நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாவம்!

இச்சையின்பத்தின்
இறுதி அத்தியாத்தில்
எழுதப்பட்டதே
இம்மனித வாழ்வின்
முதல் அத்தியாயம்

கலவிக் கூடலில்
கழிவின் எச்சலில்
உருவானபோதும்
படைப்பினங்களின் சிறந்தவனாக 
கவுரவப்படுத்தப்பட்டும்
மனிதயினத்தின்
செயலத்தனைத்தும்
முன்னுக்கு பின்னே
முரண்கொண்டபடியே!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
மனிதயினம்
படைத்தவனே அறிவான்
படைப்பினங்களின்
உள்ரங்க அந்தரங்கம்

தான் செய்வது நீதி
பிறர்செய்வது சதியென்றே
பறையடித்து திரிகிறது
படைப்பினங்கள்
பாவம்! 
பாவப்பட்டவர்கள் 
தாம் தான்னென்று
அறிந்தும் அறியாமலே!
பாவக்கறைகளை நீக்க
வழிதெரிந்தும் தெரியாமலே!

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

புறக்கணிப்பு



அன்றைய இரண்டாம் ஜாமத்து
கலக்கத்திலிருந்து
மீளமுடியாமலிருந்த
காலத்தையெண்ணியுருக்கும்

முற்காலத்து உணர்வுகளையும்
பின்னுக்குதள்ளும்
புறக்கணிப்பு
முட்டுக் கால்களுக்குள்
முகம் புதைக்கவைத்து!

பிற்காலத்தின் பிரதிபலிப்பு
தற்காலத்தில் நிகழ்த்திக்காட்டி
அலட்சிய வெளிகளுக்குள்
சிக்குண்டுகிடந்திடும்
அதிகார தோரணைகளை!

அடக்கத் தெரியாமல்
அடங்கிட முடியாமல்
அள்ளி ஏந்திய வண்ணமாய்
அறையப்பட்ட ஆணியாகி
ஆடாமல் அசையாமல்!

மனமுடைந்த மெளனமாய்
உள்ளக்கூட்டுள்குள்ளே கதறி
அதிகார வெளியினை
ஊடருக்க எண்ணும்
உணர்வுகளை உள்ளடக்கி!

அறுந்துகிடக்கும் நெஞ்சத்தினை
உமிழ்நீர்கொண்டு
ஆறுதலளித்தபடி
புறக்கணிப்பின் உச்சத்தை
புறக்கணித்தபடி!

ஊர் உலகப் பார்வைக்கு
உசத்தியாய் வேசமிட்டபடி
உலாவரும் சில நிலாக்கள்
நிலாக்காயும் சில புறாக்கள்.


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!



துணையிருக்கிறான்
இறைவன்
தொடர்ந்து எழுத!
துணையாய் இருக்கிறா[ர்]ன்
கணவன்
துணிந்து எழுத!

இருவரின்
ஆத்மார்த்த துணையால்
எனக்குள் எழும்
எண்ணங்கள்
எழுத்துகளாகிறது!

உள்ளன்புகளோடு
உரிமைகள்கொண்ட
கருத்துகளை பகிரும்
உங்களை அனைவர்களாலும்
உணர்வுகள் இன்னும்
ஊற்றெடுக்கச் செய்கிறது!

ஒன்றில் தொடங்கி
இதோ
ஐனூற்றி இருபத்தைந்தாவது
பதிவாக
நீரோடையில் மட்டும்!

நெஞ்சம் நிறைந்த
நன்றிகளை
அன்பான உள்ளத்தோடும்
ஆனந்தக் கண்ணீரோடும்
இறைவனுக்கும்
இங்குவந்து செல்லும்
அனைவருக்கும் சொல்லிக்கொள்கிறேன்..
--------------------------------------------------

என்றும் நன்றிகளோடு
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது