நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எல்லாம் நன்மைக்கே


என்னை தினம்தினம்
உருமாற்றி படைக்கிறார்கள்
வண்ண வர்ண கலர் கொடுக்கிறார்கள்
என் வனப்பின் அழகில் மயங்கிய வானம்
நான் அழிந்துவிடுவது தெரியாமல்
சிலநேரம்
வான்மழையை பொழிந்துவிடுகிறது,

வருகிறவர்களை
வரவேற்க வாசலில்
விதவிதமாய் நிற்கிறேன்
வருகிறவர்களில் பலர்
என்னை மதிக்கிறார்கள்
அதில் சிலர்
என்னை மிதிக்கிறார்கள்



மிதிபடுப்போதெல்லாம்
மண் என்னை
அமைதிபடுத்தி ஆறுதல்சொல்லும்
இப்போது
மிதிப்பவர்கலெல்லாம்
ஒருநாள் உன்னை
மதித்து நிற்கும் நாள்வரும்

அந்த மனித வாழ்க்கை
ஒருமுறை பிறப்பதும்
ஒருமுறை இறப்பதும்தான்

ஆனால்

நீ,,,,,, இறந்து இறந்து பலமுறை
பலபலவிதங்களில் பிறக்கிறாய்
அதற்காக ஆனந்தப்படு
வாழ்க்கை என்பது
வேதனைகளும்
சோதனைகளும் நிறைந்தவையே

அதை ஏற்றுக்கொண்டு
நீனும் ஆனந்தம் அடைந்து
மற்றவர்களையும்
ஆனந்தப்படுத்துவதுதான்
நிறைவான வாழ்க்கையை தருமென்று.......



அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

19 கருத்துகள்:

  1. மிதிபடுப்போதெல்லாம் மண் என்னை
    அமைதிபடுத்தி ஆறுதல்சொல்லும்
    இப்போது மிதிப்பவர்கலெல்லாம் ஒருநாள்
    உன்னை மதித்து நிற்கும் நாள்வரும்

    அந்த மனித வாழ்க்கை ஒருமுறை பிறப்பதும்

    ஒருமுறை இறப்பதும்தான் -ஆனால்


    நீ,,,,,, இறந்து இறந்து பலமுறை
    பலபலவிதங்களில் பிறக்கிறாய்
    அதற்காக ஆனந்தப்படு வாழ்க்கை என்பது
    வேதனைகளும் சோசதைகளும் நிறைந்தவையே//

    உண்மையான வார்த்தைகள்

    பதிலளிநீக்கு
  2. கோலப் படம் மிக அழகு.கவிதையும்.

    பதிலளிநீக்கு
  3. மிக அழகுக்கோலம்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  4. கோலமும், அதற்கான கவிதையும் மிக அழகு மலிக்கா. கலக்குங்க நீங்க

    பதிலளிநீக்கு
  5. அழகாய்க் கவிக்கோலம்.நன்று.

    பதிலளிநீக்கு
  6. //அதை ஏற்றுக்கொண்டு நீனும் ஆனந்தம் அடைந்து
    மற்றவர்களையும் ஆனந்தப்படுத்துவதுதான்
    நிறைவான வாழ்க்கையை தரும் என்று.......//

    இது புரிந்தால் இலங்கைக் கொடுமைகள் நிறுத்தப் பட்டுவிடும்.....நல்லா இருக்கு.......

    பதிலளிநீக்கு
  7. Kolathai vaithu oru islamiyiya penkavingar eluthiya thathuvarthama kavithai rasikka vaithathu... Good!

    Trichy Syed

    பதிலளிநீக்கு
  8. Valkaiyin thathuvathai sollum alakiyal kavithai!

    Trichy Syed

    பதிலளிநீக்கு
  9. //அதை ஏற்றுக்கொண்டு நீனும் ஆனந்தம் அடைந்து
    மற்றவர்களையும் ஆனந்தப்படுத்துவதுதான்
    நிறைவான வாழ்க்கையை தரும் என்று.......//

    நீதி சொல்லும் கோலம்...கவிதையாய் அழகான புள்ளிகளோடு.

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்...கோலத்துக்கும் ஒரு கவிதை.
    ரசனை அதிகம் உங்களுக்கு மல்லிக்கா.அழகாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  11. கவிதையே கவிதையாய் அழகாக உள்ளது


    ( கோலம் இடுவது எதர்க்கு என்ற அடிப்படை ஊரும்பிரானிகலுக்கு உணவு இடவே)

    பதிலளிநீக்கு
  12. /உண்மையான வார்த்தைகள்/
    நன்றி வெண்ணிறவே கார்த்திக்.

    /அழகாய்க் கவிக்கோலம்.நன்று/
    நன்றி வானம்பாடிகள்.

    /நல்லா இருக்கு மலிக்கா/
    நன்றி சாருக்கா.

    பதிலளிநீக்கு
  13. /கோலப் படம் மிக அழகு.கவிதையும்.
    மிக்க நன்றி வேல்ஜி..


    /மிக அழகுக்கோலம்
    வாழ்த்துக்கள்
    விஜய்../
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ”கவிதைக்கள்” விஜய்
    தொடர்ந்துவாருங்கள்..

    பதிலளிநீக்கு
  14. /கோலமும், அதற்கான கவிதையும் மிக அழகு மலிக்கா. கலக்குங்க நீங்க//

    சொல்லிட்டீங்கல்ல கலக்கிடுவோம்.நவாஸண்ணா...


    //அதை ஏற்றுக்கொண்டு நீனும் ஆனந்தம் அடைந்து
    மற்றவர்களையும் ஆனந்தப்படுத்துவதுதான்
    நிறைவான வாழ்க்கையை தரும் என்று.......//

    இது புரிந்தால் இலங்கைக் கொடுமைகள் நிறுத்தப் பட்டுவிடும்.....நல்லா இருக்கு......./

    எவ்வகையிலாவது புரியட்டும் என்றுதான் எதிர்ப்பார்க்கிறோம், கொடுமைகள் நிறுத்தபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நம்புவோம்.. நன்றி புலிகேசி...

    பதிலளிநீக்கு
  15. /Kolathai vaithu oru islamiyiya penkavingar eluthiya thathuvarthama kavithai rasikka vaithathu... Good!/

    /Valkaiyin thathuvathai sollum alakiyal kavithai!/

    Trichy Syed.

    மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி மலர்வனமாய் மணம்பரப்பும் திருச்சி சையத்..

    /அழகா இருக்கு கோலக்கவிதை/

    நன்றி பிரியமான வசந்த்..

    பதிலளிநீக்கு
  16. /நீதி சொல்லும் கோலம்...கவிதையாய் அழகான புள்ளிகளோடு//

    மிக்க நன்றி பாலாஜி...


    கவிதையே கவிதையாய் அழகாக உள்ளது;

    மிக்க நன்றி ராஜவம்சம்..

    ( கோலம் இடுவது எதர்க்கு என்ற அடிப்படை ஊரும்பிரானிகலுக்கு உணவு இடவே)

    ஆமாம் ராஜவம்சம் அரிசிமாவுக்கோலம் போடுவதின் நோக்கமே ஊர்ந்து செல்லும் ஜீவராசிகளுக்காக என்று தோழிகள் சொல்லக்கேட்டு இருக்கேன்..

    பதிலளிநீக்கு
  17. /ம்ம்ம்...கோலத்துக்கும் ஒரு கவிதை.
    ரசனை அதிகம் உங்களுக்கு மல்லிக்கா.அழகாயிருக்கு//

    ரொம்ப சந்தோஷம் ஹேமா. ரசிக்கப்பழகிக்கொண்டால் அனைத்துமே கண்களுக்குள் நுழைந்து இதயதில் விழுந்து எண்ணத்தில் எழுத்துக்களாய் ஓடுகிறது கவிவடிக்கச்சொல்லி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது