
கவலைகளை
மனச்சிறையில் அடைத்து வைக்காதே
அது செல்லாக மாறி
உன்னையே அரித்துவிடும் அழித்துவிடும்
கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
அது வந்தேதீரும்
வருத்தம்வந்துவிட்டதே! என
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா
எல்லாவற்றையும் எதிர்பார்த்து
வாழ்வதே
வாழ்க்கையென்றாகிவிட்டதால்
எதையுமே
ஓர் வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்
கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை நீரென்று
நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்
கவலை கவலை என
உனக்கு நீயே ஏன்
வலை பின்னிக்கொள்கிறாய்
கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு
கவலைகளா அதை கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு அல்லது
கவலையை கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்