதிலளிநீக்கு
 17. ஜெய்லானி கூறியது...
  //குளிர்கால இரவுகளில்
  கோடைவெப்பம் உன்னாலே
  வெயில்கால தருணங்களில்
  குளிரடிக்குது தன்னாலே//


  எங்கேந்து பிடிச்சீங்க இந்த வரியை சூப்பர்..//

  நன்றிங்கோ சூப்பருக்கு..

  பதிலளிநீக்கு
 18. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
  கவிதையில், காதல் ரசம் சொட்டுகிறது!!!//

  மிகுந்த மகிழ்ச்சி கருத்துகளால் கொட்டுகிறது சை கொ பா..மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 19. அஹமது இர்ஷாத் கூறியது...
  //நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்//

  வரிகள் உண்மை.. கவிதை அருமை சகோதரி...

  தங்களின் கருத்து மிக்க நன்றி..


  அஹமது இர்ஷாத் கூறியது...
  நீங்கள் எங்கள் ஊருக்கு அருகிலா..?

  நான் அதிராம்பட்டினம்..

  நீங்கள்?//

  அதேதான் நானும்..இர்ஷாத்..

  பதிலளிநீக்கு
 20. நாடோடி கூறியது...
  நினைவுக‌ள்/// க‌விதை ந‌ல்லா இருக்கு....//

  மிக்க நன்றி ஸ்டீபன்..

  பதிலளிநீக்கு
 21. ஹேமா கூறியது...
  காதல் கவிதை...அதுவும் விடுமுறை தினத்தில் ரசிக்க ஒரு சந்தோஷம்தான் மல்லிக்கா !//

  விடுமுறையில் ரசித்ததால் எழுந்த வார்த்தைகள்தான் ஹேமா. மிக்க மகிழ்ச்சி தோழி வரவுக்கும் கருத்துக்கும்..

  பதிலளிநீக்கு
 22. sundaravadivelu கூறியது...
  very fine kavidhai. eppadi ippadi ellaam yosichu eludhareenga malikka. silarukku thaan ippadi thiramai irukkum. ungalidam naan romba thiramaigal parkiren. neengal cinemavukku superaaga suit aaveergal. valthukal.//

  வருக வருக. தாங்களீன் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி.தொடர்ந்து வாருங்கள்..

  பதிலளிநீக்கு
 23. LK கூறியது...
  //-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க//

  அருமை அருமை//

  மிக்க நன்றி.மிக்க நன்றி.LK

  பதிலளிநீக்கு
 24. காஞ்சி முரளி கூறியது...
  ///அன்பைச்சொரிந்து அனுதினமும்
  அலைபாய விடுகின்றாய்
  அந்திவானம் சிவப்பதுபோல்
  அதரம் சிவக்க வைக்கின்றாய்////

  'அன்பெ'னும் வார்த்தைக் கொண்டு...
  அழகான வரிகளால் வடித்த
  அருமையான கவிதை...//

  அ எழுத்தினைக்கொண்டு அன்போடு அனைத்தையும் எழுதமுடியும் இல்லையா முரளி.

  ////நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க///

  வேகுவது... நினைவின் தாக்கத்தில்..!
  உணர்வுகள் மரித்த பின்னும் நினைவுகளுடனா...!

  நம்பமாட்டீர்கள்...! இந்த
  நான்கு வரிகளை மட்டும்
  திரும்பத்திரும்ப படித்தேன்.....

  எத்தனை முறை படித்தேன்
  என்பதை எண்ணவில்லை...
  எண்ணவேண்டுமென்ற
  எண்ணமும்மில்லை ......
  என்றும் மனதில் அசை போடும் வரிகள்...//

  எ என்ற எழுத்துக்குள் எத்தனைவிதமான வார்த்தைகள்.
  அத்தனையும் கோ[ர்]த்தால்
  எத்தனைவித எண்ணபரிமாற்றங்கள்
  இதைதான் கவி என்பார்களோ..

  //எப்படி... இப்படி... எங்கிருந்து... இந்த வரிகள்...
  நீங்கள் என்ன "கவிதை ஆர்டீசியன் ஊற்றா"..!.//

  ஆழ்மனதில் தேங்கி நிற்க்கும் எண்ணங்களுக்கு சிலநேரம் எழுத்துக்களால் உயிர் கொடுக்கமுடிகிறது முரளி. அதில் இதுவும் ஒன்று..


  //இறுதியாய்...
  "அன்பே உன் நினைவை..!" என்ற இக்கவிதை...
  அனைவரையும் ஈர்க்கும் கவிதை...

  வாழ்த்துக்கள்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....///

  அனைவரையும் ஈர்த்தது என்றால் என் காதலுக்கு[கவிதை] கிடைத்த வெற்றி..

  மிக்க மகிழ்வுடன் நன்றி நன்றிமுரளி..

  பதிலளிநீக்கு
 25. Sangkavi கூறியது...
  நல்லாயிருக்குங்க....

  வாங்க சங்கவி ரொம்ப நாலாயிடுத்து வந்து..

  மிக்க நன்றி..


  Chitra கூறியது...
  அழகான கவிதை..

  மிக்க நன்றி சித்ராமேடம்..

  பதிலளிநீக்கு
 26. மின்மினி கூறியது...
  வாவ் அருமையான காதல்கவிதை ரொம்ப நல்லாருக்கு... வாழ்த்துக்கள் கவிஞரே...
  //

  அடி ஆத்தி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மின்மினி..

  பதிலளிநீக்கு
 27. seemangani கூறியது...
  //ஒவ்வொரு மணித்துளியும்
  ஓராயிரம் ஒளிக்கதிராய்
  நிலையாக நிலைத்திருக்க
  ஒவ்வொரு நொடியும்
  உருகி உருகி வேண்டுகிறேன்//

  நிஜத்தை எரித்து நினைவுகளில் உருகிகொண்டிருக்கும் கவிதை அழகு... அழகு....அக்கா..வாழ்த்துகள்.

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
  சீ மாங்கனி ..

  பதிலளிநீக்கு
 28. சே.குமார் கூறியது...
  //ஒவ்வொரு மணித்துளியும்
  ஓராயிரம் ஒளிக்கதிராய்..//
  அருமையான வரிகள் மலிக்கா அக்கா.
  கவிதை அருமை..

  மிக்க நன்றிங்க குமாரண்ணா..

  பதிலளிநீக்கு
 29. அன்புச்சாமி. கூறியது...
  அன்பைச்சொரிந்து அனுதினமும்
  அலைபாய விடுகின்றாய்
  அந்திவானம் சிவப்பதுபோல்
  அதரம் சிவக்க வைக்கின்றாய்//

  எப்படி இப்படியெல்லாம் அசத்துறீங்க.
  போங்கப்பா நானெல்லாம் வேஸ்ட்.

  நெடு நாளைக்குபின் வருகைதந்தேன். நெஞ்சில் தேன்சரம் கொட்டவைத்துவிட்ட்ர்ர்கள். அருமை

  அன்புச்சாமி..//

  வாங்க வாங்க எப்படி இருக்கீங்க அன்பு.
  எல்லாரும் சுகமாயிருக்காங்களா.
  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது இருக்கும் உள்ளுக்குள் ஏதாவது ஒன்று நிச்சயமாக.திறமைகள் அதை வெளிக்கொண்டுவர தற்போது நிறைய வழிகளீருக்கு அன்பு..

  தாங்களின் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 30. பெயரில்லா கூறியது...
  நம்பமாட்டீர்கள்...! இந்த
  நான்கு வரிகளை மட்டும்
  திரும்பத்திரும்ப படித்தேன்.//

  அதையேதான் முரளி நானும் படித்தேன் என்ன ஒரு வர்ணனை அழகுங்க மலிக்கா உங்க கவிகள் அனைத்தும்.//

  வாங்க வாங்க ஹரிநாத்..
  தாங்களின் வரவுக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

  தொடர்ந்து வருவேன் இனி
  ஹரிநாத்..//
  கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்.மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 31. S Maharajan கூறியது...
  //நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க//

  அருமையான வரிகள்!கலகுரிங்க..//

  சந்தோஷம் மகராஜன் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 32. ///நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க///

  சகோ. காஞ்சி முரளி சென்னது போல் நானும் இந்த வரிகளை திரும்ப திரும்ப படித்தேன், போதுவாக கவிதைகள் படிக்கும் பழக்கம் கல்லூரிகாலத்திலே தொலைத்து விட்டேன். உங்கள் வலைப்பூக்கு வர ஆரம்பித்த பிறகு தான் மீண்டும் கவிதை படிக்கு ஆர்வம் வந்துள்ளது.

  நீங்கள் கவிதைகளின் கருவூலம். வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 33. குளிர்கால இரவுகளில்
  கோடைவெப்பம் உன்னாலே
  வெயில்கால தருணங்களில்
  குளிரடிக்குது தன்னாலே

  நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க

  மிக அருமையக்கா...........

  பதிலளிநீக்கு
 34. என்னங்க... மலிக்கா...
  சிட்டுக்குருவி படம் புதுசாய் இருக்கே..!

  நேற்று என் கண்களில் படவில்லையே....!

  இன்றுதான் போட்டீர்களா..?

  அதிலும் கண்ணை சிமிட்டிசிமிட்டி...
  ரொம்ப... ப... ப.... அழகாயிருக்கு..!

  நட்புடன்....
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 35. தாஜூதீன் கூறியது...
  ///நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க///

  சகோ. காஞ்சி முரளி சென்னது போல் நானும் இந்த வரிகளை திரும்ப திரும்ப படித்தேன், போதுவாக கவிதைகள் படிக்கும் பழக்கம் கல்லூரிகாலத்திலே தொலைத்து விட்டேன். உங்கள் வலைப்பூக்கு வர ஆரம்பித்த பிறகு தான் மீண்டும் கவிதை படிக்கு ஆர்வம் வந்துள்ளது.

  நீங்கள் கவிதைகளின் கருவூலம். வாழ்த்துக்கள் சகோதரி.//

  மிகுந்த சந்தோஷமாக இருக்கு சகோதராரே. என்கவிதைகளை படித்தபின் மீண்டும் கவிதயார்வம் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

  வாழ்த்துக்களுக்கும் அனபான கருத்துக்கும் மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 36. செந்தில்குமார் கூறியது...
  குளிர்கால இரவுகளில்
  கோடைவெப்பம் உன்னாலே
  வெயில்கால தருணங்களில்
  குளிரடிக்குது தன்னாலே

  நினைவுகளின் தாக்கத்தால்
  நித்தம் நித்தம் வேகின்றேன்-என்
  உணர்வுகள் மரித்தபின்னும்
  உன்நினைவோடு நானிருக்க

  மிக அருமையக்கா...........//

  மிக்க நன்றி செந்தில். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 37. காஞ்சி முரளி கூறியது...
  என்னங்க... மலிக்கா...
  சிட்டுக்குருவி படம் புதுசாய் இருக்கே..!

  நேற்று என் கண்களில் படவில்லையே....!

  இன்றுதான் போட்டீர்களா..?

  அதிலும் கண்ணை சிமிட்டிசிமிட்டி...
  ரொம்ப... ப... ப.... அழகாயிருக்கு..!

  நட்புடன்....
  காஞ்சி முரளி//

  இன்றுதான் போட்டேன் முரளி.
  சசிகுமார் பிளக்கில் இது சம்பதமாய் பதிவு போட்டுயிருந்தது. சரி எப்படின்னு போட்டு பார்த்தேன்.அவர் சொல்லியிந்த பக்கம்போய் இந்த சிட்டுக்குருவியை பிடிச்சிட்டு வந்தேன்.
  நல்லாயிருக்கா மகிழ்ச்சி. மிக்க நன்றிமுரளி..

  பதிலளிநீக்கு
 38. வரிகள் சரளமாக வந்து
  விழுந்திருக்கின்றன..!!
  அருமை!!

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது