நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மரணம்


மரணம்

அது இல்லாதுபோனால்
என்னவாகும் உலகம்
ஜனனமே தொடர்ந்தால்
பூமியே மூச்சிமுட்டிப்போகும்

மரணம்
பிறப்பிற்கான சான்றிதழ்
பாவபாதையின் தடைக்கல்

மரணம்
இவ்வுலக வாழ்வின் சம்பளம்
மறுவுலக வாழ்வின் முன்பணம்

மரணம்
விதவையின் விரோதி
வெள்ளைச்சேலையின் நண்பன்

மரணம்
நல்லவைகளால் கமழும் "மணம்"
தீயவைகளால் உருகும் மனம்

மரணம்
தேடிப்போவது "ரணம்"
தேடிவருவது சுகம்

மரணம்
அடைந்தபோது உடலாகும் "மரம்"
அதை காணும்போது
அச்சத்தால் உள்ளம் அஞ்சிநடுங்கும்

மரணம்
அடைந்தவருக்கு கிடைத்திடும்
சாந்தி
வாரிகொடுத்தவருக்கு தொலையும்
மனநிம்மதி

மரணம்
நான்குவகை பரிமாணம்
[ஜனனம் இன்பம் துன்பம் மரணம்]
நான்கு தோள்களின் பயணம்
[இறுதி ஊர்வலம்]

மரணம்
உலகுக்கு திரும்பமுடியாத
ஒற்றையடிபாதை
இதை உணர்ந்தால் தெளிந்திடும்
உலகபோதை

மரணம்
நான்கெழுத்தின் கவிதை
விவரிக்கமுடியாத சரிதை
மனம் கசிந்துருகும் அழுகை

மரணம்
வருமுன் காப்போம் மனதை
தவிர்த்துக்கொள்வோம் தீயதை
தொடர்ந்து செய்வோம் நல்லதை........

மணம், ரணம், மரம், மரணம்!!


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

9 கருத்துகள்:

  1. அனைவரும் ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டிய நிகழ்வு!! ம்ம்ம்ம் Warning கொடுத்து இருக்கீங்க. நினைவில் வச்சுக்குறோமுங்க.

    பதிலளிநீக்கு
  2. ஒரு வழிப்பாதையில் விடையில்லாப் பயணம்.எல்லா வரிச் சிந்தனைகளுமே யோசிக்க வைக்கிறது மல்லிக்கா.

    பதிலளிநீக்கு
  3. //மரணம்
    விதவையின் விரோதி
    வெள்ளைச்சேலையின் நண்பன்//

    அர்த்தங்கள் பொதிந்த வரிகள்....வலியின் அடையாளமாய்...

    மிக நன்று...தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  4. [ஷஃபி உங்களின் ஒருவன் சரியாய் பொருந்தும்]
    என் படைப்புகளுக்கு முதலில்வந்து கருத்துக்கள்தந்து ஊக்கம்கொடுக்கும்
    ஷஃபிக்கு என் மனமார்ந்த நன்றி.

    //அனைவரும் ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டிய நிகழ்வு!! ம்ம்ம்ம் Warning கொடுத்து இருக்கீங்க. நினைவில் வச்சுக்குறோமுங்க//

    நாம் அனைவரும்
    நினைவில் வச்சிக்கோனுமுங்க
    நிச்சியமாக நிகழப்போவதை..

    பதிலளிநீக்கு
  5. மரணச்சிந்தனையை நினைவுப்படுத்தியுள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  6. //ஒரு வழிப்பாதையில் விடையில்லாப் பயணம்.எல்லா வரிச் சிந்தனைகளுமே யோசிக்க வைக்கிறது மல்லிக்கா//

    ஹேமா என்மலையாத்தோழியும் ஹேமா,எனக்கு ரொம்பபிடிக்கும்

    தாங்களின் உணர்வுக்கவிதைகளை
    என்னை சிலநேரம் கலங்கக்கூடவைத்திருக்கிறது
    மனம் அமைதியைத்தேடும்போது
    அடுக்கடுக்காய் வந்துவிழும் கவித்துளிகள்.

    தாங்களின்கருத்துக்களுக்கு மிகுந்த சந்தோஷம் அடிக்கடி வாங்க

    பதிலளிநீக்கு
  7. //அர்த்தங்கள் பொதிந்த வரிகள்....வலியின் அடையாளமாய்...
    மிக நன்று...தொடருங்கள்//

    பாலாஜியின் முதல் வருகைக்கு முதலில் நன்றி
    தாங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தொடர்ந்துவாருங்கள் கருத்துக்கள் தாருங்கள்

    //மரணம்
    விதவையின் விரோதி
    வெள்ளைச்சேலையின் நண்பன்//

    அர்த்தங்கள் பொதிந்த வரிகள்....வலியின் அடையாளமாய்...

    மிக நன்று...தொடருங்கள்....
    //

    பதிலளிநீக்கு
  8. மரணத்தைப் பயப்படுவோர்,
    'மரணம் மறுவுலக வாழ்வின்
    முன்பணம்' என்பதை மனதில்
    கொள்ளுபவர்கள் தவறு செய்யவும்
    பயப்படுவர். அந்நிலையில் உலகம்
    சுபிட்சம் எய்யும்.

    அர்த்தம் பொதியப்பெற்ற கவிதை.

    பதிலளிநீக்கு
  9. மரணத்தைப் பயப்படுவோர்,
    'மரணம் மறுவுலக வாழ்வின்
    முன்பணம்' என்பதை மனதில்
    கொள்ளுபவர்கள் தவறு செய்யவும்
    பயப்படுவர். அந்நிலையில் உலகம்
    சுபிட்சம் எய்யும்.

    அர்த்தம் பொதியப்பெற்ற கவிதை.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது