நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்


எல்லாம்வல்ல இறையோனே!
எங்களைக்காக்கும் ரஹ்மானே!

மண்ணால் ஆதம் நபியைப்படைத்து
அவருக்குள்ளிருந்து இவ்வுலகிலுள்ள
அனைத்து மனிதர்களையும் வெளிப்படுத்தி

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறுகாலங்களில் வெவ்வேறு
மாநபிகளை மக்களுக்குத்தந்து அவர்களின்மூலம்
அனைவருக்கும் அறிவுறைகளையும்தந்தாய்

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராகீம் [அலைஹிஸ்ஸலாம்]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை அறியவைத்து
மனிதர்களின் பொருமைக்கும் இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத்தந்து
மகத்துவமிக்க மாபெரும் அருளாளன் ஆனாய்

இப்ராகீம்நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும்நாள்வரை
இம்மியளவும் இம்மக்கள் மறந்திடாதவாறு
இத்தியாகத்திருநாளாம்
ஹஜ்ஜுப்பெருநாளை எங்களுக்குத் தந்தாய்

புனித இடத்திற்கு இறுதிக்கடமைக்கு
சென்றுள்ள மக்கள் சரம்சரமாய் கண்ணீர்மல்க
எங்களின் ஹல்பும் உருக எங்களுக்கும்
புனிதபயணத்திற்கு ஒருவாய்ப்பளிக்கச்சொல்லி
விசும்பி வேண்டி நிற்கிறோம் எங்கள் இறைவா!

இப்பெருநாளின் பொருட்டாய் இவ்வுலகிலுள்ள அனைத்து உள்ளங்களிலும் சாந்தியும் சமாதானமும் இறைவனின் அருளும் உண்டாவதாக!
உலகிலுள்ள அனைவருக்கும்
 தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

அடிப்பெண்ணே


சித்திரைப்பெண்ணே, உன்சினத்தால் வாழ்வை சீரழித்துவிடாதே

வைகாசி பெண்ணே உன்வரம்புமீறிய வார்த்தையால் வாழ்வை
வதைத்துக்கொள்ளாதே.


ஆணிபெண்ணே, உன்ஆதாரமில்லாத ஆத்திரத்தால் வாழ்வை அழித்துவிடாதே.

ஆடிப்பெண்ணே, உன்அளவுக்குமீறிய ஆட்டத்தால் வாழ்வை அஸ்தமனம்மில்லாமல் ஆக்கிக்கொள்ளாதே.

ஆவணிப்பெண்ணே, உன்ஆணவத்தால் வாழ்வை அலங்கோலம் ஆக்கிவிடாதே.

புரட்டாசிப்பெண்ணே, உன்பொல்லாதாத குணத்தால் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ளாதே

ஐப்பசிப்பெண்ணே, உன்ஐயத்தைமீறி அதிகாரம் செய்யாதே

கார்த்திகைப்பெண்ணே, உன்கற்புக்கு கலங்கதை கற்பித்துவிடாதே

மார்கழிப்பெண்ணே, உன்மனம்போனபோக்கில் வாழ்வை நடத்திவிடாதே

தைப்பெண்ணே, உன்தவறினால் வாழ்க்கையை தவறவிட்டுவிடாதே

மாசிப்பெண்ணே, உன்மரபுகளை மறந்துவிட்டு வாழ்ந்துவிடாதே

பங்குனிப்பெண்ணே, உன்பண்பான குணத்தால் மற்றவைகளை தவிர்ந்து
பவித்ரமானதாய் உன்வாழ்வை பளிச்சென்று ஆக்கிக்கொள்.......

[டிஸ்கி] பெண் என்ற இடத்தில் ஆணென்றும் போட்டுக்கொள்ளலாம்.
எப்படி ஒரே கல்லில்.......]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

இனிய நடை

பச்சைப்பசேலென்ற
புல்வெளி அதன்மேல்
பச் பச்சென இச்சிட்டபடி
பதிந்தன கால்கள்

புல்வெளிமேல்
படுத்திருந்த பனித்துளிகள்
பதிந்து பதிந்து
சென்ற கால்களை
கிச்சுகிச்சு மூட்ட

இரவு வானத்தில்
விழித்திருந்த வெண்ணிலா
இவளின்
இன்முகத்தைக் கண்ணடித்திட
இரைந்து கிடந்த
நட்சத்திரத்தின் ஒளியை
இமைக்காமல்
இவளும் ரசித்திட

அமைதியான இரவுக்குள்
ஆவாரம்பூவின் வாசம்
அதோடு  சில்லென்றெக்
காற்று கன்னத்தைஉரச

அந்நேரம்பார்த்து
தொலைப்பேசியும் சினுங்கிட
அன்புச்செல்லத்தின்
அழைப்பும் வந்திட
அத்திப்பூப்போன்று
அதரத்திலொன்று தந்திட

ரசிக்கவைத்து
மனம்
இனிக்கவைத்த
புல்வெளிக்கும் பனித்துளிக்கும்
வெண்ணிலாவுக்கும் நட்ச்சத்திரத்திற்கும்
ஆவாரம்பூவுக்கும் தொலைப்பேசிக்கும்

பிரிய மனமில்லாமல்
பிரியா விடை சொல்லியபடியே
பாவையவள்  மெல்லநடந்தாள்
தன் மனமுழுதும் மகிழ்வாய்....





அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது