நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நீயின்றி நானேது!....


எனைத்தொடரத்தான்
உனைப் படைத்தானோ!
இல்லை-எனக்குள்
உனைப் புதைத்துதான்
எனைப் படைத்தானோ!

என்னில் நீ
முழுமையாகி -நான்
எழும்போதும் விழும்போதும்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
முன்னும் பின்னும்
என் எல்லா நிலைகளிலும்
எனக்குளாகிவிட்டாய்!

சிலவேளை
உனைக்கண்டு நான் அதிர!
பலவேளை
எனைக்கண்டு நீ மிரள!

என்னைப்போலவே நீயிருந்தும்
எலும்புகள் ஏதும் உனக்கில்லாததும்!
என் உருவம் அழகாய் இருக்கையில்
எனக்குளிருக்கும் நீ
நிழலாய் தெரிவதும்
உலகப் பாடம் படித்திடவே
மனசாட்சி
நிழல்ப் படமாய் தெரிகிறதோ!

நான் தவறிடாவாறு
கண்கானிக்கிறாய்-என்
மனம்போன போக்கை
கண்டிக்கிறாய்!
மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!

நீ
என்கூடவே வரும்வரை
என்னக்கில்லை மரணம்
நீ
என்னைவிட்டுப் பிரிந்தபின்
எனக்கேது உலகிலே உறைவிடம்.

டிஸ்கி// இப்படத்திற்கான /சிநேகிதன்/ அக்பரின் கவிதை
மரக் காதல்
நீ அமுதை பொழிகிறாய்
நான் அன்பை பொழிகிறேன்
இந்த நேரத்தில்
செங்கதிரோனுக்கு
இங்கு என்ன வேலை?
நீ ஓடி விடாதே நில்..

அக்பர் அங்கேயே நிற்கச்சொல்லி நிலாவுக்கு தூது அனுப்பிச்சாச்சி ஓகேயா.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

என் ஆக்கங்கள் எப்படியிருக்குன்னு
நீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீங்கதானே!

51 கருத்துகள்:

  1. எனைத்தொடரத்தான்
    உனைப் படைத்தானோ!
    இல்லை-எனக்குள்
    உனைப் புதைத்துதான்
    எனைப் படைத்தானோ!

    .... superb!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பேரு ம (ல்)லி
    நீங்கள் கவிதையிலே புலி
    அடுத்தவற்க்கு உதவுவதிலே நீங்கள் கில்லி
    உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் அல்லி
    உங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லாம் * கல்லிவல்லி

    *அரபி வார்த்தை ( i don't care ) உதவாக்கரை என்றும் கருத்து கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  3. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.... அக்ப‌ருக்கு வாழ்த்துக்க‌ள்..

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை மலிக்கா.

    படத்தை கடைசியிலோ, அல்லது வேறு படத்தையோ போட்டிருந்தால் சிறிது சுவாரசியமாக இருந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. //அருண் பிரசாத் கூறியது...
    கவிதை அருமை மலிக்கா.

    படத்தை கடைசியிலோ, அல்லது வேறு படத்தையோ போட்டிருந்தால் சிறிது சுவாரசியமாக இருந்து இருக்கும்.//

    மிக்க நன்றி அருண். படம் மாற்றிவிட்டேன்.இப்போது எப்படியிருக்குன்னு சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  6. அமைதிச்சாரல் கூறியது...
    நிழல் நல்லாருக்குங்க.//

    மிக்க நன்றி சாரல்.


    Chitra கூறியது...
    எனைத்தொடரத்தான்
    உனைப் படைத்தானோ!
    இல்லை-எனக்குள்
    உனைப் புதைத்துதான்
    எனைப் படைத்தானோ!

    .... superb!.
    மிக்க நன்றி சித்ரா மேடம்.

    சூப்பர் நான் உங்க இருவரையும் சொன்னேங்கோ. சித்ரா சாலமன்.

    பதிலளிநீக்கு
  7. என்னப்பா யாசிர் கவிதை அருவிமாதிரி கொட்டுது

    பதிலளிநீக்கு
  8. என்னப்பா யாசிர் கவிதை அருவிமாதிரி கொட்டுது .பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்களே அது இது தானோ!!!!

    பதிலளிநீக்கு
  9. கவிதை மிக அருமை நல்லாயெழுதுறீங்க மேடம்.

    உங்க படத்தேர்வெல்லாம் மிக அருமை.

    வாழ்த்துக்கள் நானும் நிழலோடு பேசுவதுப்போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நிழல் பற்றிய நிஜத்தை சொல்லியிருக்கீங்க

    ----------------

    சிலவேளை
    உனைக்கண்டு நான் அதிர!
    பலவேளை
    எனைக்கண்டு நீ மிரள!


    ஹா ஹா ஹா
    -----------------

    படம் ரொம்ப அருமை

    பதிலளிநீக்கு
  11. என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு நன்றி மலிக்கா.

    இந்த படத்தேர்வு அருமை. கவிதை குழந்தையை பற்றியா, நிழலை பற்றியா என குழப்பத்தை தந்து விடையை தருகிறது.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. ஊரில் பவர் கட் பையன் காற்றலையில் மின்சாரம் தயாரிக்க முயற்சிகிரானோ (போட்டோ )

    பதிலளிநீக்கு
  13. நானும் ‘உங்க அவரை’ப் பத்திதான் கவிதை வடிச்சீங்களோன்னு நெனச்சேன்.. ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு
  14. அருண் பிரசாத் கூறியது...
    என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு நன்றி மலிக்கா.//

    சகோதரா.பிறருக்கும் திருப்தியளிக்கவேண்டுமல்லவா நம்முடைய படைப்பும் கருத்தும் தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    //இந்த படத்தேர்வு அருமை. கவிதை குழந்தையை பற்றியா, நிழலை பற்றியா என குழப்பத்தை தந்து விடையை தருகிறது.//

    குழந்தையும் நிழலும் ஒன்றுதான் அருண். என்ன ஒன்று. நிழலோடு நாம் போய்விடுவோம்.

    குழந்தை நம் நிழலென்னும் நினைவோடு வாழ்ந்திருக்கும்..
    சரியா..இல்லையா..

    //வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  15. புஷ்பா கூறியது...
    nice one... all the best

    வாங்க புஷ்பா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..


    //ராசராசசோழன் கூறியது...
    நிஜம் நிழலாடுகிறது//

    அப்படியா. மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  16. மல்லி கவிதை ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  17. //ஹுஸைனம்மா கூறியது...
    நானும் ‘உங்க அவரை’ப் பத்திதான் கவிதை வடிச்சீங்களோன்னு நெனச்சேன்.. ஹி.. ஹி..//

    வாங்க ஹுசைனம்மா.
    எங்கவீட்டில் அவரை இப்போதுதான் பூவிட்டுயிருக்கு பால்கனியில்.

    அச்சோ அதுசரி நீங்க ”அவரையின்னு” என்மச்சானைதானே சொன்னீங்க.
    என் நிழலும் அவுகதான் என் நிஜமும் அவுகதான்.ஆக என் அனைத்தும் அவுகளேதான் அப்படியே இக்கவிதையையும் வச்சிக்கலாமுங்கோ.

    குசும்புகார ஹுசைனம்மா.
    ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  18. //வாங்க ஹுசைனம்மா.
    எங்கவீட்டில் அவரை இப்போதுதான் பூவிட்டுயிருக்கு பால்கனியில்// ஹுசைனம்மா குசும்பு இளவரசி என்றால்..நீங்க குசும்பு ராணி...கலக்கல் பதில்...நன்றி சாகுல் காக்கா

    பதிலளிநீக்கு
  19. கவிதை நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  20. எப்படிங்க இந்தமாதிரி அழகா டுவிட் வச்சி.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. நாங்கோ... வந்துட்டோம்ல.....

    காஞ்சி முரளி...

    பதிலளிநீக்கு
  22. Yasir கூறியது...
    //வாங்க ஹுசைனம்மா.
    எங்கவீட்டில் அவரை இப்போதுதான் பூவிட்டுயிருக்கு பால்கனியில்// ஹுசைனம்மா குசும்பு இளவரசி என்றால்..நீங்க குசும்பு ராணி...கலக்கல் பதில்...நன்றி சாகுல் காக்கா.//

    வாங்க காக்கா தங்களின் வருகைக்கும். குசும்புராணி பட்டத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. காஞ்சி முரளி கூறியது...
    நாங்கோ... வந்துட்டோம்ல.....

    காஞ்சி முரளி...//

    ஆகா. ரெஸ்டெல்லாம் வீனாகிவிட்டதே! அண்ணி ஏன் அண்ணி இத்தனை சொல்லியும் அண்ணாவை இப்படி விட்டுட்டீங்க.

    என் அட்வைசெல்லாம் அவுட்டாயிடுச்சே! போங்க அண்ணி
    உங்ககூட டுக்கா..

    பதிலளிநீக்கு
  24. //// எழும்போதும் விழும்போதும்////

    ////சிலவேளை... உனைக்கண்டு நான் அதிர!
    பலவேளை.... எனைக்கண்டு நீ மிரள!///

    ////நீ என்னைவிட்டுப் பிரிந்தபின்
    எனக்கேது உலகிலே உறைவிடம்.////

    அழகான... புதிய வரிகள்.... எதுகைமோனையுடன் ....

    நிஜங்களுக்குத்தான் கவிதை...
    நிழல்களுக்குமா....!
    நிஜமாய்...
    'நிழல்' கவிதை... அருமை....

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  25. நகைச்சுவையும் உண்மையும்
    இணைந்த கவிதை!

    பதிலளிநீக்கு
  26. திக்கு தெரியா காட்டின் திசைகள் திறக்கும் திறவுகோல்...நீ..ஆஹா மலிக்கா அக்காவின் மற்ற்றொரு மல்லிகை கவிதை...அழகு...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  27. //நான் தவறிடாவாறு
    கண்கானிக்கிறாய்-என்
    மனம்போன போக்கை
    கண்டிக்கிறாய்!
    மனசாட்சியாய் தண்டிக்கிறாய்!
    நிழல்சாட்சியாய் நிந்திக்கிறாய்!//

    திக்கு தெரியா காட்டின் திசைகள் திறக்கும் திறவுகோல்...நீ..

    ஆஹா மலிக்கா அக்காவின் மற்ற்றொரு மல்லிகை கவிதை...அழகு...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  28. எங்கவீட்டில் அவரை இப்போதுதான் பூவிட்டுயிருக்கு பால்கனியில்

    அவரை போட்டால் துவறையா பூ விடும்

    பதிலளிநீக்கு
  29. //சிலவேளை
    உனைக்கண்டு நான் அதிர!
    பலவேளை
    எனைக்கண்டு நீ மிரள!//


    வர்னனை சூப்பர்...!!!

    பதிலளிநீக்கு
  30. சிலவேளை
    உனைக்கண்டு நான் அதிர!
    பலவேளை
    எனைக்கண்டு நீ மிரள!

    //

    அழகான வரிகள்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. //குழந்தையும் நிழலும் ஒன்றுதான் அருண். என்ன ஒன்று. நிழலோடு நாம் போய்விடுவோம்//

    உண்மை.

    சில நாள் குழந்தை நம் நிழலில் இருக்கிறார்கள். பின்னர் நாம் அவர்கள் நிழலில் இருக்கிறோம்.


    உங்கள் அளவிற்கு இல்லை என்றாலும், நானும் சில கவிதை போன்ற கிறுக்கள்களை கிறுக்கி உள்ளேன். நேரம் இருந்தால் படிக்கவும்.

    http://arunprasathgs.blogspot.com/

    பதிலளிநீக்கு
  32. //ஹுஸைனம்மா கூறியது...
    நானும் ‘உங்க அவரை’ப் பத்திதான் கவிதை வடிச்சீங்களோன்னு நெனச்சேன்.. ஹி.. ஹி..//

    அட இதே தான் நானும் நினைச்சேன்... சோ ரிப்பீட்டு... :-)) கவிதை அழகா இருக்கு....

    பதிலளிநீக்கு
  33. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  34. கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  35. அக்கா,உங்களுக்கு பதில் அனுப்பினேனே?

    பதிலளிநீக்கு
  36. பாத்திமா ஜொஹ்ரா கூறியது...
    அக்கா,உங்களுக்கு பதில் அனுப்பினேனே?

    எதில பாத்திமா பதில் அனுப்புனீங்க.
    யாஹீவிலா?

    பதிலளிநீக்கு
  37. //வாங்க காக்கா தங்களின் வருகைக்கும். குசும்புராணி பட்டத்துக்கும் மிக்க நன்/// நான் உங்களுக்கு தம்பிதாண்டு நினைக்கிறேன்.என்னுடைய பிறந்த தேதி 18/05/1979 ....சரிதானே ?

    பதிலளிநீக்கு
  38. சாருஸ்ரீராஜ் கூறியது...
    மல்லி கவிதை ரொம்ப நல்லா இருக்கு


    ரொம்ப நன்றிக்கா..

    பதிலளிநீக்கு
  39. //நாடோடி கூறியது...
    க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.... அக்ப‌ருக்கு வாழ்த்துக்க‌ள்//

    மிக்க நன்றி ஸ்டீபன்.

    //கமலேஷ் கூறியது...
    கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க...

    வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி கமலேஷ்..

    பதிலளிநீக்கு
  40. Yasir கூறியது...
    உங்கள் பேரு ம (ல்)லி
    நீங்கள் கவிதையிலே புலி
    அடுத்தவற்க்கு உதவுவதிலே நீங்கள் கில்லி
    உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் அல்லி
    உங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லாம் * கல்லிவல்லி

    *அரபி வார்த்தை ( i don't care ) உதவாக்கரை என்றும் கருத்து கொள்ளலாம்../

    கவிதை அடுக்குமொழியில் அசத்துங்க.

    //உங்களுக்கு முன்னால் நாங்கள் எல்லாம் * கல்லிவல்லி//

    ஏன் ஏன் இப்படியெல்லாம்..


    // குமரேசன் கூறியது...
    கவிதை மிக அருமை நல்லாயெழுதுறீங்க மேடம்.

    உங்க படத்தேர்வெல்லாம் மிக அருமை.

    வாழ்த்துக்கள் நானும் நிழலோடு பேசுவதுப்போலிருக்கிறது//

    மிக்க நன்றி குமரேசன்.

    பதிலளிநீக்கு
  41. //Yasir கூறியது...
    //வாங்க காக்கா தங்களின் வருகைக்கும். குசும்புராணி பட்டத்துக்கும் மிக்க நன்/// நான் உங்களுக்கு தம்பிதாண்டு நினைக்கிறேன்.என்னுடைய பிறந்த தேதி 18/05/1979 ....சரிதானே//

    தம்பிதானெல்லாமில்லை காக்கா குட்டிக்காக்காதான் 6. 7 மாதமுன்னாலும் காக்கா காக்காதானே..

    பதிலளிநீக்கு
  42. //shahulhameed கூறியது...
    என்னப்பா யாசிர் கவிதை அருவிமாதிரி கொட்டுது .பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்களே அது இது தானோ!!!!//

    அதெல்லாம் தானவரும் அப்படித்தானே யாசிர்காக்கா.

    அதுசரி அதென்ன பூ. நார்.
    நார் நாந்தானே சாகுல்காக்கா..

    பதிலளிநீக்கு
  43. நட்புடன் ஜமால் கூறியது...
    நிழல் பற்றிய நிஜத்தை சொல்லியிருக்கீங்க

    ----------------

    சிலவேளை
    உனைக்கண்டு நான் அதிர!
    பலவேளை
    எனைக்கண்டு நீ மிரள!


    ஹா ஹா ஹா
    -----------------

    படம் ரொம்ப அருமை.//

    என்ன ஜமால்காக்கா நல்லவுல்ல சிரிக்கிறீக. நீங்களும் மிரண்டுஇருக்கீகளோ.



    //shahulhameed கூறியது...
    ஊரில் பவர் கட் பையன் காற்றலையில் மின்சாரம் தயாரிக்க முயற்சிகிரானோ (போட்டோ//

    ஓ முயற்ச்சிக்கட்டும் முயற்ச்சிக்கட்டும்.
    அதுவும் அவசியந்தானே சாகுல்காக்கா.

    பதிலளிநீக்கு
  44. காஞ்சி முரளி கூறியது...
    //// எழும்போதும் விழும்போதும்////

    ////சிலவேளை... உனைக்கண்டு நான் அதிர!
    பலவேளை.... எனைக்கண்டு நீ மிரள!///

    ////நீ என்னைவிட்டுப் பிரிந்தபின்
    எனக்கேது உலகிலே உறைவிடம்.////

    அழகான... புதிய வரிகள்.... எதுகைமோனையுடன் ....

    நிஜங்களுக்குத்தான் கவிதை...
    நிழல்களுக்குமா....!
    நிஜமாய்...
    'நிழல்' கவிதை... அருமை....

    நட்புடன்...
    காஞ்சி முரளி//

    எதுகைமோனையுடன் கவிதைவடிக்கவே நிறைய ஆசை.
    அப்பப்ப நிறைவேற்றிக்கொள்ளவும் செய்கிறேன்.

    என்னசெய்ய நிஜங்களை இப்போதெல்லாம் நிழலாகிவிடுகிறார்கள் அதான் நாமும் சேந்து அதுக்கு ஒரு நன்றிசொல்வோமேன்னுதான். மிக்க நன்றி சகோதரா.

    பதிலளிநீக்கு
  45. Riyas கூறியது...
    கவிதை நல்லாயிருக்கு...

    நன்றி ரியாஸ்..



    //ராஜவம்சம் கூறியது...
    எப்படிங்க இந்தமாதிரி அழகா டுவிட் வச்சி.
    வாழ்த்துக்கள்.//

    எப்படியோ வருது ராஜவம்சம்.. மிக்க நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  46. Vijiskitchen கூறியது...
    நல்ல சூப்பர் கவிதை.

    மிக்க நன்றி விஜி

    //NIZAMUDEEN கூறியது...
    நகைச்சுவையும் உண்மையும்
    இணைந்த கவிதை//


    மிக்க நன்றி நிஜாமுதீனண்ணா..

    பதிலளிநீக்கு
  47. //அதெல்லாம் தானவரும் அப்படித்தானே யாசிர்காக்கா // அப்படில்லாம் இல்ல தங்கச்சி : ) :( மலிகா என்ற கவிதை நீரோடையைக்கண்டு மகிழ்ந்து ஒரு யாசிர் என்ற குட்டை சொன்னது..இது கவிதை யேன்று சாகுல் காக்கா சொன்ன பிறகுதான் தெரிந்தது

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது