நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஈத் பெருநாள் வாழ்த்துகள்



 அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாம் வல்ல ஏக இறைவன் ஒருவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின்மீதும் உண்டாகட்டுமாக!
உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய அன்புள்ளங்களுக்கும், ஈத் முபாரகென்னும் நோன்புபெருநாள் நல்வாழ்த்துகள்.


பர்ளான கடமைகளையும், நோன்பில் ஈமானோடும் உள்ளச்சத்தோடும் செய்த நல்அமல்களையும், நோன்புதான் முடிந்துவிட்டதே என்றெண்ணி,விட்டுவிடாமல்,இனி தொடர்ந்து செய்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெற்றிட முனைவோம், இன் ஷா அல்லாஹ்..
மீண்டும் அனைவருக்கும்
அன்புடன் மலிக்காவின்
அன்பான ஈத் முபாரக்..
========================================

 அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

தோல்வி!..




தோல்வியின் கைகளில்
வெற்றியின் மாலை
தோல்வியை கைகுலுக்கியே
வெற்றிமாலை தோளைத்தொடும்

தோல்வியின் இலையை
மென்றபின்பே
வெற்றி”லை”யின் சார்
உள்ளிறங்கும்

முயற்சியின் முனையில்
வெற்றிக்கனி அதனிடையே
தோல்வியின் தழுவல்கள்

தழுவலின் பிடியில்
நழுவி நழுவி
வெற்றியின் முனையை
கைப்பற்றும் கைகள்

தோல்வியென
துவண்டு கிடந்தால்
துளிர்விடுவது எப்போது?
துணிந்தபின்
தோல்விகள் தவிடாகும்
தவிடே
வெற்றியின் உணவாகும்

பல வெற்றிகளுக்கு முன்பே
பலபல தோல்விகள்
தொட்டும் தழுவியுமிருக்கும்
தோல்விகண்ட வெற்றியே
தெளிவையும் துணிவையும் தரும்

வெற்றியை வென்றிட
தோல்வியிடம் தோற்றுபோ
இல்லையேல்
தோல்வியை தோற்கடி!....

கவிதை வயலுக்காக விளைந்த கவிதையிது
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

'வாழ்க்கையும் குறிக்கோளும்''



மனிதா!
எத்தனையோ கேள்விக் கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!

இச்சையின்பத்தால்
இரண்டரகலந்ததில்
இவ்வுலகத்தை
இருகண்கொண்டு கண்டவன் நீ
இளக்கர தோரணையோடு
இவ்வுலகில் வலம்வருகிறாய்!

நீ வரும்போது
அழுகையைத் தவிர
ஏதுமில்லை
உன்னிடத்தில்
அதையும்
நீ போகும்போது
பிறரிடம் கொடுத்துசெல்பவன்
இருந்துமேனோ
இருமாப்புடன் வாழ்கிறாய்!


ஆகாசமும் பூமியும்
உனக்காக
படைக்கப்படத்துதான் என்ற
ஆணவத்தில்
அலைபவனாக திரிகிறாய்
ஆகாதென தெரிந்தும்
அமிலத்தை
அறுஞ்சுவையென நினைக்கிறாய்!

ஐபூதங்களின்
ஆதரவில் வாழ்பவன் நீ
ஐந்தில் ஒன்றை இழந்தாலும்
ஆட்டம் கொள்ளும் உனதுடலுயிர்
அப்படியிருந்தும்
அனாச்சாரபிடியில் சிக்கி
அழிவை நோக்கி நகர்கிறாய்!


உனக்கு தரப்பட்டிருக்கும்
காலகெடு முடியும்வரைதான்
உனதாட்டம் இப்பூமியில்
காலக்கெடுக்கு கணக்கு வழக்கில்லை
காலவெதியான உயிர்களுக்கு
இப்பூமியில் இடமில்லை
இவையறிந்துமேனோ
இச்சைகளின் பின்னே
அட்டைகள்போல்
ஒட்டிக்கொண்டலைகிறாய்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரை
பாவங்களால் நிரம்பியிருப்பவன் நீ
பாவங்களை பெருக்குவதிலிருந்து
உன்னை விலக்குவதில்லையென
விடாபிடியாகயிருக்கிறாய் ! 

ஒருதுளி நீரால்
உருவாகியவன் நீ
ஒவ்வொரு தீங்குகளையும்
நீர் தெளித்து வளர்கிறாய்
குறிகோள்கள் ஏதுமற்று
குட்டியச் சுவராகவே
வாழ்ந்து கெடுகிறாய்
மரணம்வரும்வரை
மதியிழக்கிறாய்
மரணவேளையில்
மனதால் மடிந்தழுகிறாய்!

மனிதா!
எத்தனையோ கேள்விக்கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!
==================================

கவிதை வயலின் 100 வது கவிதையிது. நன்றி றாஃபி.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது