நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வேண்டுகோள் விடுக்கிறது...



உங்களின்
கட்டிலறை சந்தோஷங்களால்
எங்களுக்கு
கருவறையே கல்லறையாகிறது

”இனியாவது”
கலந்து ஆலோசியுங்களேன்
கருகலைப்புகள் என்ற பெயரில்

தாயின் கர்பத்துகுள்ளே நாங்கள்
தகர்த்து எரியப்படாமலிருப்போம்

உருவமற்ற குழந்தைகளின்
உருக்கமான வேண்டுகோள்
உள்ளமிருப்போருக்கு - கேட்குமா!
இக்கூக்குரல்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

33 கருத்துகள்:

  1. இத... இதத்தான்....
    மலிக்கா அக்காவிடம் எதிர்பார்க்கிறோம்...
    நல்லா இருக்கு....

    பதிலளிநீக்கு
  2. கனோஜ் ஆங்கரே கூறியது...
    இத... இதத்தான்....
    மலிக்கா அக்காவிடம் எதிர்பார்க்கிறோம்...
    நல்லா இருக்கு.//

    முதல் வருகைக்கும். பதிந்துவருவதற்க்குள் வந்து முதல் கருதிட்டமைக்கும். எதிர்பார்ப்புக்கும்.
    மிக்க நன்றி கனோஜ்.

    முடிந்தவரை முயற்சிக்கிறேன் இதுபோன்ற கருத்துக்களைச்சொல்ல..
    மீண்டும் நன்றி..

    பதிலளிநீக்கு
  3. very nice one. im also wrote article about abortion, if you have time pls read at http://avargal-unmaigal.blogspot.com/2010/10/abortion.html

    பதிலளிநீக்கு
  4. உண‌ர்வுப்பூர்வ‌மான‌ வ‌ரிக‌ள்..ந‌ல்லாயிருக்கு..

    லேபிள்?!!

    பதிலளிநீக்கு
  5. புவனேஸ்வரி ராமநாதன் கூறியது...
    அருமை
    //

    மிக்க நன்றி புவனாமேடம்..

    பதிலளிநீக்கு
  6. Avargal Unmaigal கூறியது...
    very nice one. im also wrote article about abortion, if you have time pls read at http://avargal-unmaigal.blogspot.com/2010/10/abortion.html//

    ரொம்ப சந்தோஷம் தாங்களீன் முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும். மிக்க நன்றி..

    நிச்சயம் வருகிறேன் தாங்களின் தளத்திற்க்கு..

    பதிலளிநீக்கு
  7. அஹ‌ம‌து இர்ஷாத் கூறியது...
    உண‌ர்வுப்பூர்வ‌மான‌ வ‌ரிக‌ள்..ந‌ல்லாயிருக்கு...//

    நிறைய உள்ளம் உணரமறுப்பதால் வரும் வினைதான்.. மிக்க நன்றி இர்ஷாத்..

    /லேபிள்?!!//

    அதுவா. இவுக யாரு நமக்கு புத்திமதிசொல்ல அப்படி நினைக்கூடாதுல்ல. நினைதாலும்
    பர[ரு]வாயில்லை..

    பதிலளிநீக்கு
  8. பிஞ்சுப் பாதங்கள்
    கொஞ்சி விளையாடும்
    சுகமான சிறை - கருவறை !
    தாயாக வந்தவளே
    தவம் நூறு செய்தவளே!
    உடலுக்குள் உயிர் சுமந்து
    பிள்ளை என்னைப் பெற்றெடுக்கப்
    பெருந்துயரைக் கண்டவளே!
    பாசத்தில் உன்னை வெல்ல
    பாடுபடுமே இந்தப் பிள்ளை!
    என்னையைவா கொல்ல நினைக்கிறாய் ?
    உறவு என்றப போர்வையில்
    நீ விபச்சாரம் செய்கிறாய் அம்மா !
    கரு கலைப்பதின் மூலம்.

    உங்களின் கட்டிலறை சந்தோசத்தால்
    எங்களின் கருவறை கல்லறையாகியது
    சூப்பர் அக்காள் ............வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அக்கா..

    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...
    அருமையான வரிகள்...

    போட்டோ தனியாக கவிதை தனியாக இருந்தால் நல்லாயிருக்குமே.?

    பதிலளிநீக்கு
  10. சுப்ஹானல்லாஹ்...சொல்ல வார்த்தைகள் இல்லை :(

    பதிலளிநீக்கு
  11. கவிதைக்குள் வலிகள் நிறம்பியிருக்கு மலிக்கா. உணர்வுகளுக்கு உன்னால் உயிர்கொடுக்கமுடிகிறது வரிகளின் வழியே. எனக்கு ஒருகுழந்தை அபார்ஷன் ஆனதர்கே தாங்கமுழியலை எப்படிதான் இப்படியெல்லாம் செய்யமனசுவருதோ கடவுள்தான் இவர்களைபோன்றோருக்கு நல்வழிகாட்டவேண்டும்..

    இன்னும் இதுபோல் நிரைய அறிவுரை கவிதைகள் எழுதுமா..

    பதிலளிநீக்கு
  12. அமைதிச்சாரல் கூறியது...
    நல்லா சொல்லுங்க...//

    என்னத்தசொன்னாலும் இந்தகாதில் வாங்கி அந்தகாதில் வெளியேற்றிவிட்டு செல்லும் மனங்களாக அல்லவா இருக்கிறது..


    // சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    கவிதையின் "கரு"ப்பொருள் சிறப்பு.//

    உட்பொருள் சிந்திய
    வரிகளின் வலிகளை
    மெய்பொருள் கொண்டு உணர்வார்களா!

    நன்றி சை.கோ. ப..

    பதிலளிநீக்கு
  13. வெறும்பய கூறியது...
    ரொம்ப நல்லாயிருக்கு அக்கா..

    ரொம்ப நன்றி தம்பி..


    //சிநேகிதி கூறியது...
    அருமையான வரிகள் அக்கா.//

    மிக்க நன்றி ஃபாயிஜா..

    பதிலளிநீக்கு
  14. Mohamed Ayoub K கூறியது...
    பிஞ்சுப் பாதங்கள்
    கொஞ்சி விளையாடும்
    சுகமான சிறை - கருவறை !
    தாயாக வந்தவளே
    தவம் நூறு செய்தவளே!
    உடலுக்குள் உயிர் சுமந்து
    பிள்ளை என்னைப் பெற்றெடுக்கப்
    பெருந்துயரைக் கண்டவளே!
    பாசத்தில் உன்னை வெல்ல
    பாடுபடுமே இந்தப் பிள்ளை!
    என்னையைவா கொல்ல நினைக்கிறாய் ?
    உறவு என்றப போர்வையில்
    நீ விபச்சாரம் செய்கிறாய் அம்மா !
    கரு கலைப்பதின் மூலம்.

    உங்களின் கட்டிலறை சந்தோசத்தால்
    எங்களின் கருவறை கல்லறையாகியது
    சூப்பர் அக்காள் ............வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கும் வீரிய கவிதைக்கும் மிக்க நன்றி அய்யூஃப்..

    பதிலளிநீக்கு
  15. சே.குமார் கூறியது...
    அக்கா..

    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...
    அருமையான வரிகள்...//

    மிக்க நன்றி குமார்..

    //போட்டோ தனியாக கவிதை தனியாக இருந்தால் நல்லாயிருக்குமே.?//

    ஓ அப்படியா.
    இனி பார்த்து செய்கிறேன்..நன்றிமா..

    பதிலளிநீக்கு
  16. அன்னு கூறியது...
    சுப்ஹானல்லாஹ்...சொல்ல வார்த்தைகள் இல்லை :(

    //

    வார்த்தைகளை வகைவகையாய் வார்த்தெடுத்து போட்டாலும் வாஞ்சையுள்ள மனதைதவிர வேறொரு மனதிற்க்குள் புகாது அன்னு இதுபோன்ற வார்த்தைகள்..

    நன்றிமா..

    பதிலளிநீக்கு
  17. இத்தனை தெளிவாக கவலைப்பட்டு
    தட்டியெழுப்புவது இந்த கவிதையின் வெற்றி. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.இத்தனை தெளிவாக கவலைப்பட்டு
    தட்டியெழுப்புவது இந்த கவிதையின் வெற்றி. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

    கலைக்கும் நோக்கம்
    உன்
    அன்னைக்கில்லை...
    கலைத்த பின்பும்
    நீ
    இறக்கவில்லை!

    கர்ப்பத்தில் கொன்று...
    உனையென்
    இதயத்தில் உயிர்ப்பித்தேன்!

    இன்றோடில்லாமல்-
    என்றுமே நீ...
    மரணம் வென்ற
    என்
    மற்றுமொரு குழந்தை!

    -கருக்குழந்தை
    இழந்த ஒரு
    உருக்குழைந்த அன்னை

    பதிலளிநீக்கு
  18. சிவகாமி.. கூறியது...
    கவிதைக்குள் வலிகள் நிறம்பியிருக்கு மலிக்கா. உணர்வுகளுக்கு உன்னால் உயிர்கொடுக்கமுடிகிறது வரிகளின் வழியே. எனக்கு ஒருகுழந்தை அபார்ஷன் ஆனதர்கே தாங்கமுழியலை எப்படிதான் இப்படியெல்லாம் செய்யமனசுவருதோ கடவுள்தான் இவர்களைபோன்றோருக்கு நல்வழிகாட்டவேண்டும்..

    இன்னும் இதுபோல் நிரைய அறிவுரை கவிதைகள் எழுதுமா..//

    செய்வதாலும் செய்யத்தூண்டுவதாலும். கொலை கொலைதானே. அதைசெய்யும் மனம் மனமாகயிருக்காது அபோதுமரக்கடையாகைருந்தால்தான் முடியும்..

    என்ன செய்யமா இவர்களின் சந்தோஷத்திற்க்கு சந்ததிகளுக்கு சமாதி..

    மிக்க நன்றி ..

    பதிலளிநீக்கு
  19. நித்திலம் - சிப்பிக்குள் முத்து. கூறியது...
    உணர்வுப்பூர்வமான கவிதை
    ..//

    உணர்வுகள் அற்றவருக்காக எழுதியது..

    மிக்க நன்றி நித்திலம்..

    பதிலளிநீக்கு
  20. நித்திலம் - சிப்பிக்குள் முத்து. கூறியது...
    உணர்வுப்பூர்வமான கவிதை
    ..//

    உணர்வுகள் அற்றவருக்காக எழுதியது..

    மிக்க நன்றி நித்திலம்..

    பதிலளிநீக்கு
  21. sabeer கூறியது...
    இத்தனை தெளிவாக கவலைப்பட்டு
    தட்டியெழுப்புவது இந்த கவிதையின் வெற்றி. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.இத்தனை தெளிவாக கவலைப்பட்டு
    தட்டியெழுப்புவது இந்த கவிதையின் வெற்றி. கவிஞருக்கு வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    //கலைக்கும் நோக்கம்
    உன்
    அன்னைக்கில்லை...
    கலைத்த பின்பும்
    நீ
    இறக்கவில்லை!

    கர்ப்பத்தில் கொன்று...
    உனையென்
    இதயத்தில் உயிர்ப்பித்தேன்!

    இன்றோடில்லாமல்-
    என்றுமே நீ...
    மரணம் வென்ற
    என்
    மற்றுமொரு குழந்தை!

    -கருக்குழந்தை
    இழந்த ஒரு
    உருக்குழைந்த அன்னை.///

    கவிதை அருமை
    இது கரு கலைந்துவிட்ட தாயின் உணர்வு அப்படியாக இருந்தால்.
    அதில் சிறு மாற்றம்

    கலைக்கும் நோக்கம்-உன்
    அன்னைக்கில்லை...
    கரு கலைந்த பின்பும்
    நீ
    இறக்கவில்லை.

    அப்படி வரும்.

    இல்லை கருகலைத்த தாயின் உணர்வுகளென்றால்.

    /கர்ப்பத்தில் கொன்று...
    உனையென்
    இதயத்தில் உயிர்ப்பித்தேன்!//

    கர்ப்பத்தில் கொன்ற பின் இதயத்தில் இடமெதற்க்கு.
    அதற்குமுன் யோசிச்சி முடிவெடுக்கமுடியா இதயத்தில் இடம் வேண்டிதில்லை என்கிறது கரு..

    அப்படின்னு என் கருத்தும் சொல்லுது அவ்வளதுதான்..

    மிக்க நன்றி சபீர் அவர்களே!..

    பதிலளிநீக்கு
  22. மனதை கணக்க வைக்கும் ’கரு’த்து

    பதிலளிநீக்கு
  23. இன்று வலைச்சரத்தின்மூலம் இங்கே வந்தேன் இக்கவிதை கண்டேன்
    கண்கலங்கி நின்றேன்

    நெற்றிபொட்டில் அடித்தார்போன்று இருக்கிறது.

    நல்ல கருதுள்ள கவிதை தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்துவருகிறேன்..

    பதிலளிநீக்கு
  24. மிக அழகான கவிதை கரு. அதை சொல்லியவிதம் மிக மிக அருமை.
    சந்தோஷதில் சாகடிக்கும் மனங்களே!
    இதைகொஞ்சம் படித்துபாருங்கள். ஃபிலீஸ்..

    பதிலளிநீக்கு
  25. nensaithodum nallkaruthu aani adithathupool solliyikkiraau

    vaazthukkal malikka..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது