நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பிள்ளைநிலா



ஒன்பதுமாதம் முக்குளித்து
வயிற்றுக்குள் உலவிய வெள்ளிநிலா
இடுப்புவலியை உண்டாக்கி
வெளியில் வந்தது பிள்ளைநிலா
வினோத சப்தங்கள் கேட்டிடவே
வீல்லென்று அழுதிட முகம் சிவந்திடுமே


மூடிய மலர்விழி முனுமுனுக்க
மெதுவாய் திறந்தது இமை இரண்டை
கருவறை இருள்கண்ட கறுவிழிகள்
உலகொளி பட்டதும் மூடியதே


கையும் காலையும் கட்டிக்கொண்டு
கர்ப்பபையிற்குள் இருந்த பிள்ளை
பிஞ்சிக்கால்கையை பிரித்துக்கொண்டு
விறித்து உதைத்து துள்ளியதே


கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு
நமட்டுச்சிரிப்பு சிரித்திடவே
நரியை விரட்டிச்சிரிக்கிறதாம் என்றுச்சொல்லி
நம்மையும் சிரிக்கவைத்திடுமே


நெற்றியை நுகர்ந்து பார்க்கையிலே
நாசியில் வாசம் ஏறிக்கொள்ளும்
மீண்டும் மீண்டும் அவ்வாசம்
நுகர்ந்து நுகர்ந்து பார்க்கத்தூண்டிடுமே


பசித்து குழந்தை அழுகையிலே
அள்ளியனைத்து அன்னை பால்தருவாள்
இதற்குமுன் தொப்புள் வழியே உண்டதற்கு
அதுஅறியாமல் முட்டிமோதிடுமே


பாலை அருந்திய மயக்கத்திலே
பச்சிளம் பிள்ளை உறங்கிடுமே
உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..




அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

25 கருத்துகள்:

  1. அறுமையான உணர்வுகள்

    பதிலளிநீக்கு
  2. //பசித்து குழந்தை அழுகையிலேஅள்ளியனைத்து அன்னை பால்தருவாள்இதற்குமுன் தொப்புள் வழியே உண்டதற்குஅதுஅறியாமல் முட்டிமோதிடுமேபாலை அருந்திய மயக்கத்திலேபச்சிளம் பிள்ளை உறங்கிடுமேஉறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டேஉறங்காமல் இருப்பது ஒரு சுகமே..//
    நானும் அம்மாவாக உணர்ந்தேன்

    பதிலளிநீக்கு
  3. //உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
    உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..//

    குழந்தையின் உறக்கம் உண்மையில் அழகானது. நிச்சயம் ரசிக்கப் பட வேண்டிய ஒன்று.நல்லா இருக்கு....

    பதிலளிநீக்கு
  4. பாலை அருந்திய மயக்கத்திலே
    பச்சிளம் பிள்ளை உறங்கிடுமே
    உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
    உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..

    அழகான வரிகள். கவிதை மொத்தமும் அழகு மலிக்கா

    பதிலளிநீக்கு
  5. தாயாய் உணர்ந்து எழுதிய வரிகள், எல்லா வரிகளும் அருமையா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. //ஒன்பதுமாதம் முக்குளித்து
    வயிற்றுக்குள் உலவிய வெள்ளிநிலா
    இடுப்புவலியை உண்டாக்கி
    வெளியில் வந்தது பிள்ளைநிலா
    வினோத சப்தங்கள் கேட்டிடவே
    வீல்லென்று அழுதிட முகம் சிவந்திடுமே//

    ஆரம்ப பத்தியிலேயே அழகாய் சொல்லிவிட்டீர்கள் தாய்மையின் உணர்வுகளை.

    இறுதியில் ‘உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
    உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..’ என்ற வரிகளை மிகவும் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
    உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..//

    நான் மிகவும் ரசித்த வரிகள்

    நான் மிகவும் ரசித்தகாட்சி

    பதிலளிநீக்கு
  8. / bxbybz கூறியது...
    அறுமையான உணர்வுகள்/

    முதல் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு
  9. //நானும் அம்மாவாக உணர்ந்தேன்//

    இந்தவரிகளைப்படித்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்,
    தாயுமானவராய் உணர்ந்ததற்கு நன்றி வெண்ணிறவே.

    பதிலளிநீக்கு
  10. //குழந்தையின் உறக்கம் உண்மையில் அழகானது. நிச்சயம் ரசிக்கப் பட வேண்டிய ஒன்று.நல்லா இருக்கு....//

    ரசிக்கப்படவேண்டியதில் முக்கியமானவைகளில் இதுவும் ஒன்று,
    கருத்துக்களுக்கு மிக்க நன்றி புலிகேசி..

    பதிலளிநீக்கு
  11. //அழகான வரிகள். கவிதை மொத்தமும் அழகு மலிக்கா//

    அழகான தாங்களின் கருத்துக்களுக்கும்
    மிக்க மகிழ்ச்சி நவாஸுதீன்.

    பதிலளிநீக்கு
  12. அருமை..

    ரைம்ஸ் மாதிரி எழுதினாத்தான் எனக்கெல்லாம் புரியுது.. ;)

    இன்னிக்கி பொறந்தநாளா?

    பதிலளிநீக்கு
  13. /ஷ‌ஃபிக்ஸ்/Suffix கூறியது...
    தாயாய் உணர்ந்து எழுதிய வரிகள், எல்லா வரிகளும் அருமையா இருக்கு./

    ரொம்ப சந்தோஷம் ஷஃபி

    பதிலளிநீக்கு
  14. /ஆரம்ப பத்தியிலேயே அழகாய் சொல்லிவிட்டீர்கள் தாய்மையின் உணர்வுகளை.

    இறுதியில் ‘உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
    உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..’ என்ற வரிகளை மிகவும் ரசிக்கிறேன்./

    ரசித்து படித்து கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி பாலாஜி.

    பதிலளிநீக்கு
  15. /நான் மிகவும் ரசித்த வரிகள்

    நான் மிகவும் ரசித்தகாட்சி/

    ரசித்த காட்சியை ரசித்து எழுதியமைக்கு மகிழ்ச்சி ராஜவம்சம்..

    பதிலளிநீக்கு
  16. //பிரியமுடன்...வசந்த் கூறியது...
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மலிக்கா//

    எப்படி வசந்த் [அண்ணா] இப்படி கண்டுப்பிடிச்சிட்டீங்க,

    பிரியமான வசந்துக்கு பாசமான நன்றி..

    பதிலளிநீக்கு
  17. /இன்னிக்கி பொறந்தநாளா?/
    ஆமாம் பீர், நேற்றுத்தான் பிறந்தேனாம்.


    //பீர் | Peer கூறியது...
    அருமை..
    ரைம்ஸ் மாதிரி எழுதினாத்தான் எனக்கெல்லாம் புரியுது.. ;)/

    உங்களைப்போல்சின்னப்புள்ளைங்களுக்கு தகுந்ததுபோல்தான் எழுதியிருக்கேன்..[ஹ ஹ]

    பதிலளிநீக்கு
  18. மல்லிக்கா,தாய்மையின் உணர்வு கவிதை முழுதும்.அருமை.

    பதிலளிநீக்கு
  19. //ஹேமா கூறியது...
    மல்லிக்கா,தாய்மையின் உணர்வு கவிதை முழுதும்.அருமை../

    மிகுந்த மகிழ்ச்சி ஹேமா.நன்றி..

    பதிலளிநீக்கு
  20. அன்பு தோழி தாய்மையின் சுகமான உணர்வுகள். இச்சுகாமான உணர்வு நம் பெண்ணினம் அனைத்தும் உனர
    இறைவன் துனை புரியாட்டும்.

    உறங்கும் மலழையை உற்று பார்த்து கொண்டிருப்பதே தனி சுகம் தோழி.நமக்கு இந்த பாக்கியத்தை தந்த இறைவனுக்கே புகலனைத்தும்.அல்லாஹ் அக்பர்.

    பதிலளிநீக்கு
  21. அன்பு தோழி மன்னிக்கவும்.மேலே உள்ள பதிவு என்னுடையதுதான் கனினி குழப்பத்தால் என் தவறு.

    பதிலளிநீக்கு
  22. அன்பு தோழி தாய்மையின் சுகமான உணர்வுகள். இச்சுகாமான உணர்வு நம் பெண்ணினம் அனைத்தும் உனர
    இறைவன் துனை புரியாட்டும்.

    அன்பு தோழி மன்னிக்கவும்.மேலே உள்ள பதிவு என்னுடையதுதான் கனினி குழப்பத்தால் என் தவறு..

    பிரச்சனையில்லை தோழி சிலசமயங்களில் இப்படியும் நடப்பதுண்டு..

    நிச்சயம் இறைவன் அனைவருக்கும் இச்சுகங்களை அனுபவிக்கும் வாயப்பைதந்தருள்வானாக,,
    மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றிதோழி..

    பதிலளிநீக்கு
  23. பாலை அருந்திய மயக்கத்திலே
    பச்சிளம் பிள்ளை உறங்கிடுமே
    உறக்கும் பிள்ளையைப்பார்த்துக்கொண்டே
    உறங்காமல் இருப்பது ஒரு சுகமே..

    Thayin thalattu mathiri sugamai irrunthathu...

    - Trichy Syed

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது