நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உழைப்பாளருக்கு ஊதியம்!


ஏழை உழைப்பாளார்கள்
உழைத்துகொண்டேதான்
இருக்கிறார்கள்-ஆனால்
ஊதியம் மட்டும்
மிஞ்சுவதேயில்லை!
கூலி கூடுவதுமில்லை!
உழைத்து உழைத்து
ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்
மிஞ்சும் காசுக்கு தேய்ந்த
உடலை தே[ற்ற]த்தக்
கூடமுடிவதில்லை!
உழைப்பாளர்களை
உற்று கவனிக்கும்போது-அவர்கள்
உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
ஏக்கம் தெரியும்
எத்தனை உழைத்தபோதும் -இந்த
எலும்புகள் மட்டுமே
எஞ்சி மிஞ்சுகிறதேயென!
கடும் உழைப்பாளிகளுக்கு
கஷ்டம் தெரியாதாம்
கஷ்டம் தெரியும்போது
கடும் உழைப்பும்
கஷ்டமாக தெரியாதாம்.

உழைப்பவர்களுக்கு
அவர்கள் வியர்வை
உலர்ந்துவிடுவதற்குள்
அவர்களின்
ஊதியத்தை கொடுத்திடுங்கள்.


தமிழர்களே! தமிழர்களே!
ஏழை உழைப்பாளிகள் –
கஷ்டப்படுவதை காணும்போது
கண்டிப்பாய் உதவுங்கள்.


வாழ்த்துக்கள் சொல்வதோடு
நின்றுவிடாமல் –அவர்கள்
வாழவும் வழிவகுத்துக் கொடுத்திடவும்
வரிசையில் வந்து நில்லுங்கள்..

டிஸ்கி// நேற்று போடவேண்டிய கவிதை.உழைத்து உழைத்து எங்களுக்காக வாழும் மச்சானுக்கும் ஓய்வு வேண்டுமே! அதான்
கொஞ்சம் ஓய்வெடுக்க [துபையைவிட்டு அவுட்]வெளியில் சென்று விட்டோம்! எப்புடி ஓய்வுகிடைக்கும் காரை யார் ஓட்டுவது!  உழைக்கும் மனிதருக்கு ஓய்வென்பதேது!
மன நிம்மதியிருந்தால் அது ஒன்றே போதும். 
எல்லாம் நன்மைக்கே! // இக்கவிதை தமிழ்குடும்பத்திற்காக எழுதியது../

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

19 கருத்துகள்:

 1. /ஆனால்
  ஊதியம் மட்டும்
  மிஞ்சுவதேயில்லை!//
  அவர்களுக்கு நேற்றுகூட விடுமுறை இல்லை

  பதிலளிநீக்கு
 2. //உழைப்பவர்களுக்கு
  அவர்கள் வியர்வை
  உலர்ந்துவிடுவதற்குள்
  அவர்களின்
  ஊதியத்தை கொடுத்திடுங்கள்//

  மணியான வார்த்தைகள்...

  பதிலளிநீக்கு
 3. எல்லா க‌விதையும் ந‌ல்லா இருக்குங்க‌.... வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 4. படங்களில் உள்ள வலிமை...வர்த்தைகளில் குறைந்திருப்பது போல் தெரிகிறது...

  பதிலளிநீக்கு
 5. //கடும் உழைப்பாளிகளுக்கு
  கஷ்டம் தெரியாதாம்
  கஷ்டம் தெரியும்போது
  கடும் உழைப்பும்
  கஷ்டமாக தெரியாதாம்.//

  அட்டகாசமான வரிகள்.

  //அதான்
  கொஞ்சம் ஓய்வெடுக்க [துபையைவிட்டு அவுட்]வெளியில் சென்று விட்டோம்! எப்புடி ஓய்வுகிடைக்கும் காரை யார் ஓட்டுவது! உழைக்கும் மனிதருக்கு ஓய்வென்பதேது!//

  ஹா..ஹா.. நீங்களே பதிலும் சொல்லி தப்பிச்சிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 6. //உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தது உடல்-அதில்
  மிஞ்சும் காசுக்கு தேய்ந்த உடலை தே[ற்ற]த்தக் கூடமுடிவதில்லை!//

  //உழைப்பாளர்களை.. உற்று கவனிக்கும்போது-அவர்கள்.. உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
  ஏக்கம் தெரியும்.. எத்தனை உழைத்தபோதும் -இந்த.. எலும்புகள் மட்டுமே எஞ்சி மிஞ்சுகிறதேயென!//

  //கடும் உழைப்பாளிகளுக்கு.. கஷ்டம் தெரியாதாம்...கஷ்டம் தெரியும்போது
  கடும் உழைப்பும்.. கஷ்டமாக தெரியாதாம்.//

  "உலக உழைக்கும் வர்க்கத்தின் திருநாள்"இல்
  உழைக்கும் மக்களுக்கு சமர்ப்பனாமாய் வடித்த
  இந்த கவிதையும் சூப்பர் ....
  மேலே நான் குறிப்பிட்ட வரிகளும் சூப்பர்...

  நட்புடன்..
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 7. உழைப்பாளர் தின கவிதை அழகு, டிஸ்கி சொன்ன விதமும் நல்லா இருக்கு!!

  பதிலளிநீக்கு
 8. அருமையான கவிதைகள்.. உழைப்பாளியின் தியாகத்தை போற்றவேண்டும்.

  என் இனிய மேதின வாழ்த்துகள் மலிக்கா.

  பதிலளிநீக்கு
 9. சமூக அக்கறையோடு கூடிய உங்கள் எண்ணங்களுக்கு
  எனது நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 10. //கடும் உழைப்பாளிகளுக்கு
  கஷ்டம் தெரியாதாம்
  கஷ்டம் தெரியும்போது
  கடும் உழைப்பும்
  கஷ்டமாக தெரியாதாம்.//

  சூப்பர் வரிகள்..அக்கா...உழைப்பின் அருமையும் பெருமையும் தெறிக்குது கவிதையில்...

  பதிலளிநீக்கு
 11. உற்று கவனிக்கும்போது-அவர்கள்
  உடலின் ஒவ்வொரு எலும்பிலும்
  ஏக்கம் தெரியும்]]

  என்னா ஒரு கவணிப்பு

  ----------

  ஊதியம் கொடுத்திடவேணும் வியர்வை உளர்வதற்குள் - நல்ல சொல் நல்லவர் சொன்ன சொல்.

  பதிலளிநீக்கு
 12. படிப்பு, பட்டம், பதவி என்கிற
  பல பெயர்களால் உழைக்கும்
  மக்கள் உறிஞ்சப்படுகிறார்கள்.
  ஆதலால் உழைக்கும் மக்களின்
  தொகை குறைந்து வருகிறது.

  பதிலளிநீக்கு
 13. கருத்துள்ள கவிதை..... பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 14. அருமை!! உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது