நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மின்மினியே


மின்மினிபூச்சிகளே

மின்னட்டாம் பூச்சிகளே
என் வீடுதேடி வாருங்கள்

உங்களின்மேல் மிளிரும்

ஒளிவிளக்கைக்கொண்டு
நான் மின்சாரத்தை

உபயோகிக்கவேண்டும்
முடிந்தால் சேமிக்க வேண்டும்

என்வீட்டில் உங்களுக்காக
கூடுகட்டிவைத்துள்ளேன்
கூட்டம் கூட்டமாக வாருங்கள்
கூடி வெளிச்சம் தாருங்கள்

[பின் குறிப்பு]
இப்போதல்ல நான் நம்மநாட்டுக்கு வரும்போது]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

என்னெவென்று சொல்வதம்மா



விழிப்பார்வைகள்
மோதிக்கொண்டதில்லை
மொழிச்சொற்கள்
விருந்துவைத்ததில்லை
கால்கள் பின்னியபடி
நிழலைத்தொடர்ந்து நடந்ததில்லை
கைவிரல்கள்
காதல் ஸ்பரிசம் அடைந்ததில்லை

ஆனபோதும்

விழிதிறதிருந்தால் யோசிக்கவும்
விழிமூடியிருந்தால் நேசிக்கவும்
விழிகள் கற்றுக்கொண்டன

விரல்மொழிகள்
பகிர்ந்தபோது மெளனமும்
எழுத்துமொழிகள்
மெளனமானபோது பகிரவும்
உள்ளம் கற்றுக்கொண்டன

உதட்டு இதழ்கள்
மூடியிருந்தபோது
உயிர்தேனை உறிஞ்சியதெப்படி
உள்ளது உள்ளபடி
உள்ளம் உருகுதடி

உருவத்தை கண்டதில்லை
ஒருவார்த்தை பேசியதில்லை
கணிணிகீபோர்டில் கைவிரல்கள்
காதல்கதை சொன்னதில்லை

ஆனபோதும்

மனமெல்லாம்
மகிழம்பூவின் வாசனைகள்
நினைவெல்லாம்
நீந்தித்தழுவும் திரவியங்கள்
புத்தம்புது பூக்களாக
புறப்படும் என்புன்னகைகள்

ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்கிறது
என்னவென்று
எனக்குசொல்லத் தெரியவில்லையடி
கணிணிமுகத்தின்மூலம்
நீ
எழுதும் எழுத்துக்களைகண்டு
 என்எண்ணங்கள் சிதறியதடி

இமைமூடாமல் காத்திருப்பேன் நானடி
என்கணினித்தோழியே
உன்மனதைக்கேட்டுச்சொல்லடி
எனக்குள் வந்திருப்பது எ
ன்னஏதுவென்று -உன்
கணினியின் கண்கள்வழியே
கவிதை ஒன்றுசொல்லடி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

காதல் கோட்டை


அடி வான தேவதையே
என் ஆசைக்காதலியே

உனக்குள் நான்வந்து புகுந்ததை அறிவாயா
உன்மேகமூட்டத்துக்குள் என்மூச்சுக்காற்றை உணர்ந்தாயா

ஆணுக்குள் பெண்வந்தால் அவன்அந்தரத்தில் பறப்பானாம்
அடிஉனக்குள் நான்வந்ததும் ஆகாசத்தில் மிதக்கிறேனடி

உன்வட்டநிலாக் கண்ணத்தை தொட்டுவிடத்துடிக்கிறேன் -அது
முடியாமல் போகவே தினம் தினம் தவிக்கின்றேன்

விமானமானநான் வானமான உன்னுள்வரும்போது
என்னுள் இருப்பவர்களுக்கு நமக்குள் நடக்கும்

காதல் நாடகம் எதுவுமே தெரியாது
நம்மிருவருள்ளும் துடிக்கும்துடிப்பு எவருக்கும்புரியாது


கீழிலிருந்து நம்மை பார்ப்பவர்களெல்லாம் -ஏதோ
நான்உன்னை உரசிச்செல்வதாய் உரக்கப்பேசுகிறார்கள்

அவர்களுக்கு தெரியாதடி நமக்குள் இருக்கும்இடைவெளி
இருந்தபோதும் நமக்குள் என்றும்உண்டு அன்பொளி

பல பல காதல்களை பூலோகம்கண்டிருக்கும் -ஆனால்
இதுபோன்றொரு காதலை இந்தவிண்ணுலகம் கண்டதுண்டா

உலகம் அழியும்வரை உன்னுடன்மட்டும்தான்

என்காதல் வாழ்க்கை
என் வாழ்க்கை உள்ளவரை இந்தவானம்தான்

என்காதல் கோட்டை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது