நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முகமூடி

அன்பென்ற அருமருந்து
அகிலமெங்கும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தும்
அதையள்ளி
அருந்த மறந்து

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுமினம்
பணக்காரனென்றால்
ஒருமுகம்
பாமரனென்றால்
ஒருமுகமென
பிரித்துப் பார்க்கும்


முகமூடி
மனிதகுலத்தையெண்ணி
மனத்துக்குள்
மிரள்கிறேன்
மனிதமிதுவோவென
மலைக்கிறேன்


தேடித் தேடிப்பார்க்கிறேன்
தெளிவான முகங்களையும்
தெளிவான மனங்களையும்
அதிலெது
தெளிவென்றுதான்
இன்றுவரை புரியவில்லை
சிலநேரம்
என்னையும் விளங்கவில்லை

அத்தனை
முகங்களுக்குள்ளும்
மனங்களுக்குள்ளும்

"அன்பும் உண்டு.
ஆணவமும் உண்டு.

"ஆதங்கமும் உண்டு
ஆன்மீகமும் உண்டு.

"ஆற்றாமையும் உண்டு
ஆளுமையும் உண்டு.

"அதிகாரமும் உண்டு
அனுசரணையும் உண்டு.

’ஆதலால்’

எந்த மனிதருக்குள்
எது இருந்தபோதிலும்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
இருதயத்தின் கூட்டுக்குள்
எள்ளளவும்
பிறருக்கின்னல்தராமல்

மனம் பொருந்திய அன்போடு
மாசில்லா நற்குணத்தோடு
மனிதகுலத்தோடு
முகமூடியணியாத
மனிதர்களாய்
வாழ்ந்திருப்போம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது