நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

என் மனவானில்


அடியே காதலியே
அன்பான தேவதையே!

பரிமாறிக்கொண்ட
பார்வைகளின் ஸ்பரிசங்கள்
பேசாமல் பேசிய
வார்த்தைகளின் கோர்வைகள்
நொடிக்கொருமுறை
நினைவுகளோடு உரசல்கள்-என
நெஞ்சம் முழுவதும்
நிரம்பி வழிகிறாய்

விழிகளில் வினவினாய்
இதயத்தை தழுவினாய்
விழிமூடும் போதெல்லாம்
உயிருக்குள் உலவினாய்

உயிரின் வேர்களை உலுக்கி
அதிலுதிர்ந்த உணர்வுகளை
உதிராமல் கோர்த்தாய்

கோத்த நினைவுகளை
பொக்கிஷமாக்கி
அதை தொலைந்துவிடாதவாறு
மனதிற்குள் புதைத்தாய்

மூங்கிலின் காற்றுக்குள்
மூச்சுமுட்ட செய்தாய்
மூழ்காமல் கடலுக்குள்
முத்தெடுக்க வைத்தாய்

எனக்குள் உன்னைத் தந்து
மனச்சிறகையும் நெய்து தந்து
மனவானில் பறக்கும்போது
சிறகுகளை கேட்கிறாய்

முயன்றுதான் பார்க்கிறேன்
முடியாமல் தோற்கிறேன்
மறக்கமுடியா நினைவுகளை
மீண்டும்
மனத்திற்குள் பூட்டுகிறேன்

அடிபோடி காதலியே
என்றுமே நீ என் தேவதையே!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

17 கருத்துகள்:

 1. //எனக்குள் உன்னைத் தந்து
  மனச்சிறகையும் நெய்து தந்து
  மனவானில் பறக்கும்போது
  சிறகுகளை கேட்கிறாய்//

  இப்பிடித்தான் நிறைய சிறகுகள் பிடுங்கப்படுகின்றன...நல்லா இருக்குங்க மாலிக்கா.

  பதிலளிநீக்கு
 2. // முயன்றுதான் பார்க்கிறேன்
  முடியாமல் தோற்கிறேன்
  மறக்கமுடியா நினைவுகளை மீண்டும்
  மனத்திற்குள் பூட்டுகிறேன்

  அடிபோடி காதலியே
  என்றுமே நீ என் தேவதையே! //
  உண்மைதான் முடியவில்லை. நல்ல கவிதை, அற்புதமான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. //மூங்கிலின் காற்றுக்குள்
  மூச்சுமுட்ட செய்தாய்
  மூழ்காமல் கடலுக்குள்
  முத்தெடுக்க வைத்தாய்//

  மல்லிக்கா மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. //விழிமூடும் போதெல்லாம்
  உயிருக்குள் உலவினாய்//

  //மூங்கிலின் காற்றுக்குள்
  மூச்சுமுட்ட செய்தாய்
  மூழ்காமல் கடலுக்குள்
  முத்தெடுக்க வைத்தாய்//

  //உயிரின் வேர்களை உலுக்கி
  அதிலுதிர்ந்த உணர்வுகளை
  உதிராமல் கோர்த்தாய்//

  **************************************

  ரசித்த வரிகள். மொத்ததில் கவிதை முழுவதும் அன்பும், காதலும் வழிகிறது. அருமை மலிக்கா

  பதிலளிநீக்கு
 5. \\மூங்கிலின் காற்றுக்குள்
  மூச்சுமுட்ட செய்தாய்
  மூழ்காமல் கடலுக்குள்
  முத்தெடுக்க வைத்தாய்//

  ரசிக்க வைத்த வரிகள். நல்ல இருக்குங்க மலிக்கா..!

  பதிலளிநீக்கு
 6. மயிலிறகால் வருடுவதுபோல்
  இதமான வார்த்திகளாய்...
  கவிதை, அருமை!

  பதிலளிநீக்கு
 7. //விழிகளில் வினவினாய்
  இதயத்தை தழுவினாய்
  விழிமூடும் போதெல்லாம்
  உயிருக்குள் உலவினாய்

  உயிரின் வேர்களை உலுக்கி
  அதிலுதிர்ந்த உணர்வுகளை
  உதிராமல் கோர்த்தாய்
  //
  உயிருக்குள் உலாவினாய் அருமை தோழி

  பதிலளிநீக்கு
 8. நீண்ட நாளைக்கு பிறகு ஒரு காதல் கவிதையை ரசித்துப் படித்தேன் சொல்லும் கருத்துக்களும் கையாண்ட வார்த்தைகளும் அருமை வாழ்த்துகள் சகோதரி.

  பதிலளிநீக்கு
 9. //உயிரின் வேர்களை உலுக்கி
  அதிலுதிர்ந்த உணர்வுகளை
  உதிராமல் கோர்த்தாய்//

  ரொம்ப நல்லாருக்கு........
  வாழ்த்துக்கள்.............

  பதிலளிநீக்கு
 10. //எனக்குள் உன்னைத் தந்து
  மனச்சிறகையும் நெய்து தந்து
  மனவானில் பறக்கும்போது
  சிறகுகளை கேட்கிறாய்//

  கவிதையினை மிக ரசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. மூங்கிலின் காற்றுக்குள்

  மூச்சுமுட்ட செய்தாய்

  மூழ்காமல் கடலுக்குள்

  முத்தெடுக்க வைத்தாய்

  .... thirumanem avathavarkal kathaliyaiyum, thirumanamanavarkal manaiviyaiyum ninaika vaikum kavithai....

  - Trichy Syed

  பதிலளிநீக்கு
 12. புலவன் புலிகேசி கூறியது...
  //எனக்குள் உன்னைத் தந்து
  மனச்சிறகையும் நெய்து தந்து
  மனவானில் பறக்கும்போது
  சிறகுகளை கேட்கிறாய்//

  இப்பிடித்தான் நிறைய சிறகுகள் பிடுங்கப்படுகின்றன...நல்லா இருக்குங்க மாலிக்கா//

  அப்படியா! புலி,மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 13. பித்தனின் வாக்கு கூறியது...
  // முயன்றுதான் பார்க்கிறேன்
  முடியாமல் தோற்கிறேன்
  மறக்கமுடியா நினைவுகளை மீண்டும்
  மனத்திற்குள் பூட்டுகிறேன்

  அடிபோடி காதலியே
  என்றுமே நீ என் தேவதையே! //
  உண்மைதான் முடியவில்லை. நல்ல கவிதை, அற்புதமான பதிவு. நன்றி.

  ஆக அப்படித்தான் இல்லையா திவாகர்சார். மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 14. ஹேமா கூறியது...
  //மூங்கிலின் காற்றுக்குள்
  மூச்சுமுட்ட செய்தாய்
  மூழ்காமல் கடலுக்குள்
  முத்தெடுக்க வைத்தாய்//

  மல்லிக்கா மிகவும் ரசித்தேன்..

  மிக்க நன்றிதோழி...

  பதிலளிநீக்கு
 15. S.A. நவாஸுதீன் கூறியது...
  //விழிமூடும் போதெல்லாம்
  உயிருக்குள் உலவினாய்//

  //மூங்கிலின் காற்றுக்குள்
  மூச்சுமுட்ட செய்தாய்
  மூழ்காமல் கடலுக்குள்
  முத்தெடுக்க வைத்தாய்//

  //உயிரின் வேர்களை உலுக்கி
  அதிலுதிர்ந்த உணர்வுகளை
  உதிராமல் கோர்த்தாய்//

  **************************************

  ரசித்த வரிகள். மொத்ததில் கவிதை முழுவதும் அன்பும், காதலும் வழிகிறது. அருமை மலிக்கா..

  அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி நவாஸண்ணா..

  பதிலளிநீக்கு
 16. லெமூரியன் கூறியது...
  \\மூங்கிலின் காற்றுக்குள்
  மூச்சுமுட்ட செய்தாய்
  மூழ்காமல் கடலுக்குள்
  முத்தெடுக்க வைத்தாய்//

  ரசிக்க வைத்த வரிகள். நல்ல இருக்குங்க மலிக்கா..

  மிக்க நன்றி லெமூரியன்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது