நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கண்ணைத் தைக்கும் கல்வி



காசிருக்குமிடத்தில்
காணிக்கையாய்
காலுக்கடியில்!
காசில்லாதோரிடத்தில்
கானலாய்
கண்ணெதிரில்!

லட்சங்களின் பிடியில்
தோற்காத லச்சியங்கள்
அவலச்சனமாய் பரணிக்கடியில்
கோடிகளில் பிடியில்
கோலாகல பட்டங்கள்
லட்சனமாய் ஆணிக்கடியில்!

கண்போன்ற கல்வியெங்கும்
காசிருந்தால்தான் வெற்றி
காசற்றவனின் கல்வியிங்கே
காற்றில் பறக்கும் தூசி!
கல்வியை காசாக்கிபார்க்கும் ருசி
காலப்போக்கில் மனிதன்
கண்ணைத் தைக்கும் ஊசி!

கட்டு கட்டா நோட்டக்காட்டி
கல்வி கண்ணக்கட்டி
கலர்கலர் கனவுகாணும்
வயிற்றில் நெருப்பைக்கொட்டி
பட்டப்படிப்பு படிச்சி முடிக்க
வயல்வரப்ப வித்துக்கட்டி
பதபதைக்க வைக்குதே கல்வி
பச்சோந்தி பவிசு காட்டி!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கல்விக்கூடங்களின் அணிவகுப்பு
கல்வியைவிட காகித
காசுக்குத்தானே அங்கே அதிகமதிப்பு
கல்வி உண்டியலில்
கணக்கிலாமல் பணத்தைக்கொட்டி
கற்க்கும் கல்வி அத்தனையும்
மீண்டும்
ஆசை காசை நோக்கி...

”குவைத்தில் வெளியாகும் ”வசந்தம்” மாத இதழில் வெளியான கவிதை”

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது