நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கோடைகுளிருமா? -வாடை வருடுமா?


வாழ்வைத்தேடி
வயல்வரப்புகளை விற்று
வந்த நாங்கள்
வறுமையைபோக்க
வாலிபத்தை தொலைத்து
வீடுதிரும்பும்போது
வயோதிகத்தையும் வியாதியையும்
கொண்டுசெல்லும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!



கோடைவெயில்
கொடூரமாய் கொழுந்துவிட்டு எரிய
அதன்
கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி-
குளிர்காயும்
கோடீஸ்வரர்களுக்காக
கட்டிடம் கட்டும் எங்களுக்கு
கோடையென்ன வாடையென்ன!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கானல்நீர் கரைபுரண்டு ஓட
உச்சிமுதல் பாதம்வரை
உதிரம் வியர்வைகளாய் நனைய
சாலையின் இருபுறத்திலும்
புல்வெட்டி களையெடுத்து
பூச்செடிகள் நடும் எங்களுக்கு
 கோடையென்ன! வாடையென்ன!



அதிகாலை குளிரில்
நாடியெல்லாம் நடுநடுங்கி
நரம்புகள் விறைத்துக்கொள்ள
சாலைகளை சுத்தப்படுத்தி
அடுத்தவர்களின் அசிங்கங்களை
அப்புறப்படுத்தும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!



வாடைக்காற்று வதைப்படுத்த
வாதநோய் வருத்தப்படுத்த
எங்களின்
கஷ்டங்களை தீர்க்க
குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு
பிளாஸ்டிக் தனியே
 தகரடின் தனியேயென
பிரித்தெடுக்கும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!



பாலைவமணலிலே!
புழுதிபறக்கும் அனலிலும்
உறையவைக்கும் குளிரிலும்
ஒட்டகத்தோடு
ஒன்றிவாழும் எங்களுக்கு
கோடையென்ன! வாடையென்ன!

நாங்களும் காத்திருக்கிறோம்
நன்னாளை  எதிர்பார்த்திருக்கிறோம்!!!

கோடை என்றாவது
குளிருமென்றும்,
வாடை என்றாவது
வருடுமென்றும்,,,,,,,,,


அன்புடன் மலிக்கா

[இந்த கவிதை,தமிழ்தேர் இதழுக்கு எழுதி வெளியாகிய கவிதை..
இந்த கவிதை உலகெங்கும் உழைத்து உலன்றுபோகும்
உழைப்பாள தொழிலாளர்களுடைய வேதனைகளின் வலிகளை
என் வரிகளின்மூலம் வெளிப்படுதிருக்கிறேன்.
முதன்முதலாய் நான் மேடையேறி வாசித்த இக்கவிதைக்கு எழுந்த கைத்தட்டல்
இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது

காதல் செய்துபாருங்கள்


காதல் மிகப்புனிதமானது,
அதை விளையாடி வீணாக்கிவிடாதீர்கள்
சிறுவயதிலும்
சின்னப்பிள்ளைத்தனத்திலும்
செய்வது காதலல்ல

காதல் கடலைப்போன்றது
திருமணத்திற்குமுன்
செய்யும் காதல்
 கரையை மட்டும்
தொட்டு நிற்கவேண்டுமே தவிர,
அலைகளுடன் விளையாடினால்
சுனாமிபோல்
சுருட்டிகொண்டு போய்விடும்

திருமணத்திற்குப்பின்
வளரும் காதல் ...
பேரலைகளையும்
தொட்டுக் கூத்தாடினாலும்
அதனுள்
மூழ்கியபோதும்
முத்துடன்தான் வருவோமே
தவிர
மூச்சடைத்து விடமாட்டோம்

திருமணத்திற்குபின்
காதல் செய்துபாருங்கள்

அதனின் ஆழம் தெரியும்,
அதனின் அன்பு புரியும்,
அதனின் மதிப்பு தெரியும்

காதல் கண்ணியமானது
அதை
கலங்கப்படுத்தி விடாதீர்கள்!!
கணவருடன்
காதல்
செய்து பாருங்கள்,
காதலுடனே
வாழ்ந்துபாருங்கள்!!
நம்
வாழ்க்கைக்குப் பின்னும்
காதல் வாழும்!!


அன்புடன்மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

தடயம் தேடி


காலமெல்லாம்
கூடவே இருப்பேனென்று
சொன்னவள்
நான்கைந்து மாதமாக
காணவில்லை
என்
கண்களுக்குள் கலக்கம்
மனதுக்குள் நடுக்கம்

காற்றோடு
மனம்புழுக்கம்தீர
கடற்கரையில் அவள்
காலடித்தடமாவது
தேடலாமென்று
கடல்கறை சென்றேன்


கூத்தடித்த மணல்களெல்லாம்
இப்போது கைகொட்டி
சிரித்ததுபோல் உணர்ந்தேன்

மனம் வலிக்க
வழிநெடுக நடந்தேன்
வெகுநேர நடைக்குப்பின்
என் கண்களுக்குள்
நெருஞ்சிமுள்ளின்
வலியை உணந்தேன்

அதோ என்னவள்

வேறு ஒருவனின்
கைகளை பிடித்தபடி
மஞ்சள்தாலி
கழுத்தில் சுமந்தபடி
வகுடு குங்குமம்வைத்தபடி
அந்த மற்றொருவன்
மல்லிகையை
இவள் தலையில் சூட்டியபடி

அதைக் கண்ட
மறுகணமே
என் கண்கள் இருண்டதடி
கால்கள் தள்ளாடியதடி
மண்ணுக்குள் 
கால்களை புதைத்தபடி
என் மனதையும்
சேர்த்து புதைத்தேனடி

உன் கால்தடயமாவது
கிடைக்குமென
தேடி வந்தேன்
வந்த
இடத்தில்தான் தெரிந்தது -
நீ தடயமே
இல்லாமல் தெளிவாய்
இருப்பது,

உன்னால் குழம்பியவன்
இப்போது
முகங் குப்புர விழுந்தழுதேன்
மீண்டும்
மணல்கள் என்னைக் கண்டு
வாய்விட்டு சிரித்தது
இப்போது
உணரவில்லை
உண்மையாலுமே...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது