நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பணமா -பாசமா


பணம் பணம் பணம் -இதுவே
தினமும் மனிதன் ஓதும் மாயமந்திரம்
பணம் இல்லையேல் அவன் பிணம் -இது
பழமொழிக்காக சொல்லித்திறியும்
சாத்தான் வேதம்

ஓட்டம் ஓட்டம் வாழ்க்கை முழுவதும்
ஓயாதஓட்டம்
பணத்தை தேடியே வாழ்வை தொலைக்க
வரிந்துகட்டிகொண்டு ஓட்டம்
பணத்தை குவித்ததும் பாசத்தைத்தொலைக்கும்
சில பச்சோந்திகளின் கூட்டம்

பாசங்கள் கூட பணத்தின்முன்னே
பணிந்துபோகும் அவலம்
பணத்திற்காக பாசத்தைக்கூட
தவிர்த்துக்கொள்ளும் இன்றைய காலம்

பணம்வரும் முன்னே மனம் நிறைந்தஅமைதி
பணம்வந்த பின்னே தொலையும் மனநிம்மதி
பணத்தின் முன்னே பாசம் சரணாகதி
பணம் வந்தபின்னே பாசம் கசந்துபோவதோ விதி

இறைவன் பணத்தை படைத்திருந்தால்
இதயம் வைத்திருப்பான்- அதில்
இரக்கத்தையும் இணைத்திருப்பான்
இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான்
இதயத்தை இணைக்க தவறிவிட்டான் -அதில்
இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான்.

காகிதபணத்திற்கு

ஏழைகளில் கதறல் கேட்குமா?
மனிதர்களின் பாசம்தான் புரியுமா?

மனிதர்களுக்கு பணம் அவசியம்
அதைவிட பாசம் முக்கியம்
பணம் நம்மைவிட்டுப்போனால்
திரும்பவந்துவிடும் -ஆனால்
பாசம் விட்டுப்போனால்! அதிலுள்ள
மனமல்லவா நம்மைவிட்டுப்போகும்

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே என்ற
பழமொழியை மாற்றி
பாசம் மனதின் மத்தியிலே

பணம் அதற்கு பக்கத்திலே
என்ற புதுமொழியை உருவாக்கு

பணத்தையும் பாசத்தையும் இணைத்து
பவித்திரமான மனிதனாய் வாழ்ந்துபார்
தன்னை உணர்வதோடு

பிறறையும் உணரும்போது
பிறந்ததிற்கான பலனை

இப்புவியிலேயே
அடைவதை தெளிவாய் உணர்வாய்...


[தமிழ்தேர் இதழுக்காக எழுதி இம்மாதம் வெளியான கவிதை .
அம்மாடியோ இன்றுஒருவழியா மைக்கைப்பிடித்து தத்துபித்துன்னு கவிதையையும் படிச்சாச்சி]

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்


மின்மினியே


மின்மினிபூச்சிகளே

மின்னட்டாம் பூச்சிகளே
என் வீடுதேடி வாருங்கள்

உங்களின்மேல் மிளிரும்

ஒளிவிளக்கைக்கொண்டு
நான் மின்சாரத்தை

உபயோகிக்கவேண்டும்
முடிந்தால் சேமிக்க வேண்டும்

என்வீட்டில் உங்களுக்காக
கூடுகட்டிவைத்துள்ளேன்
கூட்டம் கூட்டமாக வாருங்கள்
கூடி வெளிச்சம் தாருங்கள்

[பின் குறிப்பு]
இப்போதல்ல நான் நம்மநாட்டுக்கு வரும்போது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்னெவென்று சொல்வதம்மா



விழிப்பார்வைகள்
மோதிக்கொண்டதில்லை
மொழிச்சொற்கள்
விருந்துவைத்ததில்லை
கால்கள் பின்னியபடி
நிழலைத்தொடர்ந்து நடந்ததில்லை
கைவிரல்கள்
காதல் ஸ்பரிசம் அடைந்ததில்லை

ஆனபோதும்

விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
விழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன

விரல்மொழிகள்
பகிர்ந்தபோது மெளனமும்
எழுத்துமொழிகள்
மெளனமானபோது பகிரவும்
உள்ளம் கற்றுக்கொண்டன

உதட்டு இதழ்கள்
மூடியிருந்தபோது
உயிர்தேனை உறிஞ்சியதெப்படி
உள்ளது உள்ளபடி
உள்ளம் உருகுதடி

உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை

ஆனபோதும்

மனமெல்லாம்
மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம்
நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக
புறப்படும் என்புன்னகைகள்

ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னவென்று
எனக்குசொல்லத் தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம்
நீ
எழுதும் எழுத்துக்களைகண்டு
 என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணினித்தோழியே
உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது எ
ன்னஏதுவென்று -உன்
கணினியின் கண்கள்வழியே
கவிதை ஒன்றுசொல்லடி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது