நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இறுதியில் தொடக்கம்.

கண்டேன் கண்டேன்
மரணத்தைக் கண்டேன்
கண்ணிரெண்டும் அசைக்காமல்
கண்ணெதிரே கண்டேன்

மரணித்த முகமதனின்
நேரெதிரே நின்று
நடப்பதத்தனையும்
நகராமல்  கண்டேன்

ஓடியாடியக் கால்களிரெண்டும்
ஓய்வுபெறவே -அதனிரு
பெருவிரல்களும்
ஒருசேரக் கட்டக்கண்டேன்

கண்ட காட்சிகளெல்லாம்
கண்ட கண்கள் களைத்துபோய்
இறுக்கிமூடி
இளைப்பாறக் கண்டேன்

ஓயாது பேசிய வாயோ
ஒரு அசைவுமில்லாது -பசைதடவி
ஒட்டியதுபோல்
ஒட்டிக் கிடக்கக் கண்டேன்

உயிர்க் காற்றை சுவாசித்த
இதயமது
இயங்காது நின்றிடவே

உயிரது வெளியேறி
உடலது உருமாறி
வெற்றுடலாய்
வீற்றிறுக்கக் கண்டேன்

சுற்றங்கள் சுற்றியமர்ந்து
சோகமதை வெளிப்படுத்த
இருந்தநொடி இல்லாத பாசம்
இறந்தநொடி
இலந்தைக் கொடியாய் படர

இதுதான் மனிதனது வாழ்க்கை
இதற்குத்தான் இத்தனை இன்னல்
இதையெல்லாம் அறிந்திருந்தும்கூட
இப்படியே வாழ்கிறோமோ நாளும்

மரணத்தை மறந்த நாமும்
மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
மரணத்தை நினைத்தபடியே
மனிதனாய் வாழநினைப்போமா.


அன்புடன் மலிக்கா
 இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

27 கருத்துகள்:

  1. //உயிர்க் காற்றை சுவாசித்த
    இதயமது
    இயங்காது நின்றிடவே

    உயிரது வெளியேறி
    உடலது உருமாறி
    வெற்றுடலாய்
    வீற்றிறுக்கக் கண்டேன்//

    நல்ல வரிகள் மேடம்

    பதிலளிநீக்கு
  2. மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.
    ]]

    சரியா சொன்னீங்க

    பதிலளிநீக்கு
  3. //மரணத்தை மறந்த நாமும்
    மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
    மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.//

    அருமை ... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இப்பிடி பயங்காட்டிட்டீங்களே ..!!!

    பதிலளிநீக்கு
  5. மரணத்தை மறந்த மனித மனத்துக்கு தகுந்த கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள் அக்கா....

    பதிலளிநீக்கு
  6. மரணம் நிச்சயம் என்று
    நிச்சயத்த பிறகும் நிரந்தரம்
    இல்லா வாழ்வைத்தேடி...

    பதிலளிநீக்கு
  7. அன்பு சகோதரிக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

    'மரணம்' கவிதை மனதைக் கசிய வைத்தது.

    "இருந்தநொடி இல்லாத பாசம் - இறந்தநொடி இலந்தைக் கொடியாய் படர"
    மிகவும் அருமையான வாசகங்கள்.
    இன்றைய உலக நடப்பை அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    சகோதரியே! இப்படிப்பட்ட கவிதையை இந்த தளத்தில் தந்ததற்கு நன்றி.

    வல்ல அல்லாஹ்! இம்மையிலும்,மறுமையிலும் என் தங்கையை மேலாக்கி வைப்பானாகவும்
    ஆமீன்.

    வஸ்ஸலாம்.

    அன்புடன், சகோதரன் "மஹ்மூது".

    பதிலளிநீக்கு
  8. மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.

    //

    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு
  9. ////இதுதான் மனிதனது வாழ்க்கை
    இதற்குத்தான் இத்தனை இன்னல்
    இதையெல்லாம் அறிந்திருந்தும்கூட
    இப்படியே வாழ்கிறோமோ நாளும்////
    ///மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.///

    உண்மையின் வரிகள்...
    அருமையான வரிகள்....!

    யாரோ கவிஞர் சொன்னது...

    "ஓர் பிணத்தைச் சுற்றி
    நாளையோ...
    நாளை மறுநாளோ பிணமாகப்போகும்
    ஓராயிரம் பிணங்களின்
    ஒப்பாரி..."

    இது உண்மையல்லவா...!

    சோகத்திலும்... சுகத்திலும்...
    துன்பத்திலும்... இன்பத்திலும்..
    அனைத்திலும் பாதிக்கப்படும்போது
    எண்ணங்கள் வடிக்கும் வரிகள்தான் கவிதைகள் அல்லவா..?

    இக்கவிதை
    கருவானதும்...
    உருவானதும் நேற்று முந்தைய நாள் அல்லவா?

    மனிதனின் "நிஜம்" பற்றிய கவிதை...!

    அதாவது...

    நிழல்களாகிய
    நம்
    நிஜங்களைப் பற்றிய கவிதை....

    அருமையான வரிகள் கொண்ட கவிதை...

    நட்புடன்...
    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  10. மரணத்தை மறந்த நாமும்
    மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
    மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.

    ரசிக்கும் படி இருக்கு

    பதிலளிநீக்கு
  11. மரணத்தையும் நேசிக்க செய்யும் அழகான வரிகளால்.மரணத்தை நினைத்து மனிதனாய் வாழ்ந்தால் மரணத்தை கண்டு பயப்பட வேண்டியதில்லை.வழக்கம் போல் நல்ல கவிதை தந்துள்ளிர்கள்.அதுவும் நற்சிந்தனியோடு

    பதிலளிநீக்கு
  12. மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.


    yoosikka vaikkum varikal...

    பதிலளிநீக்கு
  13. சுற்றங்கள் சுற்றியமர்ந்து
    சோகமதை வெளிப்படுத்த
    இருந்தநொடி இல்லாத பாசம்
    இறந்தநொடி
    இலந்தைக் கொடியாய் படர
    //
    உண்மையை உள்ளபடி சொன்னீர்கள்.

    மிக அருமையான கவி

    பதிலளிநீக்கு
  14. மிக ம்மிக சிறப்பான கவிதை வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  15. மரண சிந்தனை கவிதை மிக அருமை.

    அதிரை அஷ்ரப்

    பதிலளிநீக்கு
  16. மரணத்தை ஆழமாகச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் மல்லிக்கா !

    பதிலளிநீக்கு
  17. மரணத்தை மறந்த நாமும்
    மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
    மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.

    பலரையும் சிந்திக்க வைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  18. மரணத்தை மறந்த நாமும்
    மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
    மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.

    கனமான வரிகள் மலிக்கா

    பதிலளிநீக்கு
  19. கவிதை நல்லா..இருக்கு .....நானும் கவிதை எழுதுவேங்க ..ஆனால் நான் இடுக்கை இடரது திரும்ப அது என்னிடமே திரும்பி வந்துட்ரதுங்க.

    அக்கௌண்டில் ப்ராப்ளம்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. கண்டேன்... கண்டேன்...
    கவிதை அருமை கண்டேன்.

    பதிலளிநீக்கு
  21. உங்களிடம் கவிதெழுத கற்கவேண்டும் மலிக்கா.

    அப்படியே அத்தனையும் கண்ணெதிரே நிறுத்துவிடுறீங்க.

    மரணபயம் மனதைகவ்வியது படித்துமுடித்ததும்.

    இறைவன் உங்களுக்கு நல்லருள்புரிவானாக.

    உங்கள் குடும்பமொத்தமும் கொடுத்துவைத்தவங்க.

    பதிலளிநீக்கு
  22. மரணம் ..இந்த நிகழ்வே இல்லையென்றால் மனிதன் மிருகமாக மாறி ஒருவனுக்கு ஒருவன் அடித்து தன்னைத் தானே புசித்துக் கொள்வான்.

    பூமியோ தன்னைச் சுற்றிக்கொள்ள சக்தி இழந்து சங்கவித்து போகும்.
    இதை அறிந்த இறைவன் பிறப்பது எவ்வுயிராயிலும் இறப்பதும் சரியே என்கிறான்.

    வியந்தேன் ..வியந்தேன் .

    உம் அதிசிய வார்த்தைகளைக் கண்டு வியந்தேன்.

    கண்ணிமைகள் சிறிதும் அசையாமல்.

    உம் வாக்கியங்களை அனைத்தையும் கண்டேன்.

    அச்சிட்ட உமது காவியத்தை.

    சேரில் அமர்ந்து கண் விழித்துக் கண்டேன்.

    புட்பால் விளையாடிய என் கால்கள் ரெண்டும்.

    ஒரே இடத்தில் கட்டிபோட கண்டேன்.(ரூமில்)

    படித்த கவிதைகள் எல்லாம் கனவில் பறந்து விட

    பட்ட மரமாக உணரக்கண்டேன். ( கனவில் )

    சாட் ரூமில் ஓயாது பேசிய என் வாயோ.

    ஒரு அசைவும் இல்லாது, பபுல்க்காம் போட்டு ஒட்டியது போல்

    உணரக் கண்டேன். ( நான் நீரோடையில் இருக்கும் போது)


    மரணத்தை மறந்த நாமும்
    மரக்கட்டையாய் வாழ்கிறோமோ!
    மரணத்தை நினைத்தபடியே
    மனிதனாய் வாழநினைப்போமா.


    மரக்கட்டையாய் நாம் வாழ்ந்தாலும் .

    உபயோகம் கடலில் நீந்துவதற்கு.

    ஆனால் மனிதன் அதையும் தாண்டி.........?


    உங்கள் படைப்பு படிப்பதற்கு அருமை.

    கவி எழுத நிறையா வேணும் பொறுமை.

    எல்லோருக்கும் வந்திடாது உமது திறமை .

    இத்தளத்தினால் உம்மை சான்றோருக்கு பெருமை.

    பல கவிஞர்களுக்கு எதிராய் நிர்ப்பது வறுமை.

    அதையும் தாண்டி............. நீரோடையோ புதுமை.

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். என்னிறைவா புகழை நீ ஏற்று உன் கருணையை எங்களுக்கு தந்தருள்வாயாக.

    வாழ்த்துக்கள் ....தொடரட்டும் கவிதைகள்...நிரெம்பி வழியட்டும் நீரோடை கட்டு மரம் நான் கொண்டு வர்றேன் பயணிக்க ( எனக்கு மட்டும்தான் )

    குறிப்பு : நீச்சல் தெரியாதவர்கள் மிதப்பாவை பயன் படுத்தவும் (லைப் ஜாக்கெட்) அதுக்காக பழைய டயரைக் கொண்டு வந்திட்ராதியே.

    பதிலளிநீக்கு
  23. புனித ரமலான் முபாரக் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  24. உயிரது வெளியேறி
    உடலது உருமாறி
    வெற்றுடலாய்
    வீற்றிறுக்கக் கண்டேன்///

    அது எப்படிங்க எல்லா விசயத்தையும் , இவ்வளவு ஈசியா கவிதை நடைல சொல்றிங்க ,,, கிரேட்

    பதிலளிநீக்கு
  25. கருத்து தெரிவித்த அனைத்து அன்பான உள்ளங்களுக்கும் நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி
    நன்றி நன்றி....

    பதிலளிநீக்கு
  26. வாங்க அய்யூப் தங்களின் வருகை நல்வரவாகட்டும்.

    தங்களை வாங்கன்னு ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லையென ஜலீலாக்காவின் தளத்தில் சொல்லியிருந்ததைப்பார்த்தேன். நான் நேற்றுதான் இந்தியாவிலிருந்து வந்தேன், அதனால்தான் தங்களுக்கு பதில் தரஇயலவில்லை பொருந்திக்கொள்ளவும்.

    தொடர்ந்து வருகைதரவும்.
    மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும்.மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது