நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மண்ணும் நானும்...

நீ என் ஆதிமூலம்
நான் உனது அங்க நாளம்

உன்னையன்றி
என் பயணம் போக
வேறு வழியில்லை

நீதானே
என் வாழ்க்கையின்
வரையறுத்த எல்லை

உன்மீது நான்போடும்
ஆட்டமெல்லாம்

என் ரத்தநாளங்கள்
அடங்குவரையே தொடரும்

உன்னைப்போலவே நானும்
பொறுமை காக்கிறேன்

பொறுக்க முடியா நிலையில்
சிதறி உடைகிறேன்

புன்னகையென்னும்
பூக்கள் பூக்கிறேன்

வாடும் நிலைதனில்
வதங்கி சிதைகிறேன்

பாச நீரூற்ற
படர்ந்து வாழ்கிறேன்

பாசம் வேசமாக
பட்டுப்போய் சாய்கிறேன்

..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

பெருமை...



தற்பெருமை கொள்ளல்
தனதான நாசம்
பெருமை கொள்ளல்
தனக்கான நேசம்

எல்லாமும் நலமோடு
ஏகயிறைவன் நம்மை
படைத்ததையெண்ணி
பெருமைப்பட்டுக்கொள்

ஏற்றத்தாழ்வு வாழ்வினில்
ஏதேனும் ஒன்று
ஏற்றமிருந்தாலும்
பெருமைப்பட்டுக்கொள்
 
புகழ்ச்சியற்ற    
புகழாரம் கிடைக்கும் தருணம்
புன்னகையோடு
பெருமைப்பட்டுக்கொள்

உன்னத அன்பு
உனைதேடி அடைந்தால்
உணர்வுகள் உருக
ஒரு சொட்டு கண்ணீர்விட்டு  பெருமைப்பட்டுக்கொள்

என்னால் மட்டுமே முடியுமென்ற
இறுமாப்பு கலைந்து
என்னாலும் முடியுமென்ற நம்பிக்கை  
உன்னக்குள்  உண்டெனில்     பெருமைப்பட்டுக்கொள்

யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள்
எளிதில் உன்னை வந்தடைந்தால்
உனது திறமை எண்ணி
உளமார    பெருமைபட்டுக்கொள்

கொஞ்சம் அழகோடு
நிறைந்த மனதோடு
விட்டுக்கொடுத்து வாழும்
வாழ்க்கைத்துணை அமைந்தால்
மனதார  பெருமைப்பட்டுக்கொள்
     
உப்பு புளி காரம் சேர்த்து
அழகுற சமைத்து
உன்னவர்  ருசித்துண்பதோடு
உனை பாராட்டும்போது
உள்ளுக்குள் தட்டிகொடுத்து
பெருமைபட்டுக்கொள்

பிறப்பை எண்ணி  
வாழ்வை எண்ணி
இயற்கையெண்ணி  
எல்லாத்தையும்விட
எல்லாமுமான நம்மை  படைத்ததை எண்ணி
படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டுக்கொள்

தற் பெருமைகொள்வதிலிருந்து
தவிர்ந்துகொள்

பெருமை படுவதில்
பெருமைபட்டுக்கொள்...

தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இந்திய விடுதலையில் சிந்திய குருதிகள்


.

சுதந்திரம் சுதந்திரம் என்றே பேச்சு
சுதந்திரத்திற்காக போனதே 
எங்கள் முன்னோர்களின் பல பல மூச்சு
செங்குருதிகள் அன்று ஆறா ஓடிச்சிச்சே- அதில்
சிதைந்த சிதையப்பட்ட உடல்கள் ஏராளமாச்சே

மூவர்ணத்தில் மூச்சுவிட்டு பறக்கும் தேசியக்கொடியே - எங்கள்
முன்னோர்கள் சிந்திய குருதிகளும் 
உங்கள் கம்பதிற்க்கு இன்றும் உரமாகுதே!

ஆங்கிலேய அடிமாட்டுத் தொழுவத்தில் 
அடகுவைக்கப்பட்ட அடிமைத்தனத்தை
ஆயிரமாயிரம் உயிர்பலிகொடுதல்லவா மீட்டுக்கொண்டோம்

இந்திய வீட்டுதோட்டத்து கனிகளுக்கு 
எங்கிருந்தோ வந்தவர்கள் விலைநிர்ணயிக்க
வாயில்லாப்பூச்சிகளாய் வக்கத்து நின்றதினை தகர்தெரிய
வாலெடுத்து விரட்டியல்லவா 
எங்கள் விலாசங்களை வாங்கிகொண்டோம்

அந்நியர்களை அப்புறப்படுத்தி 
அடிமைத்தனதிலிருந்து விடுதலைபெற
அனைவரோடிணைந்து அயராது பாடுபட்டபோதும்

எங்களின் சுதந்திர சரித்திரம் மட்டும்
இன்றளவும் மறைக்கப்பட்டும் மறுக்கபட்டும்
இந்திய மண்ணின் சுதந்திர வாசனையில்
இஸ்லாமியர்களின் குருதிகளின் வாடையும் 
இரண்டரவே கலந்திருக்கும்

இரட்டிப்புகள் செய்தாலும் 
இல்லையென்று மறுத்தாலும்
வீசும் காற்றிலது கலந்தே மணம் பரப்பும்

எதுவென்றபோதும் நாம் வென்றோம்
நம்மினம் வென்றோம், நம்மிடம் வென்றோம்
வாருங்கள் ஒன்றாய் இணைந்து நம்பாரதம் காப்போம் 
வந்தே மாதரம் என்போம்....

##முகநூலில் போட்டிக்கவிதை##


 https://m.facebook.com/photo.php?fbid=762736270429017&id=100000779522721&set=gm.1438304153124982&ref=bookmark

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது