நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதல் செய்துபாருங்கள்


காதல் மிகப்புனிதமானது,
அதை விளையாடி வீணாக்கிவிடாதீர்கள்
சிறுவயதிலும்
சின்னப்பிள்ளைத்தனத்திலும்
செய்வது காதலல்ல

காதல் கடலைப்போன்றது
திருமணத்திற்குமுன்
செய்யும் காதல்
 கரையை மட்டும்
தொட்டு நிற்கவேண்டுமே தவிர,
அலைகளுடன் விளையாடினால்
சுனாமிபோல்
சுருட்டிகொண்டு போய்விடும்

திருமணத்திற்குப்பின்
வளரும் காதல் ...
பேரலைகளையும்
தொட்டுக் கூத்தாடினாலும்
அதனுள்
மூழ்கியபோதும்
முத்துடன்தான் வருவோமே
தவிர
மூச்சடைத்து விடமாட்டோம்

திருமணத்திற்குபின்
காதல் செய்துபாருங்கள்

அதனின் ஆழம் தெரியும்,
அதனின் அன்பு புரியும்,
அதனின் மதிப்பு தெரியும்

காதல் கண்ணியமானது
அதை
கலங்கப்படுத்தி விடாதீர்கள்!!
கணவருடன்
காதல்
செய்து பாருங்கள்,
காதலுடனே
வாழ்ந்துபாருங்கள்!!
நம்
வாழ்க்கைக்குப் பின்னும்
காதல் வாழும்!!


அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

4 கருத்துகள்:

 1. மலிக்காக்கா கல்யாணத்துக்கு பின்பு வரும் காதலே சுகமானது..
  அழகான கவிதை

  பதிலளிநீக்கு
 2. கவிதை மிகவும் நல்லா இருக்கு , என்னுடைய பிளாக்கில் உங்களூக்கு விருது வழங்கி இருக்கிறேன் . பெற்று கொள்ளவும் . பிளாக் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 3. அந்த சுகத்தை அனைவரும் வேண்டும் அதற்காத்தான் இக்கவிதை ஃபாயிஜா.
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. //கவிதை மிகவும் நல்லா இருக்கு , பிளாக் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு//

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் சாருக்கா
  தாங்களுடைய பின்னூட்டத்திற்கு.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது